Published:Updated:

``பிரதமர் மோடியின் ரூ.15 லட்சம் யாருக்காவது கிடைத்ததா?!” - ராகுல் காந்தி கேள்வி

ராகுல் காந்தி - காங்கிரஸ்

``பிரதமர் மோடியின் ரூ.15 லட்சம் யாருக்காவது கிடைத்ததா?” என பஞ்சாப் மாநிலத் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளை அளித்துவருகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வேன் எனக் கூறினார். ரூ.15 லட்சம் யாருக்காவது கிடைத்ததா?

மோடி- ராகுல் காந்தி
மோடி- ராகுல் காந்தி

இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று கூறினார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவருகிறது. ஆனால், பிரதமர் மோடி வேலைவாய்ப்பு, கறுப்புப் பணம் போன்ற பிரச்னைகள் பற்றிப் பேசுவதில்லை. பஞ்சாப்பில் விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் போராடினார்கள். போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில்கூட இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தவோ, அவர்களுக்கு இழப்பீடு தரவோ முடியவில்லை. ஆனால் பஞ்சாப் மாநில அரசு அவர்களுக்காக உதவி செய்தது" எனக் கூறினார்.