Published:Updated:

பாஜக-வின் அமித் மால்வியா குறித்து தவறான செய்தி?- `தி வயர்' எடிட்டர்கள் வீடுகளில் டெல்லி போலீஸ் சோதனை

தி வயர் எடிட்டர்களின் வீடுகளில் போலீஸ் ரெய்டு ( ட்விட்டர் )

பா.ஜ.க-வைச் சேர்ந்த அமித் மால்வியா அளித்த புகாரின்பேரில், ‘தி வயர்’ இணையதள ஆசிரியர்களின் வீடுகளில் டெல்லி போலீஸார் நேற்று மாலை சோதனை நடத்தினர்.

பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மால்வியாவுக்கு பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, சில சலுகைகளை வழங்கியதாக `தி வயர்' செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், சமூக ஊடக இடுகைகளை கட்டுப்படுத்த பா.ஜ.க-வால் `டெக் ஃபாக்' (Tek Fog) என்ற செயலி பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தி வயர் தனது செய்திகளை சமீபத்தில் திரும்பப் பெற்றது.

செய்திகள்
செய்திகள்
ட்விட்டர்

இந்த நிலையில், தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காக போலியான ஆவணங்களைத் தயாரித்ததாக அமித் மால்வியா  புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், ‘தி வயர்’ இணையதள நிறுவன ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு ஆகியோரின் வீடுகளில் டெல்லி போலீஸார் நேற்று சோதனை நடத்தினார்கள். அந்தச் சோதனையில் அவர்களது செல்போன்கள், மடிக்கணினிகளைப் பறிமுதல் செய்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

`தி வயர்' எடிட்டர்களின் வீடுகளில் போலீஸ் ரெய்டு
`தி வயர்' எடிட்டர்களின் வீடுகளில் போலீஸ் ரெய்டு
ட்விட்டர்

இந்த நிலையில், இது தொடர்பாக `தி வயர்' வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சமூக வலைதளங்களிலுள்ள அனைத்துக் குறைபாடுகளையும் கண்டறிந்து அவை இந்தச் செய்திகளில் வெளியிடப்பட்டன. தி வயர் முன்னாள் ஆலோசகர்களில் ஒருவரான தேவேஷ் குமார் இது குறித்து சரியான விவரங்களை அளிக்கத் தவறிவிட்டார். அதனால், அவர் உரிய நேரத்தில் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். தி வயர் செய்தி தளத்தை வெளிப்படையாக இழிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறது.