கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 19-வது வார்டு உறுப்பினரான கல்பனா (40) அறிவிக்கப்பட்டுள்ளார். இது திமுக-வினர் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்புக்கும் சர்ப்ரைஸான முடிவாக வந்துள்ளது. கோவை மேயராக பலரது பெயர்கள் அடிபட்டாலும், கடந்த இரண்டு நாள்களாக கல்பான பெயர் பலமாக அடிபட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து நம் விகடன் இணையதளத்தில் நேற்றே தகவல் வெளியிட்டிருந்தோம். கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் மணிகாரம்பாளையம் பொறுப்புக்குழு உறுப்பினராக இருக்கிறார்.
கணவன், மனைவி இணைந்து ஓர் பொதுசேவை மையம் நடத்திவருகின்றனர். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா 10-ம் வகுப்பு படித்துள்ளார். பாரம்பர்ய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். `கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்’ என்கிற பெருமையுடன்,

திமுக சார்பில் கோவை மாநகராட்சியின் முதல் மேயராகப் பதவி ஏற்பவர் என்கிற பெருமையையும் பெறுகிறார். சீனியர்கள் பலரும் மேயர் பதவிக்கு முட்டி மோதினாலும், அவர்கள் மீது ஏராளமான புகார்களும் சர்ச்சைகளும் இருந்தன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதனால் எந்தப் புகாரிலும் சிக்காதவராகவும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விசுவாசமாக, கட்சியிலும் நீண்டகாலமாக இருப்பவர்தான் மேயர் சாய்ஸாக இருந்தனர். இந்த அத்தனை பாக்ஸ்களுக்கும் கல்பனா பெயர் டிக் அடிக்கப்பட்டது.

கல்பனா மிகவும் எளிமையானவர். வெற்றிபெற்ற பிறகு முதல்வர் ஸ்டாலினை ச்சந்திக்க சென்னைக்குப் பேருந்தில் சென்று வந்தவர் என கட்சிக்காரர்கள் கூறுகின்றனர். “கோவை மாநகராட்சியை தமிழ்நாட்டின் நம்பர் 1 மாநகராட்சியாகக் கொண்டு வருவதே லட்சியம்” என்று கல்பனா கூறியுள்ளார். கல்பனா தரப்பில் மகிழ்ச்சியில் இருந்தாலும், மேயர் பதவியை எதிர்பார்த்த சீனியர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருக்கும் 72-வது வார்டில் வெற்றிபெற்ற, வெற்றிச்செல்வன் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை திமுக நிர்வாகிகள் பலர் வேலுமணியின் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டதாகப் புகார் எழுந்துவருகிறது.

ஆனால், அவரது சொந்த வார்டில் இருந்துகொண்டே, தொடர்ந்து வேலுமணியை எதிர்த்து அரசியல் செய்து வெற்றியும்பெற்ற காரணத்துக்காக வெற்றிச்செல்வன் துணை மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவருகிறார்.
வேலுமணி வார்டில் துணை மேயரை நியமித்ததுடன், தேர்தல் நேரத்தில் செய்த உள்ளடி வேலை காரணமாக மூத்த நிர்வாகிகளுக்குக் கொடுக்காமல், சாதாரண பின்னணியில் வந்த ஒருவருக்கு கொடுத்து செக் வைத்துள்ளனர்.