Published:Updated:

``பிரதமர் மோடி வெளிப்படையாக பொய் சொல்கிறார்!" - அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

அரவிந்த் கெஜ்ரிவால்

``நீங்கள் பா.ஜ.க-வை தோற்கடிக்க விரும்பினால், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். மாற்றாக காங்கிரஸ், போன்ற கட்சிகளுக்கு வாக்களித்தால், கடைசியில் அவர்கள் பா.ஜ.க-வில் தான் சேருவார்கள்" - அரவிந்த் கெஜ்ரிவால்

``பிரதமர் மோடி வெளிப்படையாக பொய் சொல்கிறார்!" - அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

``நீங்கள் பா.ஜ.க-வை தோற்கடிக்க விரும்பினால், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். மாற்றாக காங்கிரஸ், போன்ற கட்சிகளுக்கு வாக்களித்தால், கடைசியில் அவர்கள் பா.ஜ.க-வில் தான் சேருவார்கள்" - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

கடந்த சில நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ``அப்போது டெல்லியில் ஒரு அரசு இருந்தது. இப்போதும் அந்த அரசு தான் உள்ளது. அந்த அரசு கொரோனா தொடக்க காலத்தில், ஜுக்கி-ஜோப்ரி காலனியில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்குத் திரும்பச் சொல்லியிருந்தது. அதற்காக இலவச பேருந்துகளையும் அனுப்பியது. இதன் காரணமாகத் தான் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் கொரோனா அதிகமாக பரவியது" என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கோவாவில் வரும் 14-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு கோவா, பனாஜியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே பொய் சொல்கிறார். நாட்டின் பிரதமர் இப்படி பொய் கூறுவது துரதிர்ஷ்டவசமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

நீங்கள் பா.ஜ.க-வை தோற்கடிக்க விரும்பினால், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். மாற்றாக காங்கிரஸ், கோவா ஃபார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி போன்ற கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தாலும் அவர்கள் பா.ஜ.க-வில் தான் சேருவார்கள். பா.ஜ.க-வை விரும்பாதவர்கள் வாக்குகளைப் பிரிக்க வேண்டாம். அனைவரும் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism