Published:Updated:

"கோவை விவகாரத்தை சிந்திக்காமல், நயன்தாரா விவகாரத்தில் கவனம் செலுத்துகிறது அரசு!" - சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் - விழுப்புரம் ( தே.சிலம்பரசன் )

"தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தீவிரவாதம் தலை தூக்கிக்கொண்டுள்ளது. இதற்கு, கோவை விவகாரம் ஒரு முக்கிய எடுத்துக்காட்டு" - சொல்கிறார் சி.வி.சண்முகம்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள அகூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அ.தி.மு.க-வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தவர், "தற்போது நடைபெற்று வரும் அரசு... செயல்படாத அரசு, திறமையற்ற அரசு, சட்டம் - ஒழுங்கு சுத்தமாக சீரழிந்துவிட்டது என்று நாங்கள் பலமுறை சொல்லி இருக்கிறோம். செயல்படாத ஒரு முதலமைச்சரை வைத்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

சி.வி.சண்முகம் பேட்டி
சி.வி.சண்முகம் பேட்டி

கோவை சம்பவத்தை பற்றி இன்றைக்கு வாய் திறக்க மறுக்கிறார், தயங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தீவிரவாதம் தலைதூக்கிக் கொண்டுள்ளது. இதற்கு கோவை சம்பவம் ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. ஆனால் அதைப் பற்றி சிந்திக்காமல், மக்களின் அச்சத்தை போக்காமல், இந்த அரசு முன்னுக்கு முரணாக பேசிக்கொண்டு வருகிறது. இதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம்

கோவை விவகாரம் தொடர்பாக மக்களின் அச்சத்தை போக்குவதற்கு பதிலாக... நயன்தாரா சட்டத்திற்கு உட்பட்டு குழந்தை பெற்றாரா? என்பதில் தான் அதிதீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது இந்த அரசு" என்றார் காட்டமாக.