Published:Updated:

Live Updates: `இரவு விருந்து; ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை!' - மோடி - ஜி ஜின்பிங் முதல்நாள் சந்திப்பு நிறைவு

Modi - China President Meeting: இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு.

 முதல் நாள் சந்திப்பு நிறைவு
முதல் நாள் சந்திப்பு நிறைவு
11 Oct 2019 9 PM

இனிதே நிறைவடைந்த மோடி - ஜி ஜின்பிங் முதல்நாள் சந்திப்பு!

Live Updates: `இரவு விருந்து; ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை!' - மோடி - ஜி ஜின்பிங் முதல்நாள் சந்திப்பு நிறைவு

இரவு விருந்து முடிந்து பிறகு, மாமல்லபுரத்தில் இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த ஆலோசனை தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, மாமல்லபுரத்திலிருந்து கிண்டியில் உள்ள சோழா ஹோட்டலுக்கு திரும்பினார் சீன அதிபர் ஜி ஜின் பிங். மேலும், இரண்டு மணி நேரத்துக்கும்மேலாக சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நீடித்துவந்த போக்குவரத்து நெரிசல் தற்போது சீராகி வருகிறது. அதேபோல, சீன அதிபரை வழியனுப்பிவிட்டு, மாமல்லபுரத்திலிருந்து கோவளத்துக்குப் புறப்பட்டார் நரேந்திரமோடி.

11 Oct 2019 7 PM

சீன அதிபருக்கு தமிழக பாரம்பர்ய உணவுகள்!

கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஜின்பிங்குக்கு நினைவுப்பரிசை வழங்கினார் நரேந்திர மோடி. நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை ஜின்பிங்குக்கு நினைவுப்பரிசாக வழங்கினார் மோடி. தமிழ்நாடு கைவினைப்பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகள் இவை. தொடர்ந்து சீன அதிபருக்கு மோடி இரவு விருந்து வழங்குகிறார். அதில், தமிழகத்தின் பாரம்பர்ய உணவுகளான தக்காளி ரசம், சாம்பார், குருமா, கவுனி அரிசி அல்வா வழங்கப்பட உள்ளது.

11 Oct 2019 8 PM

மோடி - ஜி ஜின் பிங் மாமல்லபுரத்தை பார்வையிட்ட படங்கள்!

11 Oct 2019 6 PM

கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடும் தலைவர்கள்!

கலை நிகழ்ச்சி
கலை நிகழ்ச்சி
கலை நிகழ்ச்சிகள்
கலை நிகழ்ச்சிகள்

மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பார்வையிடுகின்றனர். இதில் தமிழர்களின் பாரம்பர்ய கலைகளான பரதநாட்டியம் இடம்பெற உள்ளது. மேலும், கதகளி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதை இருநாட்டுத் தலைவர்களும் ரசித்துப் பார்த்தனர்.

கலைகள் குறித்து  விளக்கும் மோடி
கலைகள் குறித்து விளக்கும் மோடி
11 Oct 2019 6 PM

வரவேற்புக் காட்சிகள்!

11 Oct 2019 6 PM

கடற்கரை கோயிலில் இருநாட்டுத் தலைவர்கள்!

கடற்கரை கோயில்
கடற்கரை கோயில்
பொதிகை

இரு நாட்டுத் தலைவர்களும் கடற்கரை கோயிலுக்குச் சென்றனர். பின்னர், அங்கு குடைவரைக்கோயில்களின் தொன்மை குறித்து ஜின்பிங்குக்கு விளக்கினார் பிரதமர் மோடி. லிங்க வடிவில் சோமாஸ்கந்தர் கோயில் குறித்தும் மோடி விளக்கினார்.

அதிகாரிகளுடன் அறிமுகம்
அதிகாரிகளுடன் அறிமுகம்

இருநாட்டுத் தலைவர்களும் உரையாடிக்கொண்டே நடந்துசென்றனர். பின்னர் சீன நாட்டு அதிகாரிகளை ஜி ஜின்பிங் மோடிக்கு அறிமுகப்படுத்தினார். அதேபோல இந்திய அதிகாரிகளை மோடி, ஜின்பிங்குக்கு அறிமுகப்படுத்தினார்.

