Published:Updated:

``அனிதாவின் ஆத்மாகூட திமுக-வை மன்னிக்காது" - நீட் தேர்வு விவகாரத்தில் சி.வி.சண்முகம் ஆவேசம்

சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

"நீட் தேர்வைக் கொண்டு வந்து பாவத்தைச் செய்தது காங்கிரஸ் - திமுக கூட்டணிதான். தமிழ், தமிழர்கள், தமிழர்கள் நலன் பற்றிப் பேசுவதற்கு திமுக-வுக்கு எவ்வித அருகதையும் இல்லை."

``அனிதாவின் ஆத்மாகூட திமுக-வை மன்னிக்காது" - நீட் தேர்வு விவகாரத்தில் சி.வி.சண்முகம் ஆவேசம்

"நீட் தேர்வைக் கொண்டு வந்து பாவத்தைச் செய்தது காங்கிரஸ் - திமுக கூட்டணிதான். தமிழ், தமிழர்கள், தமிழர்கள் நலன் பற்றிப் பேசுவதற்கு திமுக-வுக்கு எவ்வித அருகதையும் இல்லை."

Published:Updated:
சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு, அந்த மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியிருந்தார் ஆளுநர் ரவி. அதிலிருந்து மீண்டும் நீட் தேர்வு விவகாரம் பெரும் பேசுபொருளுக்கு உள்ளானது.

இந்நிலையில் நேற்று (06.02.2022) மாலை விழுப்புரத்திலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ``தி.மு.க தனது தோல்வியை மறைப்பதற்காக, உண்மையை மறைத்து, பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அறிக்கை என்ற பெயரிலே, மூத்த அமைச்சர் துரைமுருகனும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அவர்களுடைய திருவாய் மலர்ந்து நீட் தேர்வுக்காகச் சில விளக்கங்களை கொடுத்திருக்கிறார்கள்.

நீட் தேர்வு குறித்து சி.வி.சண்முகம் பேட்டி
நீட் தேர்வு குறித்து சி.வி.சண்முகம் பேட்டி
தே.சிலம்பரசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீட் தேர்வைக் கொண்டு வந்ததற்கும், திமுக-வுக்கும் சம்பந்தமே இல்லாததுபோலவும், இதை ஏதோ அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கொண்டுவந்ததைப்போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். உண்மையை மக்களுக்குச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற எண்ணத்திலேயே தி.மு.க இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மாணவர்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு, அரசியல் செய்துகொண்டிருக்கிறது. நீட் தேர்வின் வரலாறு என்ன என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். நீட் தேர்வு, 12.10.2010-ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தது திமுக ஆதரவுடன் செயல்பட்ட காங்கிரஸ்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது, குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், தி.மு.க-வைச் சேர்ந்த காந்தி செல்வம்தான் இணை அமைச்சராகவும் இருந்தார்கள். ஒரு வருடத்துக்குள்ளாகவே இந்தத் தேர்வு முறையை எதிர்த்து சுமார் 80 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன, நம் தமிழகத்தில் அம்மா அரசு உட்பட. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே 2013-ம் ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு. ஆனால், 18.07.2013 அன்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளிக்கிறது. "நீட் தேர்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மாணவர்களை இரு பிரிவாகப் பிரிக்கிறது. நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதாயமாகவும், கிராமப்புற மாணவர்களுக்குப் பாதகமாகவும் இருக்கிறது" என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டு, நீட் தேர்வை ரத்து செய்கிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி
தமிழக முதல்வர் ஸ்டாலின் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இப்போது நாடாளுமன்றத்தில் முழங்கும் ராகுல் காந்தி, அப்போது என்ன செய்துகொண்டிருந்தார்? மாணவர்கள்மீது அக்கறை இருந்திருந்தால், அந்தத் தீர்ப்பை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஏன் அதைச் செய்யவில்லை? ஆனால், அதற்கு மாறாக திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்திலேயே சீராய்வு மனு தாக்கல் செய்கிறது. தைரியம் இருந்தால் நேரடியாக பதில் சொல்லுங்கள்! அதை விட்டுவிட்டு அலங்கார வார்த்தைகளைக் கூறி இந்த மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்காதீர்கள், தற்கொலைக்குத் தூண்டாதீர்கள். இவர்களின் மறுசீராய்வு மனுவுக்கு, ஐந்து நீதிபதிகள்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு 11.04.2016 அன்று தீர்ப்பு வழங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது என்னவென்றால், உச்ச நீதிமன்ற சரித்திரத்திலேயே... ஏற்கெனவே கொடுத்த தீர்ப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டு '2010ம் ஆண்டு நீட்தேர்வுக்காக வெளியிடப்பட்ட அரசாணை செல்லும்' எனச் சொல்கிறது. அதன்படி இந்தியா முழுவதும் நீட் தேர்வுதான் என்று இறுதித் தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. நீட் விஷயத்தில், ஆரம்பம் முதல் கடைசி வரை செயல்பட்டது திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசுதான். தீர்ப்பைத் தொடர்ந்து, மே மாதமே நீட் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவு போடுகிறார்கள். அனைத்து மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்றைய பாரத பிரதமர் தலைமையிலான மத்திய அரசு, ஓர் ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுத்து அவசரச் சட்டம் இயற்றியது. இதில் எங்கிருந்து அதிமுக-பாஜக வந்தது... இன்னும் கேட்டால் பாஜக நீட் முறையை எதிர்த்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

நீட் தேர்வைக் கொண்டு வந்து, பாவத்தைச் செய்தது திமுக-காங்கிரஸ் கூட்டணிதான். கருணாநிதி தேர்தலில் தோற்றால் சொல்வதுபோல, இந்த மக்களெல்லாம் எக்கேடு கெட்டால் உங்களுக்கென்ன..? 2ஜி வழக்கிலே கோடிகளில் கொள்ளை அடித்துக்கொண்டு, உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டீர்கள். அனிதாவிவுக்காக இவ்வளவு ஒப்பாரி வைக்கிறதே திமுக, அவர்களின் முகமூடி இதுதான். அனிதா-வின் ஆத்மாகூட திமுக-வை மன்னிக்காது. நீட் தேர்வு மூலம் உயிரிழந்துள்ள மாணவர்களின் சாவுக்கு முழுக்க முழுக்கக் காரணம் திமுக-வும் காங்கிரஸும்தான். அன்று திமுக இதை எதிர்த்து ஆட்சியைத் துறந்திருக்கலாம் இல்லையா... ஆனால், எங்களின் அம்மாவுடைய ஆட்சியிலே, வாஜ்பாய் தமிழக மக்களின் நலனுக்காகக் கொடுத்த நிபந்தனைகளை மீறியபோது, ஆதரவைத் திரும்பப் பெற்று அந்த அரசைத் துணிச்சலாகக் கீழே இறக்கியது அ.தி.மு.க. அந்த தைரியம் உங்களிடம் இருக்கிறதா? எங்களைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க-வுக்கு அருகதையே இல்லை.

நீட் மட்டுமல்ல, தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நாடகம். காவிரி விவசாயிகள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றது, கச்சத்தீவைத் தாரை வார்த்தது, முல்லைப்பெரியாறு அணை தொடர்பான தீர்ப்பை அமல்படுத்தத் தவறியது, இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு வழியை ஏற்படுத்தி காட்டிக்கொடுத்தது எல்லாமே தி.மு.க-தான். தமிழ், தமிழர்கள், தமிழர்கள் நலன் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க-வுக்கு எவ்வித அருகதையும் இல்லை.

சி.வி.சண்முகம் - விழுப்புரம்
சி.வி.சண்முகம் - விழுப்புரம்
தே.சிலம்பரசன்

காங்கிரஸுக்கும், திமுக-வுக்கும் நன்றாகவே தெரியும்... இந்த நீட் தேர்வு விவகாரம் சட்டபூர்வமாகத்தான் அணுகப்பட வேண்டும் என்று. ஆனால், இந்த விஷயத்தை மக்களிடையே உணர்ச்சிபூர்வமாகத் தூண்டி அரசியல் செய்வதற்குக் காரணம், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று. அதற்கு பாஜகமீது மக்களிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்ட வேண்டும். அதற்காக அவர்கள் வைத்துள்ள ஆயுதம்தான் நீட்.

இந்த தி.மு.க அரசு, மீண்டும் நீட் விலக்கு மசோதாவை இயற்றும்போதே 7.5% இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருப்பதற்கான வழியைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்" என்றார் ஆவேசமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism