Published:Updated:

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0: `குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை' - அதிகாரிகளை அலர்ட் செய்த சைலேந்திரபாபு

சைலேந்திரபாபு

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0: `குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை' - அதிகாரிகளை அலர்ட் செய்த சைலேந்திரபாபு

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Published:Updated:
சைலேந்திரபாபு

ஆபரேஷன் `கஞ்சா வேட்டை 2.0' ஒரு மாதம் நடத்த வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

அந்தச் சுற்றறிக்கையில்,

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும், தொடர்ச்சியாக இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்.

சுற்றறிக்கை
சுற்றறிக்கை

கஞ்சா, குட்கா பதுக்கல் மற்றும் விற்பனைச் சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக்கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி, ரகசியத் தகவல் சேகரிக்க வேண்டும். ஆந்திர மாநில கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர போலீஸாருடன் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதை தடுப்புப் பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கஞ்சா கடத்திச் செல்பவர்களை கண்காணித்து கைது நடவடிக்கைகளில் ரயில்வே காவல்துறையினர் ஈடுபட வேண்டும். காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு தலைமை காவலர்களுக்கு தஞ்சாவூர் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை அளிக்க வேண்டும். மேலும் பார்சல் மூலமாக போதை மாத்திரை மற்றும் போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களைத் தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும். இந்தப் பணியை கூடுதல் காவல் ஆணையர் சட்டம் ஒழுங்கு தினமும் கண்காணித்து மாநில கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுற்றறிக்கை
சுற்றறிக்கை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism