Published:Updated:

``ஸ்டாலின் ஒரு பொம்மை; அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது!" - சி.வி.சண்முகம் காட்டம்

சி.வி.சண்முகம்

`தமிழகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டிய டி.ஜி.பி, ஒரு திசையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் மற்றொரு திசையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.' - சி.வி.சண்முகம்

``ஸ்டாலின் ஒரு பொம்மை; அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது!" - சி.வி.சண்முகம் காட்டம்

`தமிழகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டிய டி.ஜி.பி, ஒரு திசையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் மற்றொரு திசையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.' - சி.வி.சண்முகம்

Published:Updated:
சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள நல்லாளம் கிராமத்தில், நேற்று இரவு அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று 16 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள்ளாகவே மக்களின் நம்பிக்கையை இழந்த அரசாக இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. யாருக்காக ஸ்டாலின் அரசு நடந்து கொண்டிருக்கிறது. நாட்டில் என்ன நடக்கிறது என்றாவது ஸ்டாலினுக்கு தெரியுமா? எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை மாதிரி வந்து போய்க்கொண்டு இருக்கிறார். அவர் ஒரு பொம்மைதான்.

முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம்
முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம்

சொத்துவரி, பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்ச நாள்களில் பேருந்து கட்டணத்தையும் ஏற்றப்போகிறார்கள். அதுமட்டுமின்றி, பேருந்துகளை தனியாருக்கு கொடுக்கும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மின்சாரக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இனி வரும் ஒவ்வோர் ஆண்டும் 6% மின்கட்டணம் தானாக உயரும். இலவச மின்சாரமும் இந்த ஆட்சியில் ரத்து செய்யப்படவிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் என்னதான் நடக்கிறது... தினமும் டி.வி பார்த்தால், பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை என செய்திகள்தான் வருகின்றன. இதுவரை தமிழகத்தில் இந்த மாதிரி கேள்விப்பட்டதே இல்லை. பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் தினந்தோறும் கூட்டுப் பாலியல் கொடுமை நடைபெறுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ரேஷன் அரிசியில்தான் முதலில் கைவைப்பார்கள். எங்களுடைய அம்மா ஆட்சியில் அரிசி பளபளவென இருந்தது. இன்று வரும் ரேஷன் அரிசியை சாப்பிட முடியுமா? இன்னும் சூப்பர் அரிசி எல்லாம் வரும், அதை நாய்கள்கூட முகர்ந்து பார்க்காது. பொங்கல் தொகுப்பு கொடுத்தார்களே, அதில் கொடுக்கப்பட்ட வெல்லம் இருக்கே... அந்த மாதிரியான வெல்லத்தை அமெரிக்காவில் எந்த விஞ்ஞானியும் கண்டுபிடித்திருக்க மாட்டான். அந்த பொங்கல் தொகுப்புகளை வழங்கியதில் ஸ்டாலின் 1,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார். அதற்காக நாங்கள் வழக்கு போட்டிருக்கிறோம். ஐ.பெரியசாமி, சக்கரபாணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிகபட்சம் வாய்தா வாங்குவீர்கள். எத்தனை நாள் வாய்தா வாங்குவீர்கள் என பார்க்கிறேன். நாங்க அவசரப்பட மாட்டோம், உங்களை லாக் பண்ண வேண்டிய சமயத்தில் பண்ணுவோம்.

மரக்காணம் அருகே நடந்த கூட்டத்தில் சி.வி.சண்முகம்
மரக்காணம் அருகே நடந்த கூட்டத்தில் சி.வி.சண்முகம்

எதுக்கு பார்த்தாலும் திராவிட மாடலாம். என்ன திராவிட மாடல்? இங்கு சோறுக்கு வழி இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், உன்னுடைய ஒரே குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடலா? திண்டிவனம் - மரக்காணம் சாலை போடுகிறார்களே, அதில் சாலைக்கு நடுவிலேயே மரங்களும், மின் கம்பங்களும் இருக்கின்றன. வாகன ஓட்டிகள் அதில் முட்டிக்கொள்வதா... கண்டக்டராக இருந்தவர்களை மந்திரியாக போட்டால் அப்படிதான் இருக்கும். அவருக்கு வாங்கி வாங்கி பையில் போட்டுதான் பழக்கம். 

மதுரையில் பத்திரப்பதிவு துறை அமைச்சரின் வீட்டு திருமணம் நடந்தது. நானும் பத்திரப்பதிவு துறையில் மூன்று முறை இருந்திருக்கிறேன். ஆனால், இவ்வளவு பணம் கொள்ளை அடிக்கலாம் என்பதை இவரைப் பார்த்துதான் தெரிகிறது. 5,000 ஆடுகள், கோழிகள், மீன் என பிரமாண்ட சாப்பாடு ஏற்பாடு செய்து, 100 ஸ்வைப்பிங் இயந்திரம் வைத்து மொய் வாங்கி இருக்கிறார். சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேலே வசூலாகி இருக்கிறது. எங்கிருந்து வந்தது அந்தப் பணம். மதுரையை ஆண்ட நாயக்கரே இருந்திருந்தாலும் தூக்குப்போட்டு இறந்திருப்பார். அவரால்கூட இப்படி ஒரு திருமணத்தை நடத்தியிருக்க முடியாது. இந்த ஓராண்டு காலத்தில் தி.மு.க அடித்த கொள்ளைகளுக்கு இது ஒரு உதாரணம்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் திரைப்படத்தில் வருவதுபோல மொய் விருந்து வைக்கிறார். அவருக்கு ஒரு கோடி வசூல் ஆகிறது. யாராவது தூக்கி கொடுப்பார்களா அவ்வளவு பணத்தை... இவர்கள் கொள்ளையடித்த பணத்தை மொய் விருந்து என்ற பெயரில் வெள்ளையாக்கி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டிய டி.ஜி.பி, ஒரு திசையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் மற்றொரு திசையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் அவர்களே, உங்க அப்பா கருணாநிதிக்கே நாங்கள் தண்ணீ கொடுத்திருக்கிறோம். ஆனால், உங்க அப்பாவின் கால் தூசுக்குகூட நீங்கள் போக மாட்டீர்கள். போலீஸ் பிள்ளை திருடன்; வாத்தியார் மகன் மக்கு; கருணாநிதி பிள்ளை மண்டு, மண்ணு. அ.தி.மு.க-விலிருந்த எட்டப்பர்களை வைத்து அ.தி.மு.க-வை முடக்கிவிடலாம், ஒழித்துவிடலாம் என நினைக்காதீர்கள். ஒரு பன்னீர்செல்வம் அல்ல, ஓராயிரம் பன்னீர்செல்வம் வந்தாலும் அ.தி.மு.க அனைத்தையும் சந்திக்கும், நிலைத்திருக்கும். ஆனால் பன்னீர் திமுக-வில் இருப்பாரா?, பாஜக-வில் இருப்பாரா? இல்லை சந்நியாசம் வாங்கிக்கொண்டு போய்விடுவாரா என்று எங்களுக்குத் தெரியாது.

வேஷம்தான் போடுவார். ஆனால், அவர் சன்னியாசி கிடையாது. அப்பனும், மகனும் பயங்கரமான ஆட்கள். ஆகவே, இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் அஞ்சும் கட்சி அ.தி.மு.க அல்ல.

ஓ.பி.எஸ் - ஸ்டாலின்
ஓ.பி.எஸ் - ஸ்டாலின்

தி.மு.க-வில் ஒரு வைக்கோ அல்ல, நான்கைந்து வைக்கோகூட வரலாம். உங்களுடைய மகனின் பட்டாபிஷேகம் செய்யும் நாளன்று இருக்கிறது ராஜா... உங்களுடைய கட்சிக்கு. அ.தி.மு.க-விற்கு செய்த துரோகம்... எட்டப்பர் ஓ.பி.எஸை வைத்து அ.தி.மு.க அலுவலகத்தை உடைத்து, மூடியதற்கான பதிலை நீங்கள் ஒருநாள் சொல்லியே ஆகவேண்டும். உங்களுக்கும் அறிவாலயம் இருக்கிறது இல்லையா வாங்க பார்த்துக்கொள்வோம்" என்றார் காட்டமாக.