Published:Updated:

`தொந்தரவு செய்யாதீங்க; அரசியலிலிருந்து விலகிட்டேன்!’- ஜெ.தீபா திடீர் அறிவிப்பு

கலிலுல்லா.ச

`முன்னதாகவே அ.தி.மு.க-வுடன் எனது பேரவையை இணைத்துவிட்டேன். அரசியல் தொடர்பாக யாரும் என்னை அழைக்க வேண்டாம்’

தீபா
தீபா

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, `அ.தி.மு.க-வையும் தமிழக மக்களையும் காப்பாற்றுவேன்’ என்று சபதமெடுத்து, தமிழக அரசியலில் காலெடுத்து வைத்தவர், ஜெ. அண்ணன் மகள் தீபா. தொடக்கத்தில், தீபாவைப் பலரும் ஆதரித்தனர். `ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு’ எனவும் புகழ்பாடினர். ஆனால், காலப்போக்கில் எல்லாமே மாறிவிட்டது.

ஃபேஸ்புக் பதிவு
ஃபேஸ்புக் பதிவு

கணவன் மாதவனை கட்சியில் சேர்த்தது, பின்னர் நீக்கியது, ஓட்டுநர் ராஜா விவகாரம் என ஜெ.தீபா பேரவைமீது அடுத்தடுத்து கறைகள் விழுந்தன. இது, கட்சிக்காரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவருடன் இருக்கும் கட்சிக்காரர்கள், `தீபாம்மா தான் அடுத்த முதல்வர்’ என்று கோஷம் எழுப்பி, இழந்த உற்சாகத்தை மீட்டனர். இறுதியில், தனது கட்சியை அ.தி.மு.க-வுடன் இணைத்தார் தீபா.

இந்நிலையில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``எங்களை விடுங்கள். பேரவை பேரவை என்று தொந்தரவு செய்யாதீர்கள். அ.தி.மு.க அல்லது உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒருகட்சியில் போய் சேர்ந்துகொள்ளுங்கள். எனக்கு போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்கிறார்கள்” என்று பதிவிட்டவர்,

ஜெ.தீபா
ஜெ.தீபா
Vikatan

``முன்னதாகவே அ.தி.மு.க-வுடன் எனது பேரவையை இணைத்துவிட்டேன். அரசியல் தொடர்பாக யாரும் என்னை அழைக்க வேண்டாம். அழைத்தால், காவல்துறையில் புகார் அளிப்பேன். எனக்கென்று குடும்பம் உள்ளது. அதுதான் முக்கியம். எனக்கு அரசியல் வேண்டாம்; குடும்பம்தான் முக்கியம்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை இட்ட சிறிது நேரத்தில் அதனை அவர் நீக்கி விட்டார். நீக்கியதற்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.