Published:Updated:

“ரஜினியை கடுமையாக கண்டிக்கிறேன்!”

ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம்

எச்சரிக்கைவிடுக்கும் துணை முதல்வர்

“ரஜினியை கடுமையாக கண்டிக்கிறேன்!”

எச்சரிக்கைவிடுக்கும் துணை முதல்வர்

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம்

அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 20-ம் தேதி நாடு திரும்பினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மதுரை விமான நிலையத்தில் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“மேயரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்காமல் கவுன்சிலர்கள்மூலம் தேர்ந்தெடுக்க அ.தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளது. என்ன காரணம்?’’

“கவுன்சிலர்களைத் தேர்வுசெய்வது மக்கள்தானே. உள்ளாட்சி ஜனநாயகத்தை மேம்படுத்தும் வகையிலேயே இப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. தவிர, அ.தி.மு.க ஆட்சியில் எதைச் செய்தாலும் மக்களுக்கு நன்மைபயக்கும் வகையில், சட்டப்படிதான் செய்கிறோம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி `பாட்ஷா படம் வெளியானபோதே ரஜினி ஆட்சியைப் பிடித்திருக்கலாம்’ என்று கூறியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து ரஜினி குரல்கொடுத்ததை ஆதரிப்பதுபோல் ஆகாதா அமைச்சரின் பேச்சு?’’

“அது அவரின் சொந்தக்கருத்து. மற்றபடி ரஜினியோ கமலோ அரசியலில் முழுமையாக ஈடுபட்டு, மக்கள் பணியாற்றிவிட்டு பிறகு தேர்தலைச் சந்திக்கட்டும்... பார்க்கலாம்.’’

“மேலவளவு கொலைக் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ததற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதே?”

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

“நீதிமன்றம் தன் கருத்தைக் கூறியுள்ளது.’’

“ரஜினியும் கமலும் ‘தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். இதனால், அ.தி.மு.க-வுக்குப் பாதிப்பு ஏற்படுமா?”

“எங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கம் அ.தி.மு.க. எத்தனை அரசியல் கட்சிகள், தலைவர்கள் உதயமானாலும் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் நேராது.”

“பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் ஏற்கெனவே இருக்கும் உங்கள் கூட்டணி, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருமா?’’

“நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி அப்படியே தொடரும்.’’

“அ.தி.மு.க கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வர வாய்ப்பு உள்ளதா?’’

“பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அரசியலில் எதுவும் நடக்கும்.”

“உங்கள் அமெரிக்கப் பயணத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன பலன்?”

“தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் பேசி ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அவர்களும் இங்கே தொழில் தொடங்க ஆர்வமுடன் உள்ளனர். உலகவங்கிப் பிரதிநிதிகளிடமும் பேசியுள்ளோம். வீடு இல்லாத ஏழைகளுக்கு முதற்கட்டமாக 5,000 வீடுகள் கட்ட திட்டமிடப்படப்பட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்கப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.’’

“நடிகர் ரஜினி ‘எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனது அதிசயம்’ என்று கூறியுள்ளாரே?’’

“இதை நான் ஏற்கெனவே கண்டித்துள்ளேன். நீண்டகாலமாக அரசியலில் பணியாற்றி அ.தி.மு.க தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரைப் பற்றி ரஜினி பேசியதை கடுமையாகக் கண்டிக்கிறேன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism