Published:Updated:

``நடைப்பயணமாக முதலமைச்சரிடம் மனு அளிக்கவிருக்கிறோம்..!" - உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாய்

உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாய்

"என்னுடைய மகளுக்கு நீதி கேட்டு, எங்களுடைய சொந்த ஊரான பெரிய நெசலூரிலிருந்து நடைப்பயணமாகச் சென்று முதலமைச்சரிடம் மனு கொடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்." - கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயார் செல்வி.

``நடைப்பயணமாக முதலமைச்சரிடம் மனு அளிக்கவிருக்கிறோம்..!" - உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாய்

"என்னுடைய மகளுக்கு நீதி கேட்டு, எங்களுடைய சொந்த ஊரான பெரிய நெசலூரிலிருந்து நடைப்பயணமாகச் சென்று முதலமைச்சரிடம் மனு கொடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்." - கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயார் செல்வி.

Published:Updated:
உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாய்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண சம்பவம், மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு முடிவுகள் வீடியோ பதிவுகளுடன், புதுவை ஜிப்மர் மருத்துவக்குழுவினரின் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஆய்வு செய்துவந்த ஜிப்மர் மருத்துவக்குழுவினர், நேற்றைய தினம் தங்கள் ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். மேலும், உயிரிழந்த மாணவியின் தோழியர் இரண்டு பேர் நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தனர். இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவினரின் அறிக்கையைத் தங்களுக்கும் வழங்குமாறு மாணவி தரப்பினர் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்
விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்
தே.சிலம்பரசன்

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாணவியின் தாயார் செல்வி, ``என்னுடைய மகளின் தோழிகள் இரண்டு பேரை, நேற்றைய தினம் இரண்டு மணி நேரம் விசாரித்ததாகச் செய்தியை பார்த்துத்தான் நாங்கள் தெரிந்துகொண்டோம். உண்மையாகவே அவர்கள் என் மகளின் தோழிகள்தானா, அவர்களுடைய பெயர் என்ன, பள்ளி நிர்வாகத்தால் அனுப்பப்பட்டார்களா... என்று எங்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்களைப் பற்றி ஏதோ ஒரு வகையில், தனிப்பட்ட முறையிலாவது எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்ததால்தான் அவர்கள், என்னுடைய மகளின் தோழிகள்தான் என உறுதிசெய்து நம்ப முடியும். அதை நாங்கள் ரகசியமாக வைத்திருப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சி.பி.சி.ஐ.டி போலீஸ் எங்களிடம் ஏற்கெனவே சொன்னார்கள்... `ஒவ்வொரு நிலையாகத்தான் செல்ல முடியும். எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செல்ல முடியாது. கொஞ்சம் டைம் கொடுங்கள். உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவோம்' என்றார்கள். நாங்களும் அதற்காகத்தான் காத்திருக்கிறோம். சி.பி.சி.ஐ.டி நீதியை நிலைநாட்டுவார்கள் என நம்புகிறோம். இருந்தாலும், கையெழுத்து, சுவற்றில் இருந்த கறைகள் போன்றவற்றைப் பற்றி நாள்கள் கடந்து இழுத்துக்கொண்டு போகாமல், விரைவாகக் கண்டறிய வேண்டும். அந்தக் கடிதத்தில் இருந்தது என்னுடைய மகளின் கையெழுத்தே கிடையாது. அது யாருடையது என்று கண்டறிந்து சொல்ல வேண்டும். என்னுடைய மகளுக்கு நீதி கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்க வேண்டும் எனப் பல வகையிலும் முயன்றோம்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

முதல்வர் எங்களிடம் போனில் பேசியபோதும், `ஐயா உங்களை நேரில் பார்த்து மனு கொடுத்து மனதில் இருப்பதையெல்லாம் சொல்ல வேண்டும்' என்றோம். ஆகவே, வரும் வெள்ளிக்கிழமை அன்று, என்னுடைய மகளுக்கு நீதி கேட்டு, எங்களுடைய சொந்த ஊரான பெரிய நெசலூரிலிருந்து நடைப்பயணமாகச் சென்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் மனு கொடுக்கலாம் என இருக்கிறோம். என் மகளுக்கு நீதி கிடைக்கும் வரையிலும் நான் ஓய மாட்டேன். உண்மைக்காகத்தான் போராடுகிறோம்" என்றார்.