Published:Updated:

`` `விவசாயிகள் எனக்காக இறந்தார்களா?’ என்றார் மோடி!" - மேகாலயா ஆளுநர்

மோடி - சத்திய பால் மாலிக்
News
மோடி - சத்திய பால் மாலிக்

``பிரதமர் நரேந்திர மோடி திமிர் பிடித்தவர்’’ என மேகாலயா ஆளுநர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேகாலயா ஆளுநர் சத்திய பால் மாலிக் சமீபத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர் கூறியிருக்கிறார். பிரதமருடனான சந்திப்பு குறித்து ஹரியானாவிலுள்ள தாத்திரியில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோது பேசிய ஆளுநர் சத்ய பால் மாலிக், ``விவாதிக்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி மிகவும் கோபத்துடனும் ஆணவத்துடனும் பேசினார்.

மோடி
மோடி

எங்கள் விவசாயிகள் 500 பேர் இறந்துவிட்டார்கள் என்று நான் அவரிடம் கூறியபோது பிரதமர் அதற்கு, `அவர்கள் எனக்காக இறந்தார்களா?' என்று கேட்டார். அதற்கு நான் `ஆம்’ என்று பதிலளித்தேன். `ஏனென்றால் நீங்கள்தான் இந்தியாவின் பிரதமர்’ எனக் கூறினேன். இறுதியாக நான் பிரதமரிடம் இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்தேன். பின்னர், அவர் என்னிடம் அமித் ஷாவைச் சந்திக்குமாறு கூறினார். நான், அதையும் செய்தேன்"என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த ஆளுநர் சத்திய பால் மாலிக், ``இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அரசு நினைத்தால், அது நிச்சயம் கிடையாது. போராட்டம் நிறுத்தி மட்டும்தான் வைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்குக் கொடுமையோ அல்லது அநீதியோ ஏற்பட்டால் போராட்டம் மீண்டும் தொடங்கும். எந்தச் சூழ்நிலையிலும் நான் விவசாயிகளுடன் துணை நிற்பேன்" எனக் கூறினார்.

சத்திய பால் மாலிக்
சத்திய பால் மாலிக்

தொடர்ந்து பேசியவர், ``வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின்போது விவசாயிகள்மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். பயிர்களுக்குக் `குறைந்தபட்ச ஆதரவு விலை' நிர்ணயிக்க சட்டபூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.