Published:Updated:

``அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை ஸ்டாலின்’’ - உண்ணாவிரதத்தில் கொதித்த சி.வி.சண்முகம் கைது

சி.வி.சண்முகம்

திமுக அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக-வினரை காவல்துறை கைதுசெய்துள்ளனர்.

``அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை ஸ்டாலின்’’ - உண்ணாவிரதத்தில் கொதித்த சி.வி.சண்முகம் கைது

திமுக அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக-வினரை காவல்துறை கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
சி.வி.சண்முகம்

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தடைசெய்யப்பட்டதைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வளர்மதியும் கலந்துகொண்டார்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், "இந்தியாவில், தானே சிறந்த முதலமைச்சர் என தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் இந்த முதலமைச்சரால், தாலிக்குத் தங்கம் திட்டத்தை ஏன் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. பணம் இல்லை என்பது காரணமில்லை... அது அம்மாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால்தான். 'பெண்கள், அதிமுக-வின் வாக்குவங்கி. எனவே அந்தப் பெண்களுக்கு வழங்கக் கூடாது' என்ற வன்மத்தை மனதில் வைத்துக்கொண்டு பெண்களின் தாலியைப் பறித்த கட்சி திமுக.

உண்ணாவிரதப் போராட்டத்தில் சி.வி.சண்முகம்
உண்ணாவிரதப் போராட்டத்தில் சி.வி.சண்முகம்

இந்த ஆட்சியில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு என்னவென்றால், கூட்டுப் பாலியல் வன்கொடுமை. தினந்தோறும் செய்தித்தாள்களைப் பார்த்தால் பாலியல் வன்கொடுமைச் செய்திகளே அதிகம் இருக்கின்றன. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்தபோது வாய்கிழியப் பேசிய வைகோ, திருமாவளவன் உட்பட திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் இப்போது எங்கே போயின. இவர்களெல்லாம் திமுக-வின் கைக்கூலிகள். அதனால் திமுக-வின் அராஜகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் இருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருணாநிதி முதலமைச்சராக இருந்த 2008-ம் ஆண்டுதான் சொத்து வரி ஏற்றப்பட்டது. அதேபோல இப்போது 150 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆக, அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை ஸ்டாலின். ஒருகாலத்தில் தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்துக்கு இணையான காவல்துறை என்பார்கள் மக்கள். ஆனால், இன்று சிரிப்பு போலீஸ் மாதிரி ஆகிவிட்டது. காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் திறமையானவர்கள்தான். ஆனால், திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தால் தமிழக காவல்துறை ஒரு சிரிப்பு போலீஸாக மாறியிருக்கிறது" என்றார் காட்டமாக.

கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சி.வி.சண்முகம்
கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சி.வி.சண்முகம்

காலை 8 மணி முதல் நடைபெற்றுவந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில், மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நேரம் 12 மணியைக் கடந்தவுடன், சி.வி.சண்முகத்திடம் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அதிமுக-வினர் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்ததால் மாவட்ட காவல்துறையினர் சி.வி.சண்முகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்களை அதிரடியாகக் கைதுசெய்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சி.வி.சண்முகத்தை, காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றும்போது கட்சித் தொண்டர்கள் சிலர் சாலையில் படுத்தும், வாகனத்தின் மீது ஏறியும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்தும் ஸ்தம்பித்துப்போனது.

கைது
கைது

காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு அங்கிருந்து அழைத்துவரப்பட்ட சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக கட்சியினர், விழுப்புரம் சோலை மஹாலில் தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.