Published:Updated:

ஒன் பை டூ

ரவி, பரந்தாமன்
பிரீமியம் ஸ்டோரி
ரவி, பரந்தாமன்

‘செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் இந்த அரசு செயல்படுகிறது!’ என்ற இ.பி.எஸ் குற்றச்சாட்டு!

ஒன் பை டூ

‘செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் இந்த அரசு செயல்படுகிறது!’ என்ற இ.பி.எஸ் குற்றச்சாட்டு!

Published:Updated:
ரவி, பரந்தாமன்
பிரீமியம் ஸ்டோரி
ரவி, பரந்தாமன்

ரவி, அரக்கோணம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க.

“மிகச்சரியான குற்றச்சாட்டு. ஆன்லைன் சூதாட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள், தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதற்காகத்தான் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தை நீதிமன்றம் ரத்துசெய்தது. தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் இவர்களுக்கும் கூட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஜி-ஸ்கொயர் என்ற நிறுவனத்தின் மூலம் முதல்வரின் குடும்பம் தமிழ்நாடு முழுவதுமுள்ள நிலங்களை ஆக்கிரமிக்கும் வேலைகளைச் செய்துவருகிறது. அவர்களின் கறுப்புப் பணத்தை மாற்ற அந்த நிறுவனத்தைப் பயன்படுத்திவருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு நிலைகுலைந்து காணப்படுகிறது. கஞ்சா முதல் அனைத்து போதைப்பொருள்களும் தங்குதடையில்லாமல் கிடைக்கின்றன. வேலூர் பகுதியில் சட்டவிரோத மணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த ஒரு வருடத்திலேயே மக்கள் தி.மு.க-வை மொத்தமாக வெறுத்துவிட்டார்கள். ஆட்சி அதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க வரலாறு காணாத வெற்றிபெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது!”

ரவி, பரந்தாமன்
ரவி, பரந்தாமன்

பரந்தாமன், எழும்பூர் எம்.எல்.ஏ., தி.மு.க

“பச்சையாகப் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் பழனிசாமி. அவர்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் கூட்டு இருந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான், நீதிமன்றத்தில் எளிதில் நீர்த்துப்போகக்கூடிய ஒரு சட்டத்தை இயற்றினார்கள். அவர்கள் தவறு செய்துவிட்டு எங்கள்மீது குற்றம் சுமத்துகிறார்கள். தற்போது ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கு உறுதியான சட்டத்தை இயற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. சட்டம்- ஒழுங்கு குறித்து மற்றவர்களிடம் கேள்வி கேட்பதற்கு முன்பாக, இ.பி.எஸ் தன்னைக் கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் முன்னாள் முதல்வரின் பங்களாவிலேயே கொலை நடந்தது. இரட்டைத் தலைமை என்ற பெயரில் சரியான தலைமையே இல்லாத கட்சியாக இருந்துகொண்டு, அவர்கள் எங்களைக் குறைசொல்வது வேடிக்கையாக இருக்கிறது. பத்து ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் கஞ்சா முதல் அனைத்து போதைப்பொருள்களையும் தமிழ்நாட்டில் புரையோடவிட்டது அவர்கள்தான். அ.தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், தற்போது நாங்கள் ஓராண்டில் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை நிலவரம் தெரியவரும். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மக்களின் முழு ஆதரவு எங்களுக்குக் கிடைக்கும்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism