Published:Updated:

110 விதியின்கீழ் அ.தி.மு.க அறிவித்த 1,704 அறிவிப்புகள் என்னவாகின?

ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா

மாநில வளர்ச்சியின் அடிப்படையில் மக்கள்நலன் சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிடுவது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிற விஷயம்.

110 விதியின்கீழ் அ.தி.மு.க அறிவித்த 1,704 அறிவிப்புகள் என்னவாகின?

மாநில வளர்ச்சியின் அடிப்படையில் மக்கள்நலன் சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிடுவது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிற விஷயம்.

Published:Updated:
ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா

கடந்த 2011-12 நிதியாண்டு தொடங்கி 2020-21 நிதியாண்டு வரையிலான 10 ஆண்டுகளில், அ.தி.மு.க முதல்வர்களால், 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்து, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பல தகவல்களை வெளியிட்டு, கேள்விகளை முன்வைத்திருக்கிறார். இரண்டு கட்சி வட்டாரங்களிலும் இந்தப் பிரச்னைதான் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது!

110 விதி என்றால் என்ன?

பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்னைக்கு, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அதைப் பேரவை விதி 110-ன்கீழ் அறிவிப்பாக வெளியிடலாம். இந்த அறிவிப்பின் மீது எந்தவொரு விவாதமும் நடைபெறாமல் அமல்படுத்தப்படும். 110 விதி என்பது இதுதான்.

அவசரத் திட்டங்களுக்காக மட்டுமே பேரவையில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த 110 விதியின்கீழ், தினமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதை நடைமுறைக்குக் கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்தச் சமயத்தில், ``விவாதமின்றி திட்டங்களை அறிவிக்க தினமும் 110 விதியைப் பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது’’ என்று காட்டமாக விமர்சனம் செய்தது தி.மு.க. ``110 விதியை தினமும் பயன்படுத்தினால் அது 420 ஆகிவிடும்’’ -அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்துச் சொன்ன வார்த்தைகள் இவை.

110 விதியின்கீழ் அ.தி.மு.க அறிவித்த 1,704 அறிவிப்புகள் என்னவாகின?

1,704 திட்டங்கள்... 3.27 லட்சம் கோடி மதிப்பு!

கடந்த பத்து ஆண்டுகளில் 110 விதியின்கீழ் 1,704 அறிவிப்புகளை அ.தி.மு.க ஆட்சியாளர்கள் வெளியிட்டிருப்பதாக பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார். ``வெளியிடப்பட்ட மொத்த அறிவிப்புகளின் மதிப்பு ரூபாய் 3.27 லட்சம் கோடி. இதில், 87,405 கோடி ரூபாய் மதிப்பிலான 1,167 அறிவிப்புகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக் கின்றன. மீதமிருக்கும் 2.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 537 அறிவிப்புகள் நிலுவையில் இருக்கின்றன. நிலுவையிலுள்ள 537 அறிவிப்புகளில், 5,470 கோடி ரூபாய் மதிப்பிலான 26 அறிவிப்புகள் செயல்படுத்த இயலாதவை எனக் கைவிடப்பட்டுள்ளன. இவற்றில் 19 அறிவிப்புகள் 2011 முதல் 2016 வரையிலான ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டவை’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

``ரூ. 9,741 கோடி மதிப்பிலான 20 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 491 அறிவிப்புகளுக்கு அரசாணையும் அனுமதியும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 76,619 கோடி ரூபாய் மதிப்பிலான 143 அறிவிப்புகளுக்கு, அரசாணை, அனுமதி வழங்கப்பட்டு, நிதி விடுவிக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. கடந்த ஆட்சியில் கைவிடப்பட்ட 26 அறிவிப்புகளைத் தவிர, ஏனைய நிலுவையிலுள்ள 511 அறிவிப்புகளுக்கான 2.34 லட்சம் கோடி ரூபாயில், 45,251 கோடி ரூபாய் நிதி மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கிறது’’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

110 விதியின்கீழ் அ.தி.மு.க அறிவித்த 1,704 அறிவிப்புகள் என்னவாகின?

அ.தி.மு.க அரசு 110 விதியின்கீழ் அறிவித்த திட்டங்களில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் வசதி கொண்டுவரப்படும், தமிழ்நாட்டில் ஏழு புதிய அரசுக் கலைக் கல்லூரிகள் நிறுவப்படும், கூடுதலாகக் குடிநீர் வசதி தேவைப்படும் 2,448 அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும், மாநிலத்திலுள்ள திறமையான விளையாட்டு வீரர்கள் சர்வதேசப் பதக்கங்களை வெல்வதற்கு ஏதுவாகச் செயல்திறன் அகாடமிகள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன.

110 விதியின்கீழ் அ.தி.மு.க அறிவித்த 1,704 அறிவிப்புகள் என்னவாகின?

``அம்மாவின் வழியைத்தான் பின்பற்றுகிறது திமுக!’’

இது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்டோம். ``மாநில வளர்ச்சியின் அடிப்படையில் மக்கள்நலன் சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிடுவது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிற விஷயம். ஓர் அறிவிப்பை வெளியிட்டவுடன், அதற்கான பணிகள் தொடங்கும். அந்தத் திட்டத்துக்கான டெண்டர் விடுவது, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது, இந்திய அரசு சம்பந்தப்பட்டிருந்தால் அதற்கான அனுமதி பெறுவது எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு திட்டத்தை அறிவித்த அடுத்த நாளே, அதை நடைமுறைப்படுத்த முடியாது. திட்டம் வகுப்பது, அனுமதிகள் பெறுவது என அனைத்துக்கும் கால அவகாசம் தேவைப்படும்.

எங்கள் ஆட்சியில், திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான அறிவிப்பு 110 விதியின்கீழ்தான் வெளியிட்டோம். ரூ.250 கோடியில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, தற்போது டுனா மீன்பிடித் துறைமுகம் அங்கு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதுபோல நாங்கள் அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் இப்போதும் நடந்துகொண்டிருக்கின்றன’’ என்றவரிடம் சில திட்டங்கள் கைவிடப்பட்டது குறித்துக் கேட்டோம்.

110 விதியின்கீழ் அ.தி.மு.க அறிவித்த 1,704 அறிவிப்புகள் என்னவாகின?

``அறிவித்துவிட்டாலும்கூட, ஆய்வின்போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் இருந்த வெகுசில திட்டங்களை மட்டுமே கைவிட்டிருக்கிறோம். நாங்கள் வெளியிட்ட அறிவிப்புகளில், 95% திட்டங்களுக்கான பணிகள் இப்போதும் நடந்துகொண்டிருக்கின்றன, பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. மக்கள்நலத் திட்டங்களைச் செய்ததற்காக எங்களைப் பாராட்டாமல், விடுபட்ட சில விஷயங்களை மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து எங்களைக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எங்கள் மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. சொல்லப்போனால், 110 விதியின்கீழ் பிரத்யேக மக்கள்நலத் திட்டங்களை அறிவிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியதே ஜெயலலிதா அம்மாதான். அன்றைக்கு 110 விதியை நாங்கள் பயன்படுத்தியதைக் கடுமையாக விமர்சித்த தி.மு.க., இன்று பேரவையில் அதைத்தான் தினமும் செய்தது. அப்படியென்றால், அம்மாவின் வழியை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்றுதானே அர்த்தம்!’’ என்று முடித்துக்கொண்டார்.