Published:Updated:

நீட் மசோதா: `நாங்கள் இயற்றியதற்கும், நீங்கள் கொண்டுவந்ததற்கும் என்ன வித்தியாசம்?!’ - சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம்

"நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டுமென்றால், இதைச் சட்டபூர்வமாகத்தான் அணுகிப் பெற வேண்டும்" - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

நீட் மசோதா: `நாங்கள் இயற்றியதற்கும், நீங்கள் கொண்டுவந்ததற்கும் என்ன வித்தியாசம்?!’ - சி.வி.சண்முகம்

"நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டுமென்றால், இதைச் சட்டபூர்வமாகத்தான் அணுகிப் பெற வேண்டும்" - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

Published:Updated:
சி.வி.சண்முகம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. சுமார் ஆறு மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிந்த இந்த நீட் விலக்கு மசோதாவை, மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி.

இந்நிலையில், நேற்று (03.02.2022) மாலை விழுப்புரத்திலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ``அன்று சட்டமன்றத்தில்... நாங்கள் (திமுக) ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு மசோதாவை நீக்குவதற்கு எங்களிடம் திட்டம் இருக்கிறது, நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்ததும்... முதல் கையெழுத்து இந்த நீட்டை நீக்குவதுதான் எனத் தேர்தல் நேரத்திலும் சொன்னார்கள். அதன் அடிப்படையில் நீங்கள் ஒரு மசோதாவைக் கொண்டுவந்தீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்தியாளர்கள் சந்திப்பில் சி.வி.சண்முகம் - விழுப்புரம்
செய்தியாளர்கள் சந்திப்பில் சி.வி.சண்முகம் - விழுப்புரம்

நாங்கள் இயற்றிய மசோதாவுக்கும், நீங்கள் கொண்டுவந்திருக்கும் மசோதாவுக்கும் சட்டப்படி என்ன மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம்தான், 'ஏன் இந்த மசோதாவைக் கொண்டுவர வேண்டும்' என நீங்கள் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில், என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ... அதே காரணங்களைத்தான் நாங்களும் அன்று சொல்லியிருக்கிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவிலேயே உச்சபட்ச அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம், ``இந்தியா முழுவதும் இனி நீட் தேர்வுதான் கொண்டுவரப்பட வேண்டும்" எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனடிப்படையிலேயே சட்டம் இயற்றப்பட்டு, இன்றைக்கு இந்தியா முழுவதிலும் நீட் தேர்வு நடைபெற்றுவருகிறது.

மு.க.ஸ்டாலின், சி.வி.சண்முகம்
மு.க.ஸ்டாலின், சி.வி.சண்முகம்

தமிழகம் மட்டும்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. நாமும் நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கையில், உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்து பெரியதா... அல்லது நீங்கள் அமைத்த குழுவின் பரிந்துரை தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து பெரியதா.. என்ற கேள்வியை நான் அன்றே எழுப்பியிருந்தேன். அதற்கான பதில் இன்றுவரை இல்லை. அதைத்தான் ஆளுநரும் சுட்டிக்காட்டியுள்ளார். 'எங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்' என வேலூரிலுள்ள மருத்துவக் கல்லூரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அதற்கு உச்ச நீதிமன்றம், "நீட் தேர்வுதான் இந்தியா முழுவதற்கும். உங்களது கோரிக்கையை ஏற்க முடியாது" என்று தெளிவாகத் தீர்ப்பு வழங்கி, வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. இன்று தமிழக ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்வியும் அதுதான்.

இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான ஒரு சட்டம், இதற்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல்... ஏதையாவது மாற்றி இந்த மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினால் எந்தவிதமான பலனும் ஏற்படப்போவதில்லை. இந்த மக்களை, மாணவர்களை மீண்டும் இந்த திமுக ஏமாற்றி அரசியல் செய்வது... தங்களுடைய கையாலாகாத்தனத்தையே காட்டுவதாக அமையும்.

நீட் தேர்வு இல்லாதபோது, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்த எண்ணிக்கை வெறும் 52-தான்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

2018-ல் நீட் தேர்வு வந்த பிறகு முதலாம் ஆண்டில் ஆறு மாணவர்கள், அடுத்த ஆண்டு எட்டு மாணவர்கள்தான் சேர்ந்தனர். அதன் பிறகு அம்மா வழியிலான அரசு, அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5% இட ஒதுக்கீட்டைச் சட்டமாக இயற்றியது.

இன்று ஆட்சி பொறுப்பிலிருக்கும் ஸ்டாலின் ஒப்பாரிவைக்கிறார், கூவுகிறார், நாடகமாடுகிறார்... ஆளுநர் கையெழுத்திடவில்லை, ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்யவில்லை என்று. 39 எம்.பி-களை கையில் வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாமல் இருக்கிறார். ஆனால், அன்றைக்கு 7.5% இட ஒதுக்கீட்டைச் சட்டமாக இயற்றுவதற்குத் தேவையான ஒப்புதலைப் பெற நாங்களும் ஆளுநருக்கு அனுப்பினோம். ஆளுநர், ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்துகொண்டிருந்தார். மூன்று மாதங்களுக்கு மேலாகப் பொறுத்துக்கொண்டிருந்தோம்.

அனைத்து இந்திய அளவில் மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வந்தவுடனேயே, இனிமேலும் பொறுத்தால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதற்காக ஆளுநரின் ஒப்புதலும் இல்லாமல் மாநில அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தச் சட்டத்தை இயற்றி அறிவிப்பு வெளியிட்டது. இதுவரை இந்தியாவிலேயே எந்த முதலமைச்சரும் செய்யாத துணிச்சலான முடிவை எடப்பாடி பழனிசாமி அன்று எடுத்தார். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அனைவரது நிலைப்பாடும். ஆனால், ஒரு கெட்டதிலும் நல்லது என்பார்கள். அதுபோல, இந்த நீட் தேர்வால்தான் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று காரண, காரியங்களை விவரித்துத்தான் இந்த 7.5% இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆறு மாணவர்கள், எட்டு மாணவர்கள் என சேர்ந்த இடத்திலே... இந்த இட ஒதுக்கீட்டின் மூலமாக கடந்த ஆண்டு 436 மாணவர்களும், இந்த ஆண்டு 537 மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இந்தச் சரித்திரத்தைப் படைத்தது அம்மா வழியிலான அரசு. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், மக்களை ஏமாற்றாமல், மாணவர்களைக் குழப்பாமல் இந்தத் தமிழக அரசு உண்மையான அக்கறையுடன் நீட் தேர்வை விலக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீட் தேர்வு விலக்கு வேண்டுமென்றால், இதைச் சட்டபூர்வமாகத்தான் அணுகி விலக்கு பெற வேண்டும்" என்றார் காட்டமாக.