Published:Updated:

ஒன் பை டூ: அ.தி.மு.க விரைவில் தி.மு.க-வில் சங்கமம் ஆகிவிடுமா?

பரந்தாமன், கோவை செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
பரந்தாமன், கோவை செல்வராஜ்

“அ.தி.மு.க விரைவில் தி.மு.க-வில் சங்கமம் ஆகிவிடும்” என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி! என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

ஒன் பை டூ: அ.தி.மு.க விரைவில் தி.மு.க-வில் சங்கமம் ஆகிவிடுமா?

“அ.தி.மு.க விரைவில் தி.மு.க-வில் சங்கமம் ஆகிவிடும்” என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி! என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

Published:Updated:
பரந்தாமன், கோவை செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
பரந்தாமன், கோவை செல்வராஜ்

பரந்தாமன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.

``ஆமாம். மிகவும் சரியான கருத்து இது. அ.தி.மு.க கடந்த காலங்களிலும் இது போன்ற தேர்தல் தோல்விகளை சந்தித்திருக்கிறதுதான்... ஆனால், அப்போதெல்லாம் இப்படியான கருத்துகள் எழவில்லை. காரணம், அன்றைக்குக் கட்சி ஜெயலலிதா தலைமையில் கட்டுக்கோப்பாக இருந்தது. ஆனால், இப்போது சூழல் அப்படியல்ல. சரியான தலைமை இல்லாமல் தொண்டர்கள் கையறு நிலையில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் சென்றால், பன்னீர்செல்வம் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ என்றும், பன்னீரிடம் சென்றால் எடப்பாடி ஏதாவது நினைத்துக்கொள்வாரா என்றும் நிர்வாகிகள் குழப்பத்திலேயே இருக்கிறார்கள். பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்ததால் அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதுடன், கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தல்தான் அடிமட்ட நிர்வாகிகளுக்கான களம். ஆனால், மேல்மட்டத் தலைவர்கள், அடிமட்ட நிர்வாகிகளை வெற்றிபெறச் செய்வதில் போதிய கவனம் செலுத்தவில்லை. தலைமை நம்மைக் கைவிடாது என்கிற நம்பிக்கையை அ.தி.மு.க தொண்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறார்கள். அதனால், இயல்பாகவே அவர்கள் தி.மு.க-வை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். காலப்போக்கில் அ.தி.மு.க-வினர் எங்களுடன் சங்கமம் ஆகிவிடுவார்கள் என்பதுதான் உண்மை!’’

ஒன் பை டூ: அ.தி.மு.க விரைவில் தி.மு.க-வில் சங்கமம் ஆகிவிடுமா?
ஒன் பை டூ: அ.தி.மு.க விரைவில் தி.மு.க-வில் சங்கமம் ஆகிவிடுமா?

கோவை செல்வராஜ், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க.

``மிகவும் அபத்தமான கருத்து இது. 1996 சட்டமன்றத் தேர்தலின்போதும் ‘அ.தி.மு.க என்கிற கட்சி இனிமேல் இருக்காது’ என்று இதே போன்றுதான் பேசினார்கள். ஆனால், 2001-லேயே மக்கள் செல்வாக்குடன் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது அ.தி.மு.க. 2011-ல் தி.மு.க எதிர்க்கட்சியாகக்கூட வர முடியாத அளவுக்கு அந்தக் கட்சியின் வெற்றியைக் கட்டுப்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா. எப்போதுமே அடுத்த கட்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெறுவதுதான் தி.மு.க-வின் பாணி. முறையாக மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வர எப்போதுமே அவர்களால் முடியாது. ஸ்டாலின் மட்டுமல்ல... அவரின் தந்தை கருணாநிதியையே பார்த்த கட்சி இது. அவரை அரசியல் வனவாசத்துக்கு அனுப்பிய கட்சியும் இதுதான் என்பதை தி.மு.க ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். இமயமலைபோல எழுந்து நிற்கிற அ.தி.மு.க-வை இவர்களால் மட்டுமல்ல... யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. இருக்கின்ற துறைகளிலேயே டம்மியான துறை ஒதுக்கப்பட்டுள்ளதால், இது போன்று பேசி ஸ்டாலின் மனதைக் குளிர்வித்து நல்ல துறையைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார் ஐ.பெரியசாமி. எங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு, அவரது துறைசார்ந்து மக்களுக்குக் கொடுத்த கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற அவர் கவனம் செலுத்த வேண்டும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism