Published:Updated:

கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்? - வலுக்கும் எதிர்ப்பும்... திமுக-வின் பதிலும்!

கருணாநிதி - பேனா நினைவுச் சின்னம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையை போற்றும்விதமாக, சுமார் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் அவர் பயன்படுத்திய பேனாவின் சிலை அமைக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்? - வலுக்கும் எதிர்ப்பும்... திமுக-வின் பதிலும்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையை போற்றும்விதமாக, சுமார் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் அவர் பயன்படுத்திய பேனாவின் சிலை அமைக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
கருணாநிதி - பேனா நினைவுச் சின்னம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையை போற்றும்விதமாக, அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை பிரமாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை விடப் பெரியதாக 134 அடி உயரத்தில் பேனா சிலை அமைக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், கடலில் அமையவிருக்கும் இந்த பேனா சிலைக்குச்செல்ல கரைமீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் என மொத்தம் 650 மீட்டர் தொலைவில், கடல்பரப்பிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் இரும்பாலான கண்ணாடிப் பாலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவுச்சின்னத்திற்கு `முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என்று பெயரிடப்படவுள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடம்
முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடம்

இந்த நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவற்காக தமிழ்நாடு பொதுப்பணித்துறை, CRZ (Coastal Regulation Zone) அனுமதிகேட்டு சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே, கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், மேலும் இரண்டு மடங்கு செலவில் புதியதாக கடலில் பேனா சிலை வைப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வலுக்கும் எதிர்ப்பு:

`யாருக்கு என்ன லாபம்?'

``மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்தில் ரூ.80 கோடியில் பிரமாண்ட பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கக் கூடாது. ரூ. 80 கோடியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைப்பதால் யாருக்கு லாபம்? நினைவுச்சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை சாலை வசதி, உட்கட்டமைப்பு வசதி, தொழில் வசதிகளை செலவு செய்ய பயன்படுத்தலாம். மக்கள் அதனை வரவேற்பார்கள். கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற நினைவுச்சின்னங்கள் இருக்கும் நிலையில் மெரினாவில் மீண்டும் நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமற்றது. நினைவுச்சின்னம் அவசியம் என்றால் தி.மு.க அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவுச்சின்னம் அமைக்கலாம். மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டும்" என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

`இன்று பேனா, நாளை காண்ணாடியா?'

``மெரினா கடலில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை நிறுவ முடியாது. அதை நிறுவ நான் விடப்போவதும் இல்லை. இப்போது பேனாவை வைப்பீர்கள். பின் கண்ணாடி வைப்பீர்களா? அடுத்து ஒருவேளை உதயநிதி முதலமைச்சராகி விட்டால் எங்க அப்பா விக் வைத்திருந்தார் என கடலுக்குள் விக் வைப்பீர்களா? ரூ. 39 கோடிக்கு சமாதி அமைக்கிறார்கள்... அந்த ரூ.39 கோடியில் கட்டி முடிப்பாரா? அதற்கு கணக்கு காட்டுவாரா? சரியாக ரூ.39 கோடியில் கட்டிமுடித்துவிட்டேன் என அறிக்கை விடுவாரா? யார் காசு இது? அரசு காசில் பேனா வைக்கிறேன்... அவர் பென்சில் வைச்சிருந்தார் பென்சில் வைக்கிறேன்... என்பதெல்லாம் சேட்டை தானே" என நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சீமான்
சீமான்

`வாக்குறுதியை நிறைவேற்ற பணம் இல்லை; ஆனால்...'

``தி.மு.க தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற பணம் இல்லையென தமிழ்நாடு நிதி அமைச்சர் கூறிய நிலையில், `கடலில் 80 கோடி ரூபாய்க்கு பேனா அமைப்பது ஏன்; வீண் செலவு எதற்கு' என்று நிதி அமைச்சர் கேட்பாரா? பேனாவுக்கு 80 கோடி. அந்த பேனாவுக்கு 'மை' நிரப்ப வருடா வருடம் எத்தனை கோடி என்பதையும் சொல்லிவிடுங்கள். இது தானே திராவிட மாடல்!" என தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

`சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்'

``மெரினா கடற்கரை தொடர்ச்சியாக பல்வேறு மாறுதலுக்குட்பட்டு வருகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் சென்னையை ஒட்டி கடலுக்குள் எழுப்பப்பட்ட துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால் மெரினா கடற்கரையில் அதிகமாக மணல் சேர்ந்து (Accretion) வருகிறது. ஒன்றிய புவி அறிவியல் துறை வெளியிட்ட National Assessment of Shoreline Changes along Indian Coast என்கிற ஆய்வறிக்கையில்(பக் 40) சென்னையில் குறிப்பாக மெரினா கடற்கரையில் அதிகமாக மணல் சேர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் மெரினாவை ஒட்டிய கடலுக்குள் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை அமைத்தால் இன்னும் சில பத்தாண்டுகளுக்குப் பின்பாக அக்கட்டுமானம் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது" என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கருணாநிதி - பூவுலகின் நண்பர்கள்
கருணாநிதி - பூவுலகின் நண்பர்கள்

`மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்படையும்'

மேலும், ``மீனவ பிரதிநிதிகள் இல்லாமலேயே கடலிலும், கடற்கரையிலும் அரசால் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களின் மீன்பிடி தகவல்களை அரசு முறையாக கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்யாமல் கடல்நடுவே முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்ன திட்டத்தை அமைத்தால் கரைத்தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் நடுக்கடலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் இந்த திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், மீனவர்களின் மீன்பிடி இடங்களை சட்டத்தில் கூறியுள்ள படி Tamil Nadu State Coastal Zone Management Authority-ல் பதிவு செய்ய வேண்டும்" என மீனவர் அமைப்புகளும் அரசை வலியுறுத்தியிருக்கின்றன.

கருணாநிதி சமாதி
கருணாநிதி சமாதி

தி.மு.க தலைவர்களின் மாறுபட்டக் கருத்து:

இந்த நிலையில், தி.மு.க அமைச்சர்கள் எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மாறுபட்ட விளக்கத்தை அளித்திருக்கின்றனர்.

`ஏற்கெனவே திட்டமிடப்பட்டதுதான்!' - அமைச்சர் எ.வ. வேலு:

``மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை அமைப்பது என்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றுதான். புதிய அறிவிப்பு அல்ல. கருணாநிதி நினைவிடம் அமைக்கும் பணிகள் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன. கடற்கரையோரமாக இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற்றே பணிகள் நடைபெறுகின்றன. முதல் பகுதிக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஒரே நேரத்தில் இரண்டு பணிகளுக்கும் அனுமதி கோரி மனு வழங்கியிருந்தோம் என்றாலும், இரண்டாம் கட்டப் பணிக்கு தற்போதுதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேனாவின் வடிவம் எப்படி அமையவுள்ளது என்பது குறித்து துறை சார்ந்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

எ.வ. வேலு
எ.வ. வேலு

கருணாநிதிக்கு இது போன்ற பணிகளை செய்வதற்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவருக்கு செய்யும் பணிகளை சிலர் சமூக வலைதளங்களிலும் அமைப்புகள் பெயரிலும் விமர்சிப்பது கருணாநிதிக்கு செய்யும் துரோகம். கருணாநிதிக்கு செய்ய வேண்டிய கடமையை இந்த அரசு கண்டிப்பாக செய்யும்" என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

`வெறும் பத்திரிகை செய்தி மட்டுமே!' - அமைச்சர் மா.சு:

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் பதிலுக்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பதில். அதாவது இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கமளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், ``மெரினா கடலுக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை. அது வெறும் பத்திரிகைகளில் வந்த செய்தி மட்டுமே!" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த மாறுபட்ட கருத்துக்கான காரணம் என்ன? கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது உள்ளிட்டக் கேள்விகளுடன் தி.மு.க தலைமைக்கழக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

``தலைவர் கருணாநிதிக்கு நினைவகம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது அதிகாரப்பூர்வமானது. ஆனால், அந்த நினைவகம் இப்படித்தான் அமைக்கப்படும் என எந்த மாடலையும் நாங்கள் சட்டமன்றத்தில் சொல்லவில்லை. அதேசமயம் மக்களுடைய பணத்தை அனுமதி இல்லாமல் நாங்கள் எடுக்கப்போவதில்லை. அறிவிக்கப்பட்ட நினைவகத்தில் ஒரு Extension தேவைப்பட்டால் அதற்குரிய அனுமதியை சட்ட மன்றத்திலும், சட்டரீதியாகவும் பெற்று திட்டத்தை தொடர்வோம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை

மேலும், தலைவர் கருணாநிதி ஒரு பெரிய எழுத்தாளர். அதனால் அவருடைய பேனாவுக்கு ஒரு நினைவுச்சின்னம் வைக்கலாம் என ஒரு Proposal கொடுத்திருக்கிறோம். அது விவாதிக்கப்பட்டு, தலைவர் கருணாநிதி எனும் ஒரு மாபெரும் எழுத்தாளருக்கு இந்த சிறப்பைச் செய்யலாம் என எல்லோரும் ஏற்றுக்கொண்டு, ஒன்றாகக் கூறினால் செய்வோம். இல்லையெனில் முதலமைச்சர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் இறுதி!" என்றார்.