Published:Updated:

டிஜிட்டல் தலையங்கம்: `ஜெய் பீம்' படத்துக்குப் பிறகும் எதுவுமே மாறவில்லை?

டிஜிட்டல் தலையங்கம்

80 வயதில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால், அவர் எவ்வளவு தூரம் இந்த அதிகார அமைப்பின்மீது நம்பிக்கை இழந்திருப்பார்! 38 ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவருக்குப் பழங்குடி சான்றிதழ் கிடைக்காததற்குக் காரணம் என்ன?

டிஜிட்டல் தலையங்கம்: `ஜெய் பீம்' படத்துக்குப் பிறகும் எதுவுமே மாறவில்லை?

80 வயதில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால், அவர் எவ்வளவு தூரம் இந்த அதிகார அமைப்பின்மீது நம்பிக்கை இழந்திருப்பார்! 38 ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவருக்குப் பழங்குடி சான்றிதழ் கிடைக்காததற்குக் காரணம் என்ன?

Published:Updated:
டிஜிட்டல் தலையங்கம்
80 வயதில் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. அரசுகள் மாறினாலும், புதிது புதிதாக அறிவிப்புகள் வந்தாலும், பழங்குடிகளின் நிலை மாறவே இல்லை என்ற அவலகரமான உண்மையை இந்தத் தற்கொலை உணர்த்துகிறது.

"38 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைக்காகப் போராடி வந்தேன். ஆனால், எந்தப் பலனும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் பெரியசாமி.

பெரியசாமி இறப்புக்குப் பின்னான போராட்டம்
பெரியசாமி இறப்புக்குப் பின்னான போராட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தில் கீளப்பூடி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பெரியசாமி. கொண்டா ரெட்டி என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். தனக்கும் தன் சமூக மக்களுக்கும் பழங்குடி சாதி சான்றிதழ் கேட்டு தொடர்ச்சியாகப் போராடி வந்தார். இதற்காக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்துள்ளார். தன் சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் கிடைப்பது போலவே அலட்சியமான பதில்களும் சமாதானமான வார்த்தைகளும் மட்டுமே அப்போதும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் ஜூலை 4-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை பள்ளிப்பட்டு தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் உள்ள கல்வெட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பெரியசாமி. கடந்த வாரம் பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் பிரச்னை தொடர்பாக முறையிட்டபோது அவர் அவமானப்படுத்தப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கிராம மக்களும் அவர் சமூகத்தினரும் கூறுகின்றனர். இதைக் கண்டித்து அவர்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வழக்கம் போலவே இம்முறையும் சமாதான வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன.

பெரியசாமி இறப்புக்குப் பின்னான போராட்டம்
பெரியசாமி இறப்புக்குப் பின்னான போராட்டம்
80 வயதில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால், அவர் எவ்வளவு தூரம் இந்த அதிகார அமைப்பின்மீது நம்பிக்கை இழந்திருப்பார்! 38 ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவருக்குப் பழங்குடி சான்றிதழ் கிடைக்காததற்குக் காரணம் என்ன? கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பழங்குடியினருக்கு சாதி சான்றிதழும், அதன்மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீடுமே சமூகத்தில் உயர்வு பெறுவதற்கான ஏணிகளாக இருக்கின்றன. அந்த ஏணிகளை அவர்களுக்குக் கொடுக்க மறுப்பது என்ன நியாயம்?

'ஜெய் பீம்' திரைப்படம் வெளியானபோது தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகுந்த வேதனையுடன் பழங்குடிகள் நிலை குறித்துப் பேசினார். பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, சாதி சான்றிதழ்களை விரைந்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு அப்போது செய்ய ஆரம்பித்தது. ஆனால், 'ஜெய் பீம்' படத்துக்குப் பிறகும் எதுவுமே மாறவில்லை என்பதை பெரியசாமியின் தற்கொலை உணர்த்துகிறது.

பெரியசாமி இறப்புக்குப் பின்னான போராட்டம்
பெரியசாமி இறப்புக்குப் பின்னான போராட்டம்

ஒவ்வொரு பகுதியிலும் பழங்குடியினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வருவாய்க் கோட்டாட்சியர்களுக்கு இருக்கிறது. முறையாக விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்குவதற்கு நெறிமுறைகளுகும் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. இருந்தும், பழங்குடியினருக்கு மட்டும் சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒவ்வோராண்டும் கல்லூரி சேர்க்கை நேரத்தில், இந்த சான்றிதழ் கிடைக்காததால் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட எத்தனையோ பிள்ளைகள் கண்ணீர் மல்க கல்வி நிறுவனத்துக்கு வெளியில் நிற்பார்கள். நீதிமன்றங்கள் பலமுறை அரசுத்துறை செயலாளர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டித்துள்ளன. ஆனாலும் நிலைமை மாறவில்லை.

அரசும் அதிகாரிகளும் தங்கள் கடமையைச் செய்ய, இன்னும் எத்தனை பெரியசாமிகளின் உயிர்கள் தேவைப்படும்?