Published:Updated:

``பழிவாங்குவதில் கருணாநிதியைவிடவும் ஒருபடி மேலாகச் சென்றுகொண்டிருக்கிறார் ஸ்டாலின்!"- சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

`மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை இந்த அரசு ரத்து செய்திருக்கிறது' - சி.வி. சண்முகம்

``பழிவாங்குவதில் கருணாநிதியைவிடவும் ஒருபடி மேலாகச் சென்றுகொண்டிருக்கிறார் ஸ்டாலின்!"- சி.வி.சண்முகம்

`மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை இந்த அரசு ரத்து செய்திருக்கிறது' - சி.வி. சண்முகம்

Published:Updated:
சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க-வினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க தலைவர்கள் ஆளுங்கட்சிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பழிவாங்கும், நடவடிக்கையினால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இரண்டு முறை சோதனை நடத்தி எந்த ஆவணங்களும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக சோதனை என்ற பெயரில் இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கிறது.

ஸ்டாலின் - கருணாநிதி
ஸ்டாலின் - கருணாநிதி

கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை கடைபிடித்தாரோ, அதைவிட ஒரு படி மேலாகச் சென்று இன்று அ.தி.மு.க-வின் முன்னணி தலைவர்கள்மீது வழக்குகளைப் போட்டு அழித்துவிடலாம் என்று தப்பான கணக்கு போட்டு கொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி கொடுத்த பல்வேறு திட்டங்களை இந்த அரசு ரத்து செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக பால் விலை, அத்தியாவசிய பொருள்களின் விலை மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்திருக்கிறது. நவீன முறையில் இந்த நாட்டை ஒரு குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது'' என்றார்.