11 Oct 2019 5 PM

ஐந்து ரதம் பகுதியை ரசித்த தலைவர்கள்!

ஐந்து ரதம்
ஐந்து ரதம்
பொதிகை
மோடி - சீன அதிபர்
மோடி - சீன அதிபர்
ANI

மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் உள்ள சிற்பங்களை மோடியும் ஜின்பிங்கும் ரசித்துப்பார்வையிட்டனர். ஐந்துரதம் பகுதியில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் குறிந்து சீன அதிபருக்கு மோடி விளக்கினார். பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். பின்னர் மோடியும் ஜின்பிங்கும் இளநீர் பருகினர்.

ஐந்துரதம்
ஐந்துரதம்
11 Oct 2019 5 PM

ஐந்துரதம் பகுதிக்கு காரில் புறப்பட்ட மோடி - ஜி ஜின்பிங்

மோடி - ஜி ஜின்பிங்
மோடி - ஜி ஜின்பிங்

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை சீன அதிபர் ரசித்துப் பார்த்தார். அப்போது இருநாட்டுத் தலைவர்களும் தங்கள் கைகளை உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். பின்னர். ஐந்துரதம் பகுதிக்கு இருவரும் காரில் புறப்பட்டுச் சென்றனர்.

11 Oct 2019 5 PM

சிற்பக்கலைகளின் பெருமையை விளக்கிய மோடி!

மோடி - ஜி ஜின்பிங்
மோடி - ஜி ஜின்பிங்

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கலைகளின் வரலாற்றை சீன அதிபருக்கு விளக்கினார் பிரதமர் நரேந்திர மோடி. இருவரும் நீண்ட நேரம் உரையாடி வருகின்றனர்.

கைகுலுக்கிய தலைவர்கள்
கைகுலுக்கிய தலைவர்கள்
பொதிகை
11 Oct 2019 5 PM

வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!

சீன அதிபரை வரவேற்க தனது வழக்கமான குர்தா உடையிலிருந்து, தமிழர்களின் பாரம்பர்ய உடைக்கு மாறியுள்ளார் மோடி. ஜி ஜின்பிங்கை சந்திக்க வேட்டி- சட்டையுடன் மாமல்லபுரத்துக்கு வருகைதந்துள்ளார். பின்னர் அங்கு வந்த சீன அதிபரை மோடி வரவேற்றார். பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டனர். முன்னதாக இருநாட்டுத் தலைவர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மோடி
மோடி
11 Oct 2019 4 PM

சீன அதிபருக்கு வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு!

ஜி ஜின் பிங்
ஜி ஜின் பிங்
ANI

சீன அதிபர் ஜி ஜின் பிங் கிண்டி சோழா ஹோட்டலிலிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் சென்றுகொண்டிருக்கிறார். அவர் செல்லும் வழியெங்கும், ஏராளாமான மக்கள், தடுப்புகளுக்கு அப்பால் நின்றுகொண்டு, உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர். மேலும், அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து 20 பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்துச் சென்றுகொண்டிருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி - ஜின்பிங் சந்திப்பு நடைபெற இருக்கிறது. வரலாற்று ரீதியான இந்தச் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் இந்திய பிரதமரும் - சீன அதிபரும் சந்திக்கும் வரலாற்று நிகழ்வு அரங்கேற இருக்கிறது.
பொதுமக்கள் வரவேற்பு
பொதுமக்கள் வரவேற்பு
11 Oct 2019 4 PM

மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

சீன அதிபர்
சீன அதிபர்
ANI
பாதுகாப்பு
பாதுகாப்பு

கிண்டி ஐ.டி.சி சோழா ஹோட்டலிலிருந்து, மாமல்லபுரத்துக்குப் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங். அவர் செல்லும் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க கோவளத்திலிருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி. மாமல்லபுரத்தில் உள்ள அர்ச்சுனன் தபசு என்ற இடத்தில் சீன அதிபரை வரவேற்க உள்ளார் மோடி. 2 நாடுகளுக்கிடையே வர்த்தக மேம்பாடு, எல்லையில் அமைதி உள்ளிட்டவை பற்றி இருநாட்டுத் தலைவர்களும் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

11 Oct 2019 1 PM

சென்னை வந்தார் சீன அதிபர்!

