Published:Updated:

``தீபிகா வருகைக்குப் பின்னால் தாவூத் இருக்கிறார்!” - பா.ஜ.க எம்.பி ராகேஷ் சின்ஹா

ஜே.என்.யூ-வில் தாக்குதலுக்கு உள்ளான மாணவ அமைப்பின் தலைவர் அய்ஷி கோஷை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார் கனிமொழி.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மற்ற மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போராட்டத்தில் கலந்துகொண்டார். மாணவர் அமைப்பின் தலைவர் அய்ஷி கோஷையும் சந்தித்துப் பேசினார். இதனால், தீபிகா படுகோனை புறக்கணிக்கும் விதமாக ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வந்தன. இதைத்தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் உட்பட பலரும் தீபிகாவுக்கு ஆதரவாகத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
Twitter

தீபிகா படுகோன் சம்பவம் தொடர்பாக பேசுகையில், ``நமது கருத்தை வெளிப்படுத்த நாம் பயப்படவில்லை என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. நாட்டைப் பற்றியும் நாட்டினுடைய எதிர்காலம் பற்றியும் சிந்திக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். நமது கருத்து எதுவாக இருந்தாலும் சரி வெளிப்படுத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தத் தாக்குதல் நடந்ததுக்காகக் கோபம் ஏற்படுகிறது. அதே நேரம், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது கவலை அளிக்கிறது” என்று தனது கண்டனங்களைட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தீபிகா படுகோனுக்கு எதிராகக் கண்டனங்கள் பதிவாகத் தொடங்கின. பா.ஜ.க-வின் தேசிய செய்தித்தொடர்பாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``தீபிகா படுகோன் சிறிய சிறிய குழுக்களுக்கு ஆதரவாக இருப்பதால், அவருடைய படங்கள் பார்ப்பதை புறக்கணிக்க வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து #boycottchhapaak மற்றும் #BoycottDeepikaPadukone போன்ற ஹேஷ்டேக்குகளைப் பதிவு செய்யத் தொடங்கினர்.

அனுராக்கின் ட்விட்டர் பக்கம்
அனுராக்கின் ட்விட்டர் பக்கம்

இதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக #IStandWithDeepika போன்ற ஹேஷ்டேக்குடன் பதிவு செய்து வருகின்றனர். அனுராக் காஷ்யப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றி தீபிகா படுகோன் போராட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படத்தை வைத்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``இது ஜனநாயக நாடு. யாரும், எந்தக் கலைஞரும் எங்கு வேண்டுமானாலும் சென்று தனது கருத்தை முன்வைக்க முடியும்” என்று கூறியுள்ளார். ஜே.என்.யூ-வின் முன்னாள் மாணவ அமைப்பின் தலைவர் கன்ஹையா குமார், ``நான் அவரைச் சந்திக்கவில்லை. அவரிடம் பேசவுமில்லை” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தீபிகா படுகோனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதில், ``நான் நிறைய இந்திப் படங்களைப் பார்ப்பதில்லை. மக்களை தீபிகாவின் படங்களை பார்க்கவும் ஆதரிக்கவும் வைக்கிறது, அவர்களுடைய செயல்பாடுகள்” என்று கூறியுள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாட்டை பிளவுபடுத்தத் துடிக்கும் குண்டர்களால் தாக்கப்பட்ட ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் அவர்களை சந்தித்தேன். அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களைக் குறிவைத்து, திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது” என்றும் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி மற்றும் ஆய்ஷி கோஷ்
கனிமொழி மற்றும் ஆய்ஷி கோஷ்

மாணவர்களை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா, ``நான் சொல்ல விரும்புவதை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பத்மாவத் வெளியானபோதே கூறினேன். இன்று நான் பார்க்கும் காட்சி மிகவும் வேதனையளிக்கிறது. இந்தநிலை இயல்பானதாக மாறாது என நம்புகிறேன். யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம். எனக்கு பயமாக இருக்கிறது. அதேநேரம், கவலையாகவும் இருக்கிறது. நம்முடைய நாட்டின் அடிப்படை இது அல்ல” என்று பேசினார்.

தீபிகா படுகோன் நடித்த சபாக் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான விமர்சனங்களும் ஆதரவும் எழத்தொடங்கியிருப்பவை பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபிகா படுகோன் குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்ஹா பேசும்போது, ``ஜனநாயகத்தில் தங்களது கருத்தை வெளிப்படுத்த எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், தற்போது நடைபெறும் ஆட்சிக்கு எதிரான, அரசுக்கு எதிரான, தேசிய நலனுக்கு எதிரான குரல்கள் பாலிவுட்டில் எழுகின்றன.

 ராகேஷ் சின்ஹா
ராகேஷ் சின்ஹா

ஜே.என்.யூ-வில் இடதுசாரி சித்தாந்தம் ஆட்சி செய்து வருகிறது. இடதுசாரியில் இல்லாத மாணவர்களை அவர்கள் அடக்குகிறார்கள்” என்றார், மேலும் தீபிகா படுகோனின் வருகைக்குப் பின்னால் தாவூத் இப்ராஹிம் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

``தீபிகா வருகைக்குப் பின்னால் தாவூத் இருக்கிறார்!” - பா.ஜ.க எம்.பி ராகேஷ் சின்ஹா

தீபிகா படுகோன் நடித்த சபாக் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான விமர்சனங்களும் ஆதரவும் எழத்தொடங்கியிருப்பது, பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாக் படத்துக்கு பதிவு செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்த ஸ்கிரீன் ஷாட்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு