Published:Updated:

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு: நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால்மீது டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு!

நுபுர் ஷர்மா ( ட்விட்டர் )

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் மற்றும் சில பத்திரிகையாளர்கள் மீது டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கின்றனர்.

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு: நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால்மீது டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு!

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் மற்றும் சில பத்திரிகையாளர்கள் மீது டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
நுபுர் ஷர்மா ( ட்விட்டர் )

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின்போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. அதனால், அந்தக் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. அதேபோல, டெல்லி பா.ஜ.க-வின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பா.ஜ.க தலைமை நடவடிக்கை மேற்கொண்டது.

நவீன்குமார் ஜிண்டால்
நவீன்குமார் ஜிண்டால்
ட்விட்டர்

சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய நாடுகள் பலவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில் டெல்லி போலீஸார் நுபுர் ஷர்மா, நவீன்குமார் ஜிண்டால் மற்றும் சபா நக்வி, பூஜா ஷகுன் பாண்டே, ஷதாப் சௌகான், மௌலானா முஃப்தி நதீம், அப்துர் ரஹ்மான், குல்சார் அன்சாரி, அனில் குமார் மீனா உள்ளிட்ட சில பத்திரிகையாளர்கள் மீது பல்வேறு குழுக்களைத் தூண்டிவிட்டு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறது. அண்மையில் நுபுர் ஷர்மா நேரில் ஆஜராகி நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று டெல்லி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism