‘தி.மு.க-வின் வெற்றி உறுதி’ என்று ரிசர்வேஷனில் காத்திருந்த உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது ‘அண்ணாத்த’ அரசியல் பிரவேசம். ரஜினிகாந்த் ஆரம்பிக்கவிருக்கும் புதிய கட்சி, வருகிற சட்டமன்றத் தேர்தலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்த கேள்விகளோடு தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனியிடம் பேசினேன்...

“ரஜினிகாந்தின் அரசியல் வரவு தி.மு.க-வுக்கு மிகப்பெரிய அதிர்ச்சிதானே..?’’

“ `அரசியலுக்கு வருகிறேன்’, `கட்சி பெயரை அறிவிக்கிறேன்’ என்றெல்லாம் அவர் இன்று, நேற்றா சொல்லிவருகிறார்... ஒவ்வொரு முறையும் ‘தலைவர் இன்று கட்சி பெயரை அறிவித்துவிடுவார்’ என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு வந்து சேர்வார்கள். ஆனால், அவரோ, ‘நீங்கள் எல்லாம் போய் உங்க வேலையைப் பாருங்கள்... நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ஷூட்டிங்குக்குக் கிளம்பிவிடுவார். இதைக் கேட்டுக் கேட்டு அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல... ஜனங்களுக்குமே புளித்துப் போய்விட்டது. எனவே, இனி அவர் உண்மையிலேயே கட்சி ஆரம்பித்தால்கூட, பொதுமக்களுக்கே அது அதிர்ச்சியாக இருக்காது என்கிறபோது, தி.மு.க-வுக்கு அதிர்ச்சியாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை!’’

“இந்தமுறை ‘இப்போது இல்லையென்றால், எப்போதுமே இல்லை’ என்று உறுதிபடக் கூறிவிட்டாரே..?’’

“ரஜினிகாந்த் முதல்வராக வர வேண்டும் என்றுதான் அவரின் ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால், அவரோ ‘நான் முதல்வர் வேட்பாளர் இல்லை’ என்று அறிவித்துவிட்டார். அன்றே அவரது ரசிகர்கள், ‘இப்படியோர் அரசியலுக்கு இவர் வந்தாலும் பிரயோசனமில்லை’ என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.

இப்போதும்கூட ‘எனக்கு உடல்நிலை சரியில்லை... அரசியல் எனக்கு வேண்டாம், வேண்டாம்’ என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு ஓடியவர்தான் ரஜினி. ஆனால், அவரை நிர்பந்தப்படுத்திக்கொண்டு வந்து நிறுத்துவது பா.ஜ.க-தான். ஆக, ஒரு பொம்மை நிலையில்தான் ரஜினி இருக்கிறார். அவருக்கு கீ கொடுத்து இயக்கும் இடத்தில் பா.ஜ.க-வினர் இருக்கிறார்கள்!’’

“ `காவிச் சாயத்துக்குள் நான் சிக்க மாட்டேன்’ என்பவரை, ‘பா.ஜ.க இயக்குகிறது’ என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்?’’

“செய்தியாளர் சந்திப்பின்போது, ரஜினிகாந்தின் பின்னணியில் நின்று கொண்டிருந்த அர்ஜுனமூர்த்தி பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவுத் தலைவராக இருந்தவர். அவரைத்தான் தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று ரஜினி அறிவித்திருக்கிறார். அதையும்கூட அவரிடமே ‘தலைமை ஒருங்கிணைப்பாளர்தானே..?’ என்று கேட்டுத் தெளிவாக்கிக்கொண்டு அறிவிக்கிறார். ‘அன்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உண்மைக்கும் விசுவாசத்துக்கும் பற்றுக்கும் நம்பிக்கைக்கும் உரிய அருமை அண்ணன்....’ என்று நீட்டி முழக்கிவிட்டு, பக்கத்திலிருப்பவரிடம் ‘அவரு பேரு என்னய்யா...’ என்று கேட்பதுபோல் இருக்கிறது ரஜினியின் இந்த காமெடி!’’

“1972-ல் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது தி.மு.க-வுக்கு ஏற்பட்ட பாதிப்பு, 2021-ல் ரஜினியால் நிகழும் என்கிறார்களே?’’

“அதற்கு 100% வாய்ப்பில்லை ராஜா..!

எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்தபோது, பிரசாரம் உள்ளிட்ட கட்சி நடவடிக்கைகளின் வழியே மக்களின் நாடித்துடிப்பை அறிந்திருந்தார். தான் நடிக்கும் படங்களிலும் பாட்டு, வசனம், கறுப்பு-சிவப்பு உடையலங்காரம் என அனைத்து வழிகளிலும் தன் கட்சிக் கொள்கைகளைப் பதியவைத்தார். கட்சியின் மாநிலப் பொருளாளராக உயர்ந்தார். அனைத்துக்கும் மேலாக, அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர் எனப் பெரிய ஆளுமைகளோடு நீண்ட நெடிய அரசியல் பயணம் மேற்கொண்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், ரஜினி..?’’

“ரஜினி கட்சி ஆரம்பித்துவிட்டால், தி.மு.க-விலுள்ள அவரது ரசிகர்கள் வெளியேறிவிடுவார்கள்தானே..?’’

“தி.மு.க-வில் அநேகமாக ரஜினி ரசிகர்கள் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், தமிழ் மக்களுக்கான எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கேற்றதில்லை. காவிரி பிரச்னையில்கூட, நழுவி ஓடி ஒளிந்து கொண்டாரே தவிர... தைரியமாகக் குரல் கொடுக்கவில்லை. தி.மு.க-வில் ரஜினி ரசிகன் இருந்தாலும்கூட அவனும் ‘அரசியல் ரஜினிக்கு’ ஓட்டுப் போட மாட்டான். உதாரணமாக, நானே ரஜினி ரசிகன்தான்... படத்தில் அவரது நடிப்பைக் கைதட்டி ரசித்துப் பார்த்திருக்கிறேன். நேரில் சந்தித்தபோது, அவரது கைக்கு முத்தமெல்லாம் கொடுத்திருக்கிறேன். தி.மு.க-விலுள்ள ரஜினி ரசிகர்களும்கூட, என்னைப்போல் ‘சினிமா ரஜினி’யைத்தான் ரசிப்பார்களே தவிர... அவர் அரசியலுக்கு வருவதை விரும்ப மாட்டார்கள்!’’

“2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி பிரித்த 6% வாக்குகள்தான் தி.மு.க-வைத் தோல்வியடைய வைத்தது. 2021 தேர்தலில், அப்படியொரு பாதிப்பை ரஜினி உண்டாக்குவார் என்கின்றனரே..?’’

“2016-ல் கலைஞர், ஜெயலலிதா என இரு தலைவர்களுமே உயிரோடு இருந்தனர். தி.மு.க-அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வர வேண்டிய நடுநிலை வாக்குகள்தான் மக்கள் நலக் கூட்டணிக்குப் போனது. ஆனால், இப்போது சூழலே வேறு. தி.மு.க-வுக்குப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. மக்களிடையே ஈர்ப்புமிக்க ‘சிங்கிள் லீடரா’க ஸ்டாலின் இருக்கிறார். இவருக்குச் சமமான தலைவர் என்று எதிர்த்தரப்பில் யாரும் இல்லை. மக்கள் நலக் கூட்டணியிலிருந்த கட்சிகளும்கூட இன்றைக்கு தி.மு.க கூட்டணியில்தான் உள்ளன. இந்தநிலையில், மக்கள் நலக் கூட்டணி பிரித்ததுபோல ரஜினியும் வாக்குகளைப் பிரிப்பார் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை!’’

“ `ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு உண்டு’ என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே..?’’

“தன்னுடைய மனதில் இருப்பதை ஓப்பனாக ‘டபக்’கென்று சொல்லிவிடுபவர் ஓ.பி.எஸ். அதனால்தான், பா.ஜ.க-வோடு கூட்டணியில் இருப்பதற்கு பதிலாக, ரஜினியோடு கூட்டணி போட்டுக்கொண்டாலாவது 20% வாக்குகளாவது வாங்குவோம் என்றெண்ணிச் சொல்லிவிட்டார். இப்படியொரு கூட்டணி அமைந்தால், அதை அ.தி.மு.க தொண்டர்களே ரசிக்க மாட்டார்கள். எனவே, அது தி.மு.க-வுக்குத்தான் கூடுதல் சாதகமாகும்!’’