Published:Updated:

உச்சகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்... ராகுலா வேறொருவரா?

ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி தலைவர் தேர்தலுக்குப் போட்டி யிடாதபட்சத்தில் வேறு சில மூத்த தலைவர்கள் போட்டியிடலாம் எனச் சொல்லப்படுகிறது.

உச்சகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்... ராகுலா வேறொருவரா?

ராகுல் காந்தி தலைவர் தேர்தலுக்குப் போட்டி யிடாதபட்சத்தில் வேறு சில மூத்த தலைவர்கள் போட்டியிடலாம் எனச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் `பாரத் ஜோடோ யாத்திரை’ ஒருபுறம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, தலைவருக்கான தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. அக்டோபர் 17-ல் நடக்கவிருக்கும் உட்கட்சித் தேர்தலுக்கு, செப்டம்பர் 24-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. `ராகுல் காந்திதான் தலைவராக வேண்டும்’ எனப் பெரும்பாலான காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கூறிவரும் நிலையில், சசி தரூர், அசோக் கெலாட் உள்ளிட்டோர் தலைவருக்கான போட்டியில் இறங்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

ஆசையில் சசி தரூர்... தயக்கத்தில் அசோக் கெலாட்!

2000-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜிதின் பிரசாதாவைத் தோற்கடித்து காங்கிரஸ் தலைவரானார் சோனியா காந்தி. அதன் பிறகு, 21 ஆண்டுகள் கழித்து, இப்போதுதான் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 21 ஆண்டுகளில் 2017 முதல் 2019 வரை காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றினார் ராகுல் காந்தி. 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்ற அவர் பதவி விலகவே, இடைக் காலத் தலைவரானார் சோனியா. 2020-ம் ஆண்டு, தலைமைமீது அதிருப்திகொண்ட 23 தலைவர்கள் இணைந்து ஜி-23 குழுவை உருவாக்கினர். `தேர்தல் நடத்தி முழுநேரத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை இந்தக் குழு முன்வைத்தது. இதையடுத்து, பல காரணங்களால் தள்ளிப்போன உட்கட்சித் தேர்தல், அக்டோபர் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதே, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார் எனப் பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில், செப்டம்பர் 19-ம் தேதி டெல்லிக்குச் சென்று சோனியாவைச் சந்தித்தார் சசி தரூர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, சோனியாவிடம் தேர்தலில் போட்டியிட சசி தரூர் கோரியதாகவும், அதற்கு சோனியா ஒப்பு தல் அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. மறுபுறம், இந்திரா, ராஜீவ் காலத்திலிருந்து தற்போதுவரை நேரு குடும்பத்துக்கு விசுவாசியாக இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ் தான் முதல்வருமான அசோக் கெலாட்டின் பெயரும் தலைவர் ரேஸில் அடிபடுகிறது. `ராகுல் தான் தலைவராக வேண்டும்’ எனத் தொடர்ந்து பேசிவரும் கெலாட்டுக்கு இதில் விருப்பமிருப்ப தாகத் தெரியவில்லை. ராகுல், சோனியாவின் வற்புறுத்தலின் பெயரிலேயே தலைவர் தேர்தலில் அவர் போட்டியிடவிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.

உச்சகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்... ராகுலா வேறொருவரா?

தலைமையின் கணக்கு

``தலைவர் தேர்தலில் கெலாட் வெற்றிபெற்றால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, டெல்லிக்கு வர நேரிடும். ஏற்கெனவே, ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவிவருகிறது. இந்தச் சூழலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், அது சச்சின் பைலட்டுக்குச் சாதகமாக முடியும். அதன் பிறகு ராஜஸ்தான் அரசியலில் தனக்கென எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான், தலைவர் பதவிக்குப் போட்டியிட கெலாட் தயங்குவதாகத் தெரிகிறது’’ என்கின்றனர் காங்கிரஸ் கட்சியின் நகர்வுகளைக் கூர்ந்து கவனிப்பவர்கள்.

மேலும், ``நேரு குடும்பத்தைப் பொறுத்தவரை, தங்களது தீவிர விசுவாசியான அசோக் கெலாட் தலைவரானால், கட்சி தங்களது கட்டுப்பாட் டுக்குள் இருக்கும் என்பதால் அவரை முன்னிறுத்த நினைக்கலாம். அதோடு, கெலாட் டெல்லிக்கு வந்துவிட்டால் ராஜஸ்தான் காங்கிரஸில் இருக்கும் உட்கட்சிப்பூசல்களும் முடிவுக்கு வரும் என்பதையும் காந்தி குடும்பத்தினர் யோசித்திருக்கலாம்’’ என்றும் சொல்கின்றனர்.

ராகுல் காந்தி தலைவர் தேர்தலுக்குப் போட்டி யிடாதபட்சத்தில் வேறு சில மூத்த தலைவர்கள் போட்டியிடலாம் எனச் சொல்லப்படுகிறது. ராஜ்ய சபா எம்.பி கே.சி.வேணுகோபால், சத்தீஸ் கர் முதல்வர் பூபேஷ் பாகல், பட்டியலினத் தலைவர்களான முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.

சசி தரூர் - அசோக் கெலாட்
சசி தரூர் - அசோக் கெலாட்

கட்சி ஒற்றுமை முக்கியம்!

மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ``வேட்பு மனுவை டெல்லிக்கு நேரடியாக வந்து மட்டுமே தாக்கல் செய்ய முடியும். ஆனால், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை (செப். 30 வரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்) ராகுல் டெல்லி வரமாட்டார்’’ என்று தெரிவித் திருக்கிறார். இதன் மூலம் தலைவர் தேர்தலில் ராகுல் போட்டியிடமாட்டார் என்றே தெரிகிறது. ஆனால் தொண்டர்களின் மனநிலை வேறாக இருக்கிறது. ``வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்தியர்களை ஒன்றிணைத்த ஒரே பேரியக்கம் காங்கிரஸ் மட்டுமே. இந்த இயக்கத்துக்கு நேரு குடும்பத்திலிருந்து ஒருவர் தான் தலைவராக வேண்டும். அந்தக் குடும்பத்துக்கு வெளியிலிருந்து ஒரு தலைவர் வந்தால், அவர் ஏதோவொரு சார்பு நிலையை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அது கட்சிக்குச் சிக்கலை உண்டாக்கும். எத்தனையோ காலம் கட்சியிலிருந்த மூத்த தலைவர்களே காங்கிரஸுக்கு நேரெதிர் கொள்கைகொண்ட பா.ஜ.க -வுடன் சமரசம் செய்துகொண்டு, அங்கே சென்றுவிடுகின்றனர். அப்படி யிருக்கையில், நேரு குடும்பத்திலிருந்து ஒரு தலைவர் வந்தால் மட்டுமே, கட்சி ஒற்றுமையாக இருக்கும். தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும்போது, மக்கள் மத்தியிலும், கட்சியினர் மத்தியிலும் செல்வாக்கு பெற்றிருக்கும் ராகுல்தான் தலைவராக வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்து நிற்க இளம் சக்தியான ராகுலால் மட்டுமே முடியும்’’ என்கின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

1996-லிருந்து 1998 வரை காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரிதான், நேரு குடும்பத்தைச் சாராத கடைசித் தலைவர். அவருக்குப் பின்னர், மீண்டும் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவாரா... அல்லது ராகுலே தலைமைப் பொறுப்பை ஏற்பாரா என்பதை இப்போதே கணிக்க முடியாது.

அதே நேரம், அக்டோபர் 19-ம் தேதி காங்கிரசுக்கு ஒரு தலைவர் கிடைத்துவிடுவார் என்பது மட்டும் நிச்சயம்!