Published:Updated:

``மத்திய அரசு டெல்லியில் தடுத்தால், அதை பஞ்சாப்பில் நடத்திக்காட்டுவோம்" - கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவால்

``வீடு தேடி ரேஷன் திட்டத்தை மத்திய அரசு டெல்லியில் செயல்படுத்த அனுமதிக்கவில்லை. ஆனால், அதை நாங்கள் பஞ்சாப்பில் செயல்படுத்துவோம்" என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையாக 92 இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து, பஞ்சாப்பின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். இந்த நிலையில், முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப்பில் ரேஷன் பொருள்கள் இனி வீடு தேடி வரும் என்ற புதிய திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தில், அதிகாரிகள் குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் பொருள்களை வழங்குவதற்கான நேரம் கேட்டு விநியோகம் செய்யப்படும் என்று பக்வந்த் மான் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ``பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், வீட்டு வாசலில் ரேஷன் விநியோகம் செய்வதாக அறிவித்துள்ளார். அது விரைவில் செயல்படுத்தப்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக டெல்லியில் அதைச் செயல்படுத்தப் போராடிவருகிறோம்.

ஆம் ஆத்மி முதல்வர் பக்வந்த் மான், அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி முதல்வர் பக்வந்த் மான், அரவிந்த் கெஜ்ரிவால்

எல்லாவற்றையும் நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் மத்திய பா.ஜ.க அரசு அதைத் தடுத்து நிறுத்தியது. அதனால் பிரச்னை ஒன்றுமில்லை. நாங்கள் பஞ்சாப்பில் அதைச் செய்வோம். நாடும் இந்தத் திட்டத்தைக் கோரும். இது மொஹல்லா கிளினிக்குகள் போன்று நாட்டில் செயல்படுத்தப்படும்" என்றார்.

டெல்லியில், வீடு தேடி ரேஷன் என்ற திட்டத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism