Published:Updated:

``துணை முதல்வரைக் கைதுசெய்ய மத்திய அரசு திட்டம்; இதற்கு மொத்தமாகச் சிறையில் அடையுங்கள்" - கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``எங்கள் அனைவரையும் ஒன்றாகச் சிறையில் தள்ளுமாறு, பிரதமர் மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன்." - அரவிந்த் கெஜ்ரிவால்

``துணை முதல்வரைக் கைதுசெய்ய மத்திய அரசு திட்டம்; இதற்கு மொத்தமாகச் சிறையில் அடையுங்கள்" - கெஜ்ரிவால்

``எங்கள் அனைவரையும் ஒன்றாகச் சிறையில் தள்ளுமாறு, பிரதமர் மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன்." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராகச் செயல்பட்டுவந்த சத்யேந்தர் ஜெயின், கடந்த திங்களன்று பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, சத்யேந்தர் ஜெயின் தற்போது அமலாக்கத்துறையின் காவல் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயின் கவனித்துவந்த, சுகாதாரம், உள்துறை, மின்சாரம் உள்ளிட்ட துறைகள் டெல்லியின் துணை முதல்வராகவும், கல்வியமைச்சராகவும் இருக்கும் மணீஷ் சிசோடியாவுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது மணீஷ் சிசோடியாவையும் கைதுசெய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

இது தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் வீடியோ ஒன்றில், ``மணீஷ் சிசோடியா விரைவில் கைதுசெய்யப்படுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் என்னிடம் தகவல் தெரிவித்திருக்கின்றன. மத்திய அரசு, அவர்மீது போலி வழக்குகளைப் பதிவுசெய்ய அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறது. எங்கள் அனைவரையும் ஒன்றாகச் சிறையில் தள்ளுமாறு, பிரதமர் மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன். மொத்தமாகக் கைதுசெய்து விசாரித்து, ரெய்டு நடத்துங்கள். அதன் பிறகு மீண்டும் வேலைக்குச் செல்லலாம். ஏனெனில், இதன் அரசியலே எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் வேலை செய்ய மட்டுமே விரும்புகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
ANI

அதுமட்டுமல்லாமல், கல்வித்துறையில் மணீஷ் சிசோடியாவின் பணியால் பயனடைந்துவரும் 18 லட்சம் குழந்தைகளிடம், சிசோடியா ஊழல் செய்தாரா என்று கேட்க விரும்புகிறேன். இந்தியாவுக்கே உலக அளவில் பெருமை சேர்த்தவர் அவர். அப்படிப்பட்டவரைக் கைதுசெய்ய வேண்டுமா அல்லது அவருக்கு வெகுமதி அளிக்க வேண்டுமா... ஆனால், இப்போது அவர்களை ஊழல்வாதிகள் என்கிறார்கள். மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும்கூட நான் கேட்க விரும்புகிறேன், சிசோடியாவும் சத்யேந்தரும் ஊழல் செய்ய முடியுமா... தொடர்ந்து இப்படி விசாரணை செய்தால், எப்போது நாங்கள் வேலை செய்வோம்... ஆனால், நாங்கள் ஜெயிலுக்கு பயப்பட மாட்டோம். இந்த முறையும் டெல்லி மக்கள் எங்களுடன் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism