Published:Updated:

ஒன் பை டூ: “துரோகத்தின் அடையாளம் ஓ.பி.எஸ்!” என்ற ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு?

ஆதிராஜாராம், கோவை செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
ஆதிராஜாராம், கோவை செல்வராஜ்

முற்றிலும் தவறான கருத்து. பெரியவீரனுக்கு சீட் வாங்கிக்கொடுத்து, ஜெயிக்கவைத்தது ஓ.பி.எஸ்-தான்.

ஒன் பை டூ: “துரோகத்தின் அடையாளம் ஓ.பி.எஸ்!” என்ற ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு?

முற்றிலும் தவறான கருத்து. பெரியவீரனுக்கு சீட் வாங்கிக்கொடுத்து, ஜெயிக்கவைத்தது ஓ.பி.எஸ்-தான்.

Published:Updated:
ஆதிராஜாராம், கோவை செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
ஆதிராஜாராம், கோவை செல்வராஜ்

ஆதிராஜாராம், அ.தி.மு.க தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் (இ.பி.எஸ் ஆதரவாளர்