Published:Updated:

``19 எம்பி-க்களை கனத்த இதயத்துடன்தான் இடைநீக்கம் செய்தோம்..!" - பியூஷ் கோயல்

பியூஷ் கோயல் ( ட்விட்டர் )

``நிர்மலா சீதாராமன் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இணைந்தவுடன் பணவீக்கம் குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது." - பியூஷ் கோயல்

``19 எம்பி-க்களை கனத்த இதயத்துடன்தான் இடைநீக்கம் செய்தோம்..!" - பியூஷ் கோயல்

``நிர்மலா சீதாராமன் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இணைந்தவுடன் பணவீக்கம் குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது." - பியூஷ் கோயல்

Published:Updated:
பியூஷ் கோயல் ( ட்விட்டர் )

நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நேற்றைய தினம் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபையின் மையப் பகுதிக்கு வந்து விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக எம்.பி-க்கள்19 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்தார். இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆறு தி.மு.க எம்.பி-க்களும் அடக்கம். இந்த நிலையில் தங்கள்மீதான இடைநீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க எம்.பி-க்கள் உட்பட 19 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பியூஸ் கோயல் விளக்கம்
பியூஸ் கோயல் விளக்கம்
ட்விட்டர்

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ``எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்களிடம் நாடாளுமன்ற ராஜ்ய சபாவை செயல்பட அனுமதிக்குமாறு பல முறை கேட்டுக்கொண்டும், அவர்கள் அதைப் புறக்கணித்ததால் கனத்த இதயத்துடன்தான் 19 எம்.பி-க்களை இடைநீக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. சபையை விவாதம் நடத்த விடாமல் இருந்தது மத்திய அரசு அல்ல, எதிர்க்கட்சிகள்தான். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிட்-19 தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இணைந்தவுடன் பணவீக்கம் குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.

பல நாடுகளைவிட இந்தியா பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைச் சிறப்பாகச் சமாளித்து வருகிறது. மேலும் விலைவாசி உயர்வைக் கையாள எடுத்த முக்கிய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்க அரசாங்கம் ஆர்வமாக இருக்கிறது" என விளக்கமளித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!