Published:Updated:

பஞ்சாப்: ``ஆளுநரின் முடிவால் ஜனநாயகம் முடிந்துவிட்டது” - அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்

பகவந்த் மான் - அரவிந்த் கெஜ்ரிவால்

``இப்போது ஜனநாயகம் என்பது கோடிக்கணக்கான மக்களா.. அல்லது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்படுவதா?" - பகவந்த் மான்

பஞ்சாப்: ``ஆளுநரின் முடிவால் ஜனநாயகம் முடிந்துவிட்டது” - அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்

``இப்போது ஜனநாயகம் என்பது கோடிக்கணக்கான மக்களா.. அல்லது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்படுவதா?" - பகவந்த் மான்

Published:Updated:
பகவந்த் மான் - அரவிந்த் கெஜ்ரிவால்

சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க அணுகியிருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பாஜகவை சாடி வருகின்றனர். `ஆபரேஷன் தாமரை’ மூலம் பஞ்சாபில் அரசைக் கவிழ்க்க பா.ஜ.க மேற்கொண்ட விலை பேசும் முயற்சிகள் குறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும் ஆம் ஆத்மி கட்சித் தலைமை, சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானம் மூலம் தங்கள் எம்.எல்.ஏ-க்கள் அப்படியே இருப்பதை நிரூபிக்க விரும்பியது.

எனவே, பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர, சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற ஆம் ஆத்மி அரசு கோரிக்கை முன்வைத்தது. அதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செப்டம்பர் 22-ம் தேதி பஞ்சாப் சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கான உத்தவு பிறப்பித்த நிலையில், தற்போது அதை திரும்பப்பெற்றிருப்பது பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அவரின் முடிவு மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) இடையே பெரும் மோதலை தூண்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் ஆளுநரின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்திருக்கும் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், ``அமைச்சரவையின் கூட்டத்தொடரை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? இரண்டு நாள்களுக்கு முன்பு ஆளுநர் அமர்வுக்கு அனுமதி அளித்தார். தாமரை கட்சி, அனுமதியை திரும்பப் பெறும்படி மேலே இருந்து தகவல் கொடுத்தவுடன் அவர் நிராகரிக்கிரார் என்றால்... அப்போது ஜனநாயகம் முடிந்துவிட்டது எனப் பொருள்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆளுநரின் இந்த நடவடிக்கையை விமர்சித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்வீட்டர் பதிவில், “சட்டசபையை கவர்னர் நடத்த அனுமதிக்காதது நாட்டின் ஜனநாயகத்தின் மீது பெரிய கேள்விகளை எழுப்புகிறது... இப்போது ஜனநாயகம் என்பது கோடிக்கணக்கான மக்களா.. அல்லது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்படுவதா..." எனப் பதிவிட்டிருக்கிறார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

சண்டிகரில் செய்தியாளர் சந்திப்பில் பஞ்சாபின் எரிசக்தி துறை அமைச்சர் அமன் அரோரா, "எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான பர்தாப் சிங் பஜ்வா, தனது Z+ பிரிவு பாதுகாப்பைப் பாதுகாக்க பா.ஜ.க-வின் இசைக்கு நடனமாடுகிறார். ஜனநாயகத்தை சேமிப்பதில் அவருக்கு அக்கறை இல்லை. கடந்த 52 ஆண்டுகளில் 27 முறை நம்பிக்கையில்லாப் கூட்டம் பல்வேறு கட்சிகளால் தொடங்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்

இது தொடர்பாக பஞ்சாப் ஆளுநர், ``பஞ்சாப் அரசால் கூட்டப்படும் நம்பிக்கைத் தீர்மானத்தை பரிசீலிப்பது தொடர்பான குறிப்பிட்ட விதிகள் இல்லாததால் முந்தைய உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார். பஞ்சாப் ஆளுநரின் முடிவை ஆதரித்த பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா தனது ட்வீட்டர் பதிவில் "பஞ்சாப் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை ரத்து செய்வதற்கான பஞ்சாப் ஆளுநரின் முடிவு வரவேற்கத்தக்கது" எனப் பதிவிட்டிருக்கிறார்.