Published:Updated:

லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரம்: `ஆகார் படேலிடம் சிபிஐ மன்னிப்பு வேண்டும்!' - டெல்லி நீதிமன்றம் உத்தரவு

ஆகார் படேல் ( ட்விட்டர் )

ஆம்னஸ்டி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகார் படேலிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்குமாறு சிபிஐ இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரம்: `ஆகார் படேலிடம் சிபிஐ மன்னிப்பு வேண்டும்!' - டெல்லி நீதிமன்றம் உத்தரவு

ஆம்னஸ்டி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகார் படேலிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்குமாறு சிபிஐ இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Published:Updated:
ஆகார் படேல் ( ட்விட்டர் )

ஆம்னஸ்டி அமைப்பின் முன்னாள் தலைவரும், எழுத்தாளருமான ஆகார் படேல், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா செல்லவிருந்தபோது அதிகாரிகள் சிலர் அவர் மீது `லுக்-அவுட்' நோட்டீஸ் இருப்பதாகக் கூறி தடுத்து நிறுத்தியுள்ளனர். மெக்ஸிகோ, பெர்க்லி, நியூயார்க்கில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் அவருடைய புத்தகங்கள் பற்றி கலந்துரையாட ஆகார் படேல் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆகார் படேல் இதுகுறித்து தெரிவித்ததாவது, ``என்னுடைய நூல்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் உள்ள 3 பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவிருந்தேன். இந்தியாவில் சிவில் சமூகத்தின் மீது எந்த மாதிரியான தாக்குதல் நடைபெற்று வருகிறது என்பது பற்றி அங்கு பேசவிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தேன். கடந்த 2020-ம் ஆண்டு குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ தொடுத்த வழக்கில் எனது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை நீதிமன்றத்தின் வாயிலாக திரும்பப் பெற்றுதான் அமெரிக்கா செல்ல தயாரானேன். என் மீது சி.பி.ஐ லுக்-அவுட் நோட்டீஸ் இருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் சி.பி.ஐ-யின் கண்காணிப்பில் இருந்தால் என்னை கைது செய்திருக்கலாமே? இந்தப் பிரச்னை பற்றி விரைவில் நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன்” என்றார்.

கோர்ட்
கோர்ட்
சித்தரிப்புப் படம்

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆகார் படேல் வழக்கு தொடுத்துள்ளார். அந்த மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி பவன் குமார் இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது, ``ஆம்னஸ்டி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகார் படேலுக்கு சி.பி.ஐ லுக்-அவுட் நோட்டீஸ் கொடுத்தது தொடர்பாக சி.பி.ஐ இயக்குநர் எழுத்துப்பூர்வமாக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் இது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆகார் படேலை உரிய நேரத்தில் பயணம் செய்ய விடாமல் தடுத்தது, அவருக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளிகளுக்குத் தான் லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். நீங்கள் நினைப்பவர்களின் மீது அல்ல'' என தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தொடர்பாக ஆகரின் வழக்கறிஞர் தன்வீர் அகமது மிர் தன்னுடைய ட்விட்டரில், ``நீதிபதி, ஆகார் படேலிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்குமாறு சி.பி.ஐ இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். சுதந்திர இந்தியாவிலும், சி.பி.ஐ வரலாற்றிலும் இது மாதிரியான செயல் இதுவே முதல் முறையாகும். நீதிபதியின் இந்த உத்தரவு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது. மேலும் சாதாரண மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கிறது'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism