Published:Updated:

`அவர்கள் மட்டும் வரவில்லை என்றால்?!' - டெல்லி வன்முறைக்கு இடையில் மீட்கப்பட்ட 80 குடும்பங்கள்

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

செவ்வாய்க்கிழமை காலை வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு சூழல் இருந்துள்ளதையும் அவர்கள் தெரிவித்தனர். அன்று இரவு சுமார் 100 பேரை காவல்துறையினர் மீட்டு காவல்நிலையத்தில் தங்க வைத்துள்ளனர்.

டெல்லியின் வடகிழக்கு பகுதிகள் வன்முறையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வன்முறையின்போது களத்தின் சூழலை சரியாகக் கையாளவில்லை எனக் காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறன. இந்த நிலையில், வன்முறைகளுக்கிடையே காவலர்கள் கோகுல்பூரி பகுதியில் வசிக்கும் சுமார் 80 குடும்பங்களைப் பத்திரமாக மீட்டு காவல்நிலையத்தில் தங்க வைத்துள்ளனர்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

மீட்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, ``நாங்கள் அனைவரும் கடந்த 35 ஆண்டுகளாக கங்கா நகரில் வசித்து வருகிறோம். எந்தப் பிரச்னையையும் நாங்கள் சந்தித்தது இல்லை. மஜ்பூர் மற்றும் பாபர்பூர் பகுதிகளில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து சில வதந்திகள் எங்களைச் சுற்றி வந்தன. சிலர் எங்களது வீடுகளைத் தாக்கினர். காவல்துறையினருக்கு இதுதொடர்பாகத் தகவல்களைத் தெரிவித்தோம். அவர்கள் சரியான நேரத்துக்கு வரவில்லை என்றால், நாங்கள் இன்று பிழைத்திருக்க மாட்டோம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி வன்முறை வழக்கில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட `1984'... அப்போது என்ன நடந்தது?

``செவ்வாய்க்கிழமை காலை நிலைமை மோசமாக உள்ளது என அறிந்தோம். வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு சூழல் இருந்துள்ளது. அவர்களைப் பத்திரமாக மீட்டதற்கு நன்றி" என மீட்கப்பட்டவர்களின் உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அன்று இரவு சுமார் 100 பேரை காவல்துறையினர் மீட்டு காவல்நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். ஆனால், அடுத்தநாள் அங்கிருந்து புறப்பட்டு சிலர் தங்களது உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். தற்போது நிலைமைகள் இயல்புக்கு மெதுவாகத் திரும்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டக்களத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த வன்முறையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான நபர்கள் காயமடைந்துள்ளனர். தற்போது வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில், மேலும் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெல்லி வன்முறை: கபில் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டும் அரசியல் பின்னணியும்!
அடுத்த கட்டுரைக்கு