Published:Updated:

அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி மாடல் எனும் பொய் வித்தை; விடாமல் எரியும் சிதைகள்-அம்பலப்படுத்திய கொரோனா

இந்தியா முழுவதும் பரவிய கொரோனோ இரண்டாம் அலை டெல்லி மாடலின் கோர முகத்தை ஒட்டுமொத்த உலகுக்கும் வெளிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவை வெற்றிகரமாகக் கையாண்டதாக மோடிக்கு நன்றி என டெல்லி பா.ஜ.க தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அரவிந்த் கெஜ்ரிவாலும், தமது அரசு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாக சுயதம்பட்டம் அடித்துக்கொண்டார்.

டெல்லி மாடலும், தற்காலிக சுடுகாடும்

`டெல்லி மாடல்’ என அழைத்த அவர், இது அனைத்துக் கட்சிகளாலும், அனைத்துத் தரப்பு மக்களாலுமே சாத்தியமானது என நன்றி நவிழ்ந்தார்.

ஆனால், இந்தியா முழுவதும் பரவிய கொரோனோ இரண்டாம் அலை டெல்லி மாடலின் கோர முகத்தை ஒட்டுமொத்த உலகுக்கும் வெளிக்காட்டியுள்ளது.

மற்ற மாநிலங்கள் தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த, டெல்லி அரசு தற்காலிக இடுகாடுகளை உருவாக்கியிருக்கிறது. எங்கும் விடாமல் சிதைகள் எரிந்த வண்ணம் உள்ளன.

சிதை
சிதை

ஒவ்வொரு நாளும் கோவிட் 19-ஆல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, 350 முதல் 400 வரை என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சில மயானங்களில், 100-க்கும் மேற்பட்ட சிதைகள் எரிவதைக் காண்பதாகக் கூறுகிறார்கள் செய்தியாளர்கள்.

ஆம், டெல்லி அரசு கொரோனாவின் இரண்டாம் அலை முன் தோற்று நிற்கிறது. மக்கள் தாம் முழுவதுமாக கைவிடப்பட்டதாகவே உணர்வது அவர்கள் பேசுவதிலிருந்தே தெரிகிறது. தி பிரின்ட் தளத்தில் இதழியலாளர் சிவம் எழுதியுள்ள கட்டுரையில் டெல்லி மாடலை ஒரு வெற்று வித்தை என்று குறிப்பிடுகிறார்.

முதல் அலையின்போது டெல்லி அரசு மருத்துவமனைப் படுக்கைகள் குறித்த தகவலைத் தெரிந்துகொள்ள ஒரு செயலியை வெளியிட்டது. ஆனால், அந்தச் செயலியும் சரியாக வேலை செய்யவில்லை. இப்போது அந்தச் செயலியை டெல்லி அரசே மறந்துவிட்டது எனத் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் சிவம்.

திட்டமிட்டுச் செயல்படும் அரசாக அல்லாமல், வெறும் ஜனரஞ்சக அரசாக மட்டுமே கெஜ்ரிவால் அரசு இருக்கிறது. மக்கள் லஞ்ச ஊழல் குறித்துப் பேசினால், அவர் அதற்காக இயக்கம் தொடங்குவார். மக்கள் அதை மறந்துவிட்டால் தாமும் மறந்துவிடுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது அட்லி, `மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு காளையைப் பயன்படுத்தியதுபோலத்தான், மக்கள் உணர்வு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருந்தபோது, அதைத் தனது போஸ்டரில் வைத்தார் அட்லி.

ஆனால், மக்கள் நல அரசை நடத்துவது, சினிமா எடுப்பதுபோல அல்லதானே?

தவறான தரவுகள்!

கொரோனா மரணங்கள் குறித்த தவறான தரவுகளை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தொடக்கத்திலிருந்தே வழங்கியதாகக் குற்றஞ்சாட்டுகிறார் சிவம். கொரோனாவால் மரணித்தவர்கள் என்று டெல்லி அரசு ஓர் எண்ணிக்கையைத் தர, சுடுகாடுகளிலிருந்து வந்த எண்ணிக்கை வேறாக இருந்தது என்கிறார் அவர்.

கொரோனாவை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கட்டுப்படுத்த தவறியதாக டெல்லியின் அனைத்துத் தரப்பு மக்களுமே கருதுகின்றனர். டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு படி மேலே சென்று, ``நீங்கள் செய்ததெல்லாம் போதும். உங்களால் இந்தநிலையைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், நாங்கள் மத்திய அரசைக் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளக் கோருவோம்” என்று கூறியிருக்கிறது.

ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் தட்டுப்பாடு நிலவுகிறது என மருத்துவமனைகள் தொடுத்த வழக்கில்தான் நீதிபதிகள் விபின் மற்றும் ரேகா அடங்கிய அமர்வு இவ்வாறாகக் கூறியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

சரி… இப்போது டெல்லி மருத்துவமனைகளில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டுக்கு டெல்லி அரசு மட்டுமே காரணமா? பிஎம் கேர்ஸ் ஆகிஸிஜன் உற்பத்தி மையத்துக்காக வழங்கிய பணத்தை கெஜ்ரிவால் அரசு முறையாகப் பயன்படுத்தவில்லையா? இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் உண்மையா?

உண்மை இல்லை என்கிறது கெஜ்ரிவால் அரசு.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு

மத்திய மருத்துவ சேவைகள் சங்கம்தான் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகளைவிட்டது. இதில் மாநில அரசின் பணி அவர்களுக்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது மட்டும்தான். இந்தச் சங்கம் முழுக்க முழுக்க ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்துக்கான பணிகளை மேற்கொண்டது. இவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.

ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் தாமதப்படுத்திவிட்டு, பிரச்னை கைமீறியதும் மாநில அரசைக் குற்றம்சாட்டுவது எந்தவிதத்தில் நியாயம் என்ற டெல்லி கெஜ்ரிவால் அரசின் கேள்வியைப் புறந்தள்ள முடியாது.

கொரோனா
கொரோனா
Channi Anand

இனியாவது...

இது ஏதோ இப்போதைய பிரச்னை மட்டுமல்ல. குறைந்தபட்சம் இப்போதாவது டெல்லி அரசு மருத்துவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்தத் தொடங்க வேண்டும். ஒற்றை எய்ம்ஸை, பெரிய பெரிய மருத்துவமனைகளை மட்டுமே முன்னிறுத்துவது இதற்குத் தீர்வல்ல. ஏராளமான சிறிய ஆரம்ப சுகாதார நிலையங்களை உண்டாக்க வேண்டும் என்கின்றனர்.

கெஜ்ரிவால் அரசு தமது 2015 - 2020 காலகட்டத்தில் மொஹல்லா (Neighbourhood) கிளினிக் திட்டத்தைக் கொண்டுவந்தது. இது உலக சுகாதார அமைப்பால் பாராட்டப்பட்டது. இthai விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைக்கின்றனர் டெல்லி மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு