Published:Updated:

``பட்டினப்பிரவேசத்துக்கு ஸ்டாலின் ஆட்சியில் சிறு நெருடல், ஆனால்..!" - தருமை ஆதீனம் பேட்டி

தருமை ஆதீனம்

`பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசால் சிறு நெருடல் ஏற்பட்டது. ஆனால், அதை அவர் உடனே சரி செய்துவிட்டார்.' - தருமபுரம் ஆதீனம்

``பட்டினப்பிரவேசத்துக்கு ஸ்டாலின் ஆட்சியில் சிறு நெருடல், ஆனால்..!" - தருமை ஆதீனம் பேட்டி

`பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசால் சிறு நெருடல் ஏற்பட்டது. ஆனால், அதை அவர் உடனே சரி செய்துவிட்டார்.' - தருமபுரம் ஆதீனம்

Published:Updated:
தருமை ஆதீனம்

``பாரம்பர்யமிக்க பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசால் சிறு நெருடல் ஏற்பட்டது. ஆனால், அதை அவர் உடனே சரி செய்துவிட்டார்!" என தருமபுரம் ஆதீனம் தெரிவித்திருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்காக வந்து தங்கியிருக்கும், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், `` `அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை' என 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் திருக்குறளிலிருந்து தெரியவருகிறது. `சிவிகைப் பல்லக்கில் பழைமை, புண்ணியம் செய்வார்கள்... செல்வார்கள்' என பரிமேலழகர் இந்தக் குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயதான திருஞானசம்பந்தர் அமர்ந்த பல்லக்கை, 80 வயது அப்பர் சுவாமிகள் சுமந்து 'இதனால் நான் பேறு பெற்றேன்' என்று குறிப்பிடுகிறார். 300 ஆண்டுகளுக்கு முன்பு அபிராமி பட்டர் சிவிகை பற்றி குறிப்பிடுகிறார். எனவே, பல்லக்கு மனிதனை மனிதன் சுமப்பது அல்ல.

பட்டினப்பிரவேச
பட்டினப்பிரவேச
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குருநாதரை சீடர்கள் சுமப்பது. சபரிமலையில் டோலி சுமப்பதுபோல, கேதாரிநாத், பத்ரிநாத்திலும் பக்தர்களை மனிதர்கள் சுமக்கிறார்கள். இதனால் மனித உரிமை மீறல் ஏற்படுகிறது எனச் சொல்வது அழகல்ல. சிவிகை, திருச்சின்னம், விசிறி, கை தீவிட்டி இவை அனைத்தும் ஆச்சாரிய மூர்த்திகளுக்கு உரியது. குருபூஜையையொட்டி 10 நாள் விழாவில் கைப்பல்லக்கில் செல்வதும், 11-ம் நாளில் சிவிகைப் பல்லக்கில் செல்வதும் ஆதீன மரபாக உள்ளது. எல்லா நாளிலும் மடத்தைச் சுற்றி நடந்தும், காரிலும் சென்றுவருகிற போதிலும், மடத்துக்குள் சென்று குருமகா சந்நிதானத்தை பார்க்க முடியாதவர்களுக்காக குருமகா சந்நிதானமே வீதியுலாவாக செல்வார். அவருக்கு வீடுகளில் பக்தர்கள் பூரணக் கும்ப மரியாதை செலுத்துவார்கள்.

ஆதீனம்
ஆதீனம்

குமரகுருபரருக்கு மதுரை திருமலைநாயக்க மன்னர் பட்டினப்பிரவேசம்  நடத்தியிருக்கிறார். வெள்ளியம்பலவான முனிவருக்கு கர்நாடக ராஜபரம்பரையில் பட்டினப்பிரவேசம் நடத்தியுள்ளனர். ஆதீன விருத்தாச்சல தம்பிரானுக்கு திருவனந்தபுரம் மன்னர் பட்டினப்பிரவேசம் நடத்தியுள்ளார். தருமபுரம் ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் காலத்தில் சுதந்திரத்துக்கு முன்பு நடைபெற்ற பட்டினப்பிரவேசம் நிகழ்வில் ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். பின்னர் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், கலைஞரின் ஆட்சியிலும் பட்டினப்பிரவேசம் நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலத்தில்தான் தற்போது சிறு நெருடல் ஏற்பட்டது. அதையும், உடனடியாக அவர் நீக்கம் செய்து பாரம்பர்ய விழா நடைபெற வேண்டும் என்று கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக முயற்சிகளை மேற்கொண்ட முதல்வர், அமைச்சர், துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் பக்தர்களுக்கு அருளாசிகள். வருகின்ற 22-ம் தேதி பட்டினப்பிரவேசம் மிகச் சிறப்பாக நடைபெறும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism