Published:Updated:

``அண்ணாமலைக்கு தமிழ் மீதும், தமிழர் மீதும் அக்கறை கிடையாது" - இயக்குநர் அமீர் காட்டம்

நிகழ்ச்சியில் அமீர்

``பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறைகொண்ட நபர் கிடையாது" என்று திரைப்பட இயக்குநர் அமீர், கரூரில் விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

Published:Updated:

``அண்ணாமலைக்கு தமிழ் மீதும், தமிழர் மீதும் அக்கறை கிடையாது" - இயக்குநர் அமீர் காட்டம்

``பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறைகொண்ட நபர் கிடையாது" என்று திரைப்பட இயக்குநர் அமீர், கரூரில் விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

நிகழ்ச்சியில் அமீர்

கரூர் மாவட்டம், பள்ளபட்டியில் `ஃப்ரெண்ட்ஸ் பெடரேஷன்’ என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பின் சார்பில், பள்ளபட்டி நகரில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக, 100 சிசிடிவி கேமராக்கள் அர்ப்பணிக்கும் நிகழ்வு, அங்குள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரவி, திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமீர்
நிகழ்ச்சியில் அமீர்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குநர் அமீர், "நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மாற்றம் வேண்டும் என்பதற்காக நடந்திருக்கிறது. இந்தத் தேர்தலும் சாதாரண பொதுத்தேர்தல்போல மாறிவிட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து வெறுப்பு பேச்சுகளைப் பேசுபவர்கள்மீது அரசு வழக்கு தொடர வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.

குறிப்பிட்ட சமூகத்தினர்மீது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தவறான கருத்துகளைப் பலரும் பேசிவருகின்றனர். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. தேசியக் கட்சியின் ஆதரவோடு சிலர் தவறான கருத்துகளை பேசிவருகின்றனர். இத்தகைய செயலைத்தான் பாசிசம் என்று குறிப்பிட்டேன். பா.ஜ.க தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழர்கள்மீது அக்கறை கொண்ட தலைவர் கிடையாது. ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டு, சொத்துப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அவர் எந்தக் காலத்திலும் தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறைகொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை. புர்கா, பர்ஹானா போன்ற திரைப்படங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். எல்லாப் படங்களுக்கும் தடை கேட்டுக்கொண்டே இருக்க முடியாது" என்றார்.