Published:Updated:

தலைவி: தமிழகத்தில் ஜெயலலிதாவுக்காக கொ.ப.செ பதவியை எம்.ஜி.ஆர்-தான் அறிமுகப்படுத்தினாரா?

தலைவி
தலைவி

கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற பதவி தமிழகத்தில் முதன்முதலில் அதிமுக-வில்தான் உருவாக்கப்பட்டதா, ஜெயலலிதாவுக்காக எம்.ஜி.ஆர் பிரத்யேகமாக அதை உருவாக்கினாரா என மூத்த அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்...

பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆந்திர முன்னாள் முதல்வர்கள் என்.டி.ராமாராவ், ராஜசேகர் ரெட்டி, சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே ஆகியோர் வரிசையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைச் சொல்லும் படமாக வெளியாகியிருக்கிறது 'தலைவி.’

விஜய் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி, கருணாநிதியாக நாசர், ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, ஜானகி ராமசந்திரனாக மதுபாலா, சசிகலாவாக பூர்ணா நடித்திருக்கின்றனர். ஜெயலலிதா திரைத்துறையில் காலடி எடுத்து வைப்பதில் தொடங்கி, 1991-ல் முதன்முறையாக முதல்வரானது வரை படத்தில் காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன.

தலைவி
தலைவி

ஆரம்பகாலத்தில் திரைத்துறையில் ஒன்றாக நடித்தபோது எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நெருக்கமாக இருந்தபோதும், அவர் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு இருவருக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதாகக் கதையில் சொல்லப்படுகிறது. பிறகு, உலகத் தமிழர் மாநாட்டில் ஜெயலலிதாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், அப்போது இருவரும் சந்தித்துக் கொள்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிறகு கட்சியில், இணைந்து எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் பொறுப்பும், தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்படுவதாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பை அவருக்கு வழங்கும்போது, 'இது என்னங்க பதவி கேள்விப்பட்டதே இல்லை, அந்தம்மாவுக்காகவே உருவாக்கியிருப்பார்போல' எனக் கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாகவும் அடுத்ததாக, 'அது என்னங்க தலைவரே கொள்கை பரப்புச் செயலாளர்... இப்படி ஒரு போஸ்ட் ஊர் உலகத்துலேயே இல்லையே...' என எம்.ஜி.ஆரிடமே நேரடியாக நிர்வாகி ஒருவர் கேட்பதுபோலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. உண்மையில், கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற பதவி தமிழகத்தில் முதன்முதலில் அ.தி.மு.க-வில்தான் உருவாக்கப்பட்டதா, ஜெயலலிதாவுக்காக எம்.ஜி.ஆர் பிரத்யேகமாக அதை உருவாக்கினாரா என மூத்த அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்,

கருணாநிதி
கருணாநிதி

``அண்ணா, திமுக-வை ஆரம்பித்தபோது பொதுச்செயலாளராக அண்ணாவும் பிரசாரக்குழுச் செயலாளராக இரா.நெடுஞ்செழியனும், அமைப்புக்குழுச் செயலாளராக என்.வி.நடராஜனும், நிதிக்குழுச் செயலாளராக காஞ்சி மணிமொழியாரும் பதவி வகித்திருக்கின்றனர். கட்சியின் கொள்கைகளை எடுத்துச் செல்லும், பிரசாரக்குழுவில் மதியழகன், சம்பத், சிற்றரசு, கருணாநிதி, ஆசைத்தம்பி, டி.கே.சீனிவாசன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர். கட்சியின் தலைவராக கருணாநிதி வந்த பிறகு, கொள்கை பரப்புச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் பயோபிக் என்றால் சர்ச்சைகள் இருக்கக்கூடாதா? `தலைவி' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிசாவில் கைதாகி சிறையில் மறைந்த சிட்டிபாபு, கொள்கை பரப்புச் செயலாளராக பதவி வகித்திருக்கிறார். தொடர்ந்து, செ.கந்தப்பன், டி.ராஜேந்தர், கம்பம் செல்வேந்திரன், திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட பலர் இந்தப் பதவியில் இருந்திருக்கின்றனர். தற்போது திருச்சி சிவாவோடு, திண்டுக்கல் லியோனியும் சபாபதி மோகனும் தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக இருக்கின்றனர். தமிழக அரசியல் கட்சிகளில், அதிமுக-வில்தான் முதன்முதலில் இப்படியொரு பதவி உருவாக்கப்பட்டது என்பது தவறான தகவல். ஜெயலலிதாவுக்காக அந்தப் பதவியை எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வில் உருவாக்கியிருக்கலாம். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அப்போதுதான் அந்தப் பதவி கொண்டுவரப்பட்டது என்பது தவறு.

தலைவி படத்தில் கங்கனா
தலைவி படத்தில் கங்கனா

அதேவேளையில், ஜெயலலிதா இந்தப் பதவிக்கு வந்த பிறகு, நடிகையாக மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த அறிமுகம், அவரின் செயல்பாடுகள், இந்தப் பதவிக்கான மதிப்பையும் கூட்டியது. குறிப்பிட்ட தனியார் இதழ்கள், கொ.ப.செ பதவியை உயர்த்திப் பிடித்து எழுதவும், அது மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானது. ஆனால், ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேலி செய்தனர். அப்போது, 'ஜெயலலிதா கொள்கைகளை உருவாக்குபவர் அல்ல. கொள்கைகளைப் பரப்புபவர். கட்சியின் கொள்கைகளைப் பரப்ப கூட்டத்தை சேர்க்கின்ற ஆற்றல் வேண்டும். அந்தத் தகுதியும் ஆற்றலும் ஜெயலலிதாவுக்கு இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அதனால்தான், எம்.ஜி,ஆர்., ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்திருக்கிறார்' என எம்.ஜி.ஆரின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஆர்.எம்.வீரப்பன் விளக்கம் கொடுத்தார்’’ என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு