Published:Updated:

``அதிமுக-வுக்கு துரோகம் இழைத்தால்... அநாதையாகப் போவார்கள்" - சாபம்விட்ட சி.வி.சண்முகம்!

சி.வி.சண்முகம்

"'தானும், தன் குடும்பமும் மட்டும்தான் பிழைக்க வேண்டும். வேறு யாரும் நல்லா இருக்கக் கூடாது' என்ற நல்ல நோக்கத்தில் அதிமுக இயக்கத்தை அழிப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார்." - ஓ.பன்னீர்செல்வத்தைச் சாடிய சி.வி.சண்முகம்.

``அதிமுக-வுக்கு துரோகம் இழைத்தால்... அநாதையாகப் போவார்கள்" - சாபம்விட்ட சி.வி.சண்முகம்!

"'தானும், தன் குடும்பமும் மட்டும்தான் பிழைக்க வேண்டும். வேறு யாரும் நல்லா இருக்கக் கூடாது' என்ற நல்ல நோக்கத்தில் அதிமுக இயக்கத்தை அழிப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார்." - ஓ.பன்னீர்செல்வத்தைச் சாடிய சி.வி.சண்முகம்.

Published:Updated:
சி.வி.சண்முகம்

அ.தி.மு.க-வின் 51-வது ஆண்டு தொடக்கவிழாவைக் கொண்டாடுவது குறித்த விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைமையேற்றுப் பேசிய விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், ``அதிமுக-வின் அதிகபட்ச பதவி, கட்சியின் தலைவர் பதவி. தமிழகத்தில் உச்சபட்ச பதவி, முதலமைச்சர் பதவி. இவை இரண்டையும் ஆண்டு அனுபவித்த ஒருவர்... இன்றைக்கு இந்த இயக்கத்தைக் கூண்டோடு அழிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.

சி.வி.சண்முகம் - விழுப்புரம்
சி.வி.சண்முகம் - விழுப்புரம்

1972-ல் யாரை எதிர்த்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டது... கருணாநிதி எனும் தீயசக்தியை அழிக்க வேண்டும். அந்தக் குடும்பத்தை நாட்டைவிட்டே விரட்டியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இயக்கம்தான் அ.தி.மு.க. அம்மா, இன்று நம்மோடு இருந்திருப்பார்கள். அவர்கள் இல்லாமல் போவதற்குக் காரணமான தி.மு.க-வின் கருணாநிதி, ஸ்டாலினோடு நேரடி உறவை வைத்துக்கொண்டு... அ.தி.மு.க-வின் வேட்டியைக் கட்டிக்கொண்டு... `நான்தான் அதிமுக, நான்தான் அதிமுக தலைவர்’ எனச் சொல்லிக்கொண்டு... திமுக-வுடன் இணைந்துகொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, யாரெல்லாம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு... தானும், தன் குடும்பமும் மட்டும்தான் பிழைக்க வேண்டும், மீதி யாரும் நல்லாயிருக்கக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் அதிமுக இயக்கத்தை அழிப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார்.  எம்.ஜி.ஆர் இருக்கும்போதே இந்த இயக்கம் துரோகிகளைப் பார்த்துவிட்டது. நாஞ்சில் மனோகரனிலிருந்து... இன்று திமுக-விலிருந்து ராஜினாமா செய்திருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன் வரை அதிமுக-விலிருந்து போனவர்கள்தான். சுப்புலட்சுமி, 1977-ல் நம் தலைவர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் தோல்வியடைந்த பிறகு, முதலில் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் நாஞ்சில் மனோகரனும், சுப்புலட்சுமி ஜெகதீசனும்தான். இந்த இயக்கத்திலிருந்து போன முதல் கருங்காலிகள். அதன் பிறகு, எஸ்.டி.சோமசுந்தரம் போனார்.

அவர் சொல்கிறார், "தொண்டர்கள் என் பக்கம்" என்று. ஒருவேளை திமுக தொண்டர்களைச் சொல்கிறாரா என்று தெரியவில்லை.

 ஓ.பி.எஸ், ஸ்டாலின்
ஓ.பி.எஸ், ஸ்டாலின்

அதேபோலத்தான் எஸ்.டி.எஸ்-ஸும் சொன்னார். அவராவது பரவாயில்லை, நாலு பேருக்கு நல்லது செய்திருக்கிறார். அவரால் பலபேர் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரிகூட ஆகியிருக்கிறார்கள். அது எல்லோருக்கும் தெரியும், மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், அந்த நான்கு பேர் தன்னுடன் இருப்பதாலேயே கட்சி தனக்கே சொந்தம் என மாயக் கணக்கு போட்டார். ஆனால், கடைசியில் அவருடைய சாவில் 50 பேர்கூட இல்லை. நல்ல தலைவர், அதிமுக-வுகாக உழைத்தவர் அவர்.  ஆனால் கடைசியில் அவருடைய நிலைமை என்ன... அதிமுக-வுக்கு துரோகம் இழைப்பவர்கள் நிலை, கடைசியில் இப்படித்தான் ஆகும். அதிமுக-வுக்கு துரோகம் இழைப்பவர்கள்... கடைசியில் அநாதையாகத்தான் போவார்கள்" என்றார் காட்டமாக.