Live Updates: `இரவு விருந்து; ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை!' - மோடி - ஜி ஜின்பிங் முதல்நாள் சந்திப்பு நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கும் முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

11 Oct 2019 1 PM

போக்குவரத்து நிறுத்தம்!

இன்னும் சற்று நேரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வரவுள்ளார். அவரை வரவேற்க தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையம் வருகை தந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது!

11 Oct 2019 1 PM

மோடி - ஜின்பிங் சந்திப்பு; சென்னை விமான நிலையத்தில் மேள தாளத்துடன் வரவேற்பு ஏற்பாடுகள்

மோடி - ஜின்பிங் சந்திப்பு; சென்னை விமான நிலையத்தில் மேள தாளத்துடன் வரவேற்பு ஏற்பாடுகள். #ModiXiSummit #ModiXiJinpingMeet வீடியோ: வி.ஶ்ரீனிவாசுலு

Posted by Vikatan EMagazine on Friday, October 11, 2019
11 Oct 2019 1 PM

சென்னை வரவேற்பு காட்சிகள்!

11 Oct 2019 1 PM

மாமல்லபுரத்தில் களைகட்டும் வரவேற்பு!

11 Oct 2019 12 PM

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்தியர்கள் சிலர் சென்னையில் சீன அதிபர் தங்கயிருக்கும் ஓட்டலுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துறையினர அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

11 Oct 2019 12 PM

கோவளத்தில் மோடி!

சென்னை வந்து இறங்கிய பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் கோவளம் சென்றார். அங்கு பா.ஜ.கவினர் அவரை வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் கோவளத்தில் உள்ள தாஜ் ஹோட்டலுக்குச் சென்றார், வழியில் இருந்த பா.ஜ.க தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

11 Oct 2019 11 AM

தமிழ், சீன மொழிகளில் ட்வீட்!

11 Oct 2019 11 AM
11 Oct 2019 11 AM

செண்டமேளம் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க, பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

11 Oct 2019 11 AM

சென்னை வந்தார் பிரதமர் மோடி!

Live Updates: `இரவு விருந்து; ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை!' - மோடி - ஜி ஜின்பிங் முதல்நாள் சந்திப்பு நிறைவு
ANI

பிரதமர் நரேந்திர மோடி, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கோவளம் செல்கிறார்.

11 Oct 2019 11 AM

ஆண்டுதோறும் இன்ஃபார்மல் மீட்டிங்!

Modi - Xi jinPing
Modi - Xi jinPing

இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசும் இன்ஃபார்மல் மீட்டிங் தான் தற்போதைய ஹாட் டாப்பிக். கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில், முதலாவது இன்ஃபார்மல் மீட்டிங் நடைபெற்றது. அப்போது, ஆண்டுதோறும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்த முறை, இந்த சந்திப்பை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டபோது, வாரணாசி மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக, மாமல்லபுரத்தை இருநாட்டு தலைமையும் டிக் செய்ய, பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்தது.

இன்று..!

இந்நிலையில், இன்று டெல்லியிலிருந்து சென்னை வரும் மோடி, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கிறார். பின்னர் 1.30 மணிக்கு சென்னை வரும் சீன அதிபர், கிண்டியில் உள்ள ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார். பின்னர், மாலையில் கார் மூலம் மாமல்லபுரம் செல்லும் சீன அதிபரைப் பிரதமர் மோடி வரவேற்கிறார். அங்கு, சுமார் 2 மணி நேரம் சுற்றிப்பார்க்கும் இருவரும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள உள்ளனர். இரவு, சீன அதிபர் மீண்டும் கிண்டி ஓட்டலுக்கு திரும்புகிறார்.