Published:Updated:

சி.வி.சண்முகம் அட்டாக்ஸ்!

சி.வி.சண்முகம் அட்டாக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சி.வி.சண்முகம் அட்டாக்ஸ்!

நம் தோல்விக்கு முக்கியக் காரணம் நம்முடன் கூட்டணியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிதான்!”

சி.வி.சண்முகம் அட்டாக்ஸ்!

நம் தோல்விக்கு முக்கியக் காரணம் நம்முடன் கூட்டணியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிதான்!”

Published:Updated:
சி.வி.சண்முகம் அட்டாக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சி.வி.சண்முகம் அட்டாக்ஸ்!

அ.தி.மு.க-வில் ‘சவுண்ட் பார்ட்டி’ என்றால் நம் நினைவுக்கு வருவது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்தான். தனது அரசியல் எதிரிகளை வார்த்தைகளால் பிறாண்டி, ரத்தக்களறி ஆக்கிவிடுவார். இப்படிப் பேசிப் பேசியே பலமுறை வம்பு வழக்குகளில் சிக்கினாலும், மனிதர் அசர மாட்டார். சமீபத்தில்கூட விழுப்புரம் மாவட்ட காவல்துறை பற்றி அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சண்முகம்மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ‘கோபக்கார’ சண்முகத்தின் சமீபகால மற்றும் கடந்தகால அட்டாக்ஸ் இதோ...

“தி.மு.க-வுக்கு தேர்தல் ஏஜென்ட்டாகச் செயல்படுகிறது தேர்தல் ஆணையம். தி.மு.க-வுக்கு ஆர்மியாகச் செயல்படுகிறது தமிழக காவல்துறை!”

“தமிழக அரசு காவல்துறையை ஏவல்துறையாகச் செயல்படுத்துகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது இருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சட்டையைக் கழற்றுவோம்!”

சி.வி.சண்முகம் அட்டாக்ஸ்!

(தி.மு.க-வினரைச் சுட்டிக்காட்டி) “ஆம்பளையா இருந்தா வாங்கடா... நான் இங்கேயே 12 மணி வரை இருக்கேன்... வாங்க..!”

“ஆளும் தி.மு.க-வின் மன்னராட்சிக் குடும்பத்தில், மன்னனுக்குப் பின்பு இளவரசன் பட்டம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற விதியின்படி, கருணாநிதி குடும்பம் மட்டும்தான் பதவியில் அமர்கிறார்கள்!”

“ `அரசின் மீது அவதூறு பரப்புகிறார்’ என்று சொல்லி மாரிதாஸைக் கைதுசெய்கிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கைதுசெய்து பாருங்கள்!”

“சிறுபான்மையினர் ஓட்டுகளை நாம் முழுமையாக இழந்துவிட்டோம். நம் தோல்விக்கு முக்கியக் காரணம் நம்முடன் கூட்டணியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிதான்!”

(கூட்டணியிலிருந்து பா.ஜ.க விலகியதைக் குறிப்பிட்டு) “அ.தி.மு.க ஒரு வாரமாக உற்சாகமாக இருக்கிறது. பெரிய பாரம் நம்மைவிட்டுக் குறைந்துவிட்டது. யாரோ செய்த தவற்றுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய கடமையில் இருந்தோம். இப்போது அது இல்லை... விலகிவிட்டது. அந்தப் பழியிலிருந்து நாம் விலகிவிட்டோம். தொண்டர்களிலிருந்து தலைவர்கள் வரை உற்சாகமாக, தெம்பாக, நம்பிக்கையாக இருக்கிறோம்!”

“டி.டி.வி.தினகரனின் குலத்தொழில் ஊத்திக்கொடுப்பதுதான். ஊத்திக்கொடுத்து, ஊத்திக்கொடுத்து குடியைக் கெடுத்தனர். கூவத்தூரிலும் இப்படித்தான் ஊத்திக்கொடுத்தனர்!”

(சசிகலா குடும்பத்தைக் குறிப்பிட்டு) “ஒரு குடும்பம் மொத்தமும் அங்கு தங்கியிருந்து, ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு இட்லியையும் தோசையையும் சாப்பிட்டிருக்கிறார்கள் என்றால், இவர்கள் அம்மாவுக்கு மருத்துவம் பார்த்தார்களா அல்லது அவர்களின் உள்நோக்கம் என்ன?”

(கூட்டத்தில் இவருக்கு எதிராக ஒருவர் பேசியபோது...) “போடா... போடா... உன்னை மாதிரி ஆயிரம் பேரை பார்த்திருக்கேன். உன் பொன்முடியை வரச்சொல்றா டேய்!”

“விமர்சனங்களைச் சகித்துக்கொள்ள முடியாத, துப்பில்லாத, வெட்கம் கெட்டவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்!”

“தி.மு.க கொள்ளைக்காரக் கட்சி. தி.மு.க பெண்களை அவதூறாகப் பேசும் கட்சி. மதங்களைத் தவறாகப் பேசும் கட்சி. சுயநலவாதக் கட்சி... குடும்பக் கட்சி!”

சி.வி.சண்முகம் அட்டாக்ஸ்!

“பழனிசாமியும் நானும் தமிழகத்தின் பூர்வீகக் குடிகள். நாங்கள் உண்மையான தமிழர்கள். ஸ்டாலினைப்போல வந்தேறிகள் இல்லை. பிழைப்புக்காகத் தமிழ் பேசும் போலித் தமிழர்கள் அல்ல!”

“சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய டி.ஜி.பி சைலேந்திர பாபு தினமும் சைக்கிள்தான் ஓட்டிக்கொண்டிருக்கிறார்!”

(ஸ்டாலினைக் குறிப்பிட்டு) வீட்டிலிருந்து மேக்கப் போட்டுக்கொண்டு பொம்மை போன்று தலைமைச் செயலகம் வந்து ஏசி-யில் உட்கார்ந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்று தூங்கிவிடுவார்!”

“ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வதைப்போல மீண்டும் அ.தி.மு.க-வைக் கைப்பற்றி கொள்ளையடிக்கலாம் என சசிகலா திட்டம் போடுகிறார்!”

“தி.மு.க அமைச்சர்கள் யாரும் கோட்டைக்குச் செல்வதில்லை. அவர்கள் அனைவரும் ஸ்டாலின் வீட்டு வேலைகளைத்தான் செய்கிறார்கள்!”

“தி.மு.க-வில் வேறு யாராவது முதல்வராக நினைத்தால், கருணாநிதி ஆவி கனவில் வந்து கொன்றுவிடும்!”

(சசிகலாவைச் சுட்டிக்காட்டி) ``தான் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையே காப்பாற்ற முடியாதவர்... அ.தி.மு.க-வைக் கைப்பற்ற நினைப்பதா?”

(தினகரனைச் சுட்டிக்காட்டி) “மைக்கை நீட்டினா சினிமா வசனம் பேசுவதுதான் அவரோட வேலை!”

“கருவாடுகூட மீனாகிவிடலாம். ஆனால், சசிகலா ஒருபோதும் அ.தி.மு.க-வில் உறுப்பினர்கூட ஆக முடியாது!”

“தினகரன் ஜெயில்ல களி தின்ன பய...”

“தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறைக்கு மூளை போச்சு!”

“இப்போ லஞ்ச ஒழிப்புத்துறையில் இருப்பவர் யார்? நேத்து வரைக்கும் காவல்துறையில் வேலை செய்து கொண்டிருந்தவர்... திருட்டுப் பயலிடம் கை நீட்டியவர்... இம்மாரல் ஆக்டிவிட்டீஸில் ஈடுபட்டவர். நீங்களாம் உத்தமர்களா... காந்திக்குப் பக்கத்து வீடா... நீங்களாம் கை நீட்டலையா?”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism