Published:Updated:

``போலி மதுபானமா... வேலைவாய்ப்பா; பாஜக-வா... ஆம் ஆத்மியா?!" - கெஜ்ரிவால் பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவால்

`குஜராத் மக்களுக்கு தற்போது இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று பாஜக-வுக்கு வாக்களித்தால் மக்கள் போலி மதுபானத்தை அல்லது எங்களுக்கு வாக்களித்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.' - கெஜ்ரிவால்

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில், இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த மார்ச்சில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் வெற்றிபெற்றதையடுத்து, தற்போது குஜராத்திலும் அதற்கு ஆயத்தமாகிவருகிறது. அதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், முன்னதாக `ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம்' எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், குஜராத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் நிகழ்ந்த போலி மதுபான பிரச்னையைக் குறிப்பிட்டு, ஆளும் பா.ஜ.க-வை விமர்சித்தவண்ணம் கெஜ்ரிவால் வாக்கு சேகரித்திருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

ராஜ்கோட்டில் இன்று பேசிய கெஜ்ரிவால், ``குஜராத் மக்களுக்கு தற்போது இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று பாஜக-வுக்கு வாக்களித்தால் மக்கள் போலி மதுபானத்தை அல்லது எங்களுக்கு வாக்களித்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தற்போதைய சூழலில், மின்சாரம், பள்ளி, வேலைகள்தான் பிரச்னை. அதேசமயம் மாநிலத்தில், போலி மதுபானங்கள் வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகின்றன" என்றார்.

குஜராத்தில் கடந்த சில நாள்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வரும், போலி மதுபான சர்ச்சையில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!