Published:Updated:

``ஹிட்லர்கூட வேலை கொடுத்திருக்கிறார், ஆனால் மோடி என்ன கொடுத்தார்?" - அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்

அரவிந்த் கெஜ்ரிவால்

``ஹிட்லர்கூட தன் அடியாட்களுக்கு வேலை கொடுத்தார். அவர் (மோடி) உங்களுக்கு என்ன கொடுத்தார்? உங்களுக்காக கெஜ்ரிவால் வேலை செய்கிறார்." - டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால்.

``ஹிட்லர்கூட வேலை கொடுத்திருக்கிறார், ஆனால் மோடி என்ன கொடுத்தார்?" - அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்

``ஹிட்லர்கூட தன் அடியாட்களுக்கு வேலை கொடுத்தார். அவர் (மோடி) உங்களுக்கு என்ன கொடுத்தார்? உங்களுக்காக கெஜ்ரிவால் வேலை செய்கிறார்." - டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால்.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மாநிலத்தில், நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில், `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க-வினர் கோரிக்கை முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து, பா.ஜ.க-வின் கோரிக்கைக்கு பதிலளிக்கும்விதமாகப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ``ஏன் எங்களை வரிவிலக்கு செய்யச் சொல்கிறீர்கள்? அவ்வளவு ஆசையாக இருந்தால் விவேக் அக்னிஹோத்ரியை யூடியூபில் போடச் சொல்லுங்கள். எல்லோரும் இலவசமாக ஒரே நாளில் பார்க்கலாம்" எனப் பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசிய கெஜ்ரிவால், "ஹிட்லர்கூட தன் அடியாட்களுக்கு வேலை கொடுத்தார். அவர் (மோடி) உங்களுக்கு என்ன கொடுத்தார்? உங்களுக்காக கெஜ்ரிவால் வேலை செய்கிறார். உங்கள் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், கெஜ்ரிவால் , உங்களுக்கு மருந்துகளை வழங்குகிறார், மோடி அல்ல. உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள் பா.ஜ.க-விலிருந்து விலகி ஆம் ஆத்மியில் சேருங்கள்" என மோடியையும் பா.ஜ.க-வையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

மோடி
மோடி

டெல்லியில் முன்னதாக, ``உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி எனச் சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க., ஆம் ஆத்மி கட்சியையும், டெல்லி மாநகராட்சித்தேர்தலையும் கண்டு பயப்படுகிறது. பா.ஜ.க மட்டும் சரியான நேரத்தில் மாநகராட்சித் தேர்தலை நடத்தி வெற்றிபெற்றுவிட்டால் நான் அரசியலைவிட்டே விலகிவிடுகிறேன்" எனச் செய்தியாளர்களிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டெல்லியிலுள்ள மூன்று மாநகராட்சிகளையும் இணைப்பதற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடந்த சில தினங்களாகவே கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism