Published:Updated:

ஒன் பை டூ: அ.தி.மு.க-வில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லையா?

கண்ணதாசன், வைகைச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணதாசன், வைகைச்செல்வன்

எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது உண்மைதான். அ.தி.மு.க-வில் குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடம் கிடையாது.

ஒன் பை டூ: அ.தி.மு.க-வில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லையா?

எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது உண்மைதான். அ.தி.மு.க-வில் குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடம் கிடையாது.

Published:Updated:
கண்ணதாசன், வைகைச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணதாசன், வைகைச்செல்வன்

“அ.தி.மு.க-வில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் தேடிவரும். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.” - சமீபத்தில் எடப்பாடி உதிர்த்த முத்துகள் இவை. உண்மைதானா?

வழக்கறிஞர் கண்ணதாசன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``இவர்கள் காமெடி செய்வதற்கு அளவே இல்லையா... முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம் தொடங்கி ஜெயக்குமார் வரை அ.தி.மு.க-வின் எத்தனை மூத்த உறுப்பினர்களின் மகன்கள் பதவியில் இருந்திருக்கிறார்கள், இருக் கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதே போல அ.தி.மு.க-வில் யார் வேண்டுமென்றாலும் தலைமைப் பதவிக்கு வரலாம் என்பதெல்லாம் தொண்டர்களின் காதில் பூ சுற்றும் வேலை. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கட்சியில் அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கட்டம் கட்டிவருவது அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் கிடையாது... அதேசமயம், வாரிசுகள் அரசியலுக்கு வருவது தவறொன்றும் கிடையாது. வாரிசு அரசியல் விமர்சனத்தையே மக்கள் நிராகரித்துவிட்டார்கள். தி.மு.க ஆட்சியில் இருப்பதும், சென்னையில் உதயநிதி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும் அதன் வெளிப்பாடுதான். வாரிசுகள் பதவிக்கும் அதிகாரத்துக்கும் வந்து மக்களுக்குச் சேவை செய்கிறார்களா அல்லது தவறு செய்கிறார்களா என்பதுதான் முக்கியம்.’’

ஒன் பை டூ: அ.தி.மு.க-வில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லையா?
ஒன் பை டூ: அ.தி.மு.க-வில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லையா?

வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

``எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது உண்மைதான். அ.தி.மு.க-வில் குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடம் கிடையாது. எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி... அம்மா காலத்திலும் சரி... அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. இந்திய அரசியலில் அ.தி.மு.க-வில் மட்டும்தான் சாமானிய தொண்டர்கள் இருவர் முதல்வராகியிருக்கிறார்கள் என்பது வரலாறு. கட்சிக்கு உண்மையாக உழைத்த தொண்டனை அமைச்சராக்கி, அழகு பார்த்த இயக்கம் அ.தி.மு.க என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. தி.மு.க-வைப் பொறுத்தவரை முதலில் கருணாநிதி... பிறகு அவரின் மகன் ஸ்டாலின் என்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். உதயநிதிக்கும் விரைவில் பட்டாபிஷேகம் செய்யப்போகிறார்கள். அதனால்தான் துரைமுருகன் தொடங்கி எ.வ.வேலு வரை மூத்த அமைச்சர்களே உதயநிதியைப் போற்றிப் புகழ்ந்து, அன்றாடம் துதிபாடி வருகிறார்கள். முதல்வரின் அதிகாரம்கூட குடும்ப உறுப்பினர்களுக்குப் பங்கு போட்டு அளிக்கப்படுகிறது. அந்த உறவினர்கள் ஆக்டோபஸ்போல ஆட்சியை, நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கிறார்கள். தி.மு.க-வில் சாமானிய தொண்டர் ஒருவர்கூட அதிகாரத்துக்கு வர முடியாது. ஆனால், சாமானியர்களும், ஏழை எளிய உறுப்பினர்களும்கூட முதலமைச்சர் பதவிக்கு வர முடியும் என்று நிரூபித்த மக்கள் இயக்கம் அ.தி.மு.க.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism