Published:Updated:

பழங்குடி மக்களின் நீண்டகால கோரிக்கை... குடும்ப அட்டை, ஆதார் அட்டையை நேரில் வழங்கிய அதிகாரிகள்!

கோரிக்கை

ஆறுபாதி மேட்டிருப்பு, காழியப்பநல்லூரில் தங்கியுள்ள பழங்குடியினக் குடும்பங்களின் பல ஆண்டு கோரிக்கையான புதிய குடும்ப அட்டை, ஆதார் அட்டையை அதிகாரிகளே நேரில் சென்று வழங்கியதால் பழங்குடியினக் குடும்பங்கள் மகிழ்ச்சியில் திளைத்தன.

பழங்குடி மக்களின் நீண்டகால கோரிக்கை... குடும்ப அட்டை, ஆதார் அட்டையை நேரில் வழங்கிய அதிகாரிகள்!

ஆறுபாதி மேட்டிருப்பு, காழியப்பநல்லூரில் தங்கியுள்ள பழங்குடியினக் குடும்பங்களின் பல ஆண்டு கோரிக்கையான புதிய குடும்ப அட்டை, ஆதார் அட்டையை அதிகாரிகளே நேரில் சென்று வழங்கியதால் பழங்குடியினக் குடும்பங்கள் மகிழ்ச்சியில் திளைத்தன.

Published:Updated:
கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி ஊராட்சி மேட்டிருப்புப் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள், சிறு குடிசைகள் அமைத்துத் தங்கி பிளாஸ்டிக் பொருள்கள், கண் திருஷ்டி பொம்மைகள் விற்பனை செய்து வாழ்வாதாரம் ஈட்டிவருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு எந்த ஓர் அடையாளச் சான்றோ, குடும்ப அட்டையோ இல்லாததால் அத்தியாவசியப் பொருள்களைப் பெற முடியாமல் வாழ்ந்துவந்தனர்.

கோரிக்கை
கோரிக்கை

இவர்கள் தங்களுக்கு அடையாளச் சான்றுகளாகவும், நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறவும், அரசு நிவாரணங்கள் பெறவும் குடும்ப அட்டை வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்துவந்தனர். அதே போன்று தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூரிலும் தங்கியுள்ள சுமார் 10 -க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குடும்பத்தினரும் இதே கோரிக்கையை வைத்திருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக தற்போது ஆறுபாதி மேட்டிருப்பு, காழியப்பநல்லூரில் தங்கியுள்ள பழங்குடியினக் குடும்பங்களில் 15 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை, ஆதார் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

கோரிக்கை
கோரிக்கை

இதைத் தரங்கம்பாடி வட்டவழங்கல் அலுவலர் பாபு மற்றும் துறை அதிகாரிகள் நேரில் சென்று அவர்களிடம் வழங்கினர். பல ஆண்டு கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பழங்குடியினக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.