Published:Updated:

"அணிலை தான் கேட்கணும்" - மின்வெட்டு குறித்து கேள்விக்கு கலாய்த்த சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

"ஊழல் செய்வதற்காக, செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்ற மின்வெட்டு இது" -முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கு

"அணிலை தான் கேட்கணும்" - மின்வெட்டு குறித்து கேள்விக்கு கலாய்த்த சி.வி.சண்முகம்

"ஊழல் செய்வதற்காக, செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்ற மின்வெட்டு இது" -முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கு

Published:Updated:
சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

அதிமுக உட்கட்சி தேர்தலில், விழுப்புரம் மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அதனைத் தொடர்ந்து நேற்று (22.04.2022) செய்தியாளர்களை sசந்தித்து பேசிய அவர், "69% இட ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது என்றால், சாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட குலசேகரன் ஆணையம் கடந்த 1.5 வருடமாக செயல்பட்டிருந்தால் நமக்கு விவரங்கள் கிடைத்திருக்கும். 69% இட ஒதுக்கீடுக்கான இறுதி விசாரணை வரும் போது, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து '69% இட ஒதுக்கீடு செல்லும்' என உறுதியாக வாதாடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

ஆனால், சமூக நீதியை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் இந்த திமுக அரசு... வாயால் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் யாருக்கும் சமூக நீதி கிடைக்காது. குலசேகரன் ஆணயத்தை திமுக முடக்கியதற்கான காரணம் என்ன? நோக்கம் என்ன? ஒரு பக்கம், "இட ஒதுக்கீட்டை மீட்போம்" என்கிறீர்கள்... மறுபக்கம், ஆணையத்தை முடக்குகிறார்கள். 'பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல்' என்று திமுக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. இன்றும் ஒரு நாடகம் நடத்தியுள்ளார் முதலமைச்சர். 10.5% இட ஒதுக்கீடு குறித்து ஒரு கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அதில் முன்னாள் மூத்த சட்ட அமைச்சராக இருந்தவர் அழைக்கப்படவில்லை. சிவசந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றோரும் அழைக்கப்படவில்லை. ஏதோ மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு கூட்டம் கூட்டி, போட்டோ எடுத்து போட்டுவிட்டார்கள். என்ன முடிவு எடுத்தீர்கள்... என்றால் எதுவும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேவையாக இருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு ஏன் திமுக அரசு தயங்குகிறது. அதன் உள்நோக்கம் என்ன? காரணம் என்ன? பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு தற்போது 19% இட ஒதுக்கீடு உள்ளது. சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் அது 22 சதவீதமாக கிடைக்கும். அதைக் கேட்க வேண்டிய திருமாவளவன் ஏன் பேச மறுக்கிறார்! கி.வீரமணி ஏன் பேச மறுக்கிறார். சமூகநீதி பற்றி பேசும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஏன் அதைப் பற்றி பேசாமல் மௌனமாக இருக்கிறார். சாதிவாரியான கணக்கெடுப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற ஏன் அவருக்கு தைரியம் இல்லை!

ஸ்டாலின்
ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கை, நீட்டை எதிர்ப்பதாக பேசும் ஸ்டாலின், இதில் மட்டும் ஏன் மத்திய அரசுடன் கைகோர்த்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் 94% உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூக மக்களுக்கு சமமான வாய்ப்பு கிடைப்பதற்கு இந்த அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது. யாரை காப்பதற்காக இப்படி செய்கிறது? 69% இட ஒதுக்கீடு காக்கப்பட வேண்டும் என்றால் இந்த முதலமைச்சர் தூங்குவதை நிறுத்திவிட்டு, நடிப்பதை நிறுத்திவிட்டு குலசேகரன் ஆணையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், "மின்வெட்டு ஏற்படுவதற்கு... அணிலை தான் கேட்கணும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 2-வது மாதமே மின்வெட்டு வந்தது. இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் முதலமைச்சரின் ஆளுமையில், மின்வெட்டு வருவதற்கு காரணம் என்ன? இது செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்ற மின்வெட்டு. 2006 - 2011 வரை திமுக செய்த ஊழலை, தற்போது மீண்டும் செய்ய பார்க்கிறார்கள். ஒன்று... மின்வெட்டு என்ற பெயரின் மூலம், தனியார் இடத்தில் அதிக தொகைக்கு மின்சாரம் வாங்கி, கொள்ளையடிப்பது. இல்லையெனில், தரமற்ற நிலக்கரிகளை வாங்கி கொள்ளையடிப்பதற்காக இப்படி செய்கிறது திமுக. அப்படியும் இல்லை என்றால், இதை கையாலாகாத, திறமையற்ற அரசு என்று தான் கூற வேண்டும்." என்றார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

மேலும், நீங்கள் கட்சியில் மாநில பொறுப்பு கேட்பதாக கூறப்படுகிறதே... என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த சி.வி.சண்முகம், "இருக்கிற பொறுப்புக்கே வேலையில்லை" என்று புன்னகைத்தபடி கடந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism