Published:Updated:

காரைக்கால்: பெண்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆறே மாதங்களில் முடங்கியதா... அமைச்சர் சொல்வதென்ன?!

அமைச்சர் சொல்வதென்ன?

அமைச்சர் தொடங்கி வைத்த `பெண்களுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டம்' ஓரிரு வாரங்களில் முடங்கிவிட்டதாக புகார்கள் எழுந்தன.

காரைக்கால்: பெண்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆறே மாதங்களில் முடங்கியதா... அமைச்சர் சொல்வதென்ன?!

அமைச்சர் தொடங்கி வைத்த `பெண்களுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டம்' ஓரிரு வாரங்களில் முடங்கிவிட்டதாக புகார்கள் எழுந்தன.

Published:Updated:
அமைச்சர் சொல்வதென்ன?

புதுச்சேரியில் சனிக்கிழமைதோறும்  போக்குவரத்து அலுவலகங்களில்  பெண்களுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டத்தை கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்தார். மேலும், பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில் ஜி.பி.எஸ், சிசிடிவி கேமராக்கள் வசதியுடன் கூடிய பிங்க் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் இதுவரை ஒரு பிங்க் கலர் பஸ்கூட இயக்கப்படவில்லை என்பது பெண்களின் ஆதங்கமாக இருக்கிறது.

சந்திர பிரியங்கா
சந்திர பிரியங்கா

இந்த நிலையில், பெண்களுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டத்தின் முகாமை காரைக்காலில் கடந்த ஜனவரி 29-ம் தேதி அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். இந்த முகாம் ஓரிரு வாரங்கள் மட்டுமே நடந்ததாகவும், தற்போது  போக்குவரத்துத்துறை அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன. அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு மீண்டும் சனிக்கிழமையில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் விளக்கம் கேட்டோம். ``பெண்களுக்கான சிறப்பு பேருந்து இயக்குவதற்கு அரசின் அனுமதி கிடைத்து, அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் அந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.

காரைக்கால் ஆட்சியர் அலுவலகம்
காரைக்கால் ஆட்சியர் அலுவலகம்

சனிக்கிழமை தோறும் பெண்களுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதுவை, மாஹி, ஏனாம், காரைக்கால் என எல்லாப் பகுதிகளிலும் இந்தத் திட்டம் நடைமுறையில்தான் இருக்கிறது.

பெண்களுக்கு வாரந்தோறும் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் குறித்த புள்ளி விவரமும் என்னிடமிருக்கிறது. தவறான தகவல்கள் பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.