Published:Updated:

``2ஜி ஊழலில் ஒரு தசாப்தம் வீணாகிவிட்டது!" - காங்கிரஸைச் சாடிய பிரதமர் மோடி

``2ஜி-யின் ஒரு தசாப்த ஊழல் மற்றும் கொள்கை முடக்கத்திலிருந்து நாடு 3ஜி, 4ஜி என வளர்ந்து, தற்போது 5ஜி, 6ஜி என முன்னேறியிருக்கிறது’’ என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

``2ஜி ஊழலில் ஒரு தசாப்தம் வீணாகிவிட்டது!" - காங்கிரஸைச் சாடிய பிரதமர் மோடி

``2ஜி-யின் ஒரு தசாப்த ஊழல் மற்றும் கொள்கை முடக்கத்திலிருந்து நாடு 3ஜி, 4ஜி என வளர்ந்து, தற்போது 5ஜி, 6ஜி என முன்னேறியிருக்கிறது’’ என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

Published:Updated:

டிராய் எனப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைச் சுட்டிக்காட்டி, அந்தக் கட்சியை மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.

இது தொடர்பாக விழாவில் பேசிய பிரதமர் மோடி, ``2ஜி-யின் ஒரு தசாப்த ஊழல் மற்றும் கொள்கை முடக்கத்திலிருந்து நம் நாடு 3-ஜி, 4-ஜி என வளர்ந்து... தற்போது 5-ஜி, 6-ஜி என முன்னேறியிருக்கிறது. சமூகம், பொருளாதாரத்தில் ஆரோக்கியமான போட்டிக்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நம்முடைய தொலைத் தொடர்பு நிறுவனம்.

டிராய்
டிராய்

5-ஜி தொழில்நுட்பம் நாட்டின் நிர்வாகத்திலும், எளிதாக வாழ்வதிலும், வணிகம் செய்வதிலும் சாதகமான பல மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது. இது விவசாயம், சுகாதாரம், கல்வி, நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் நாட்டில் பல வேலைவாய்ப்புகளையும் இது உருவாக்கும்" எனக் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய மோடி, ``2014-ம் ஆண்டுக்கு முன்பு, இந்தியாவில் 100 கிராம பஞ்சாயத்துகள்கூட ஆப்டிகல் ஃபைபர் இணைப்புடன் இணைக்கப்படவில்லை. ஆனால், இன்று சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் பிராட்பேண்ட் இணைப்புகளைப் பெற்றுள்ளன" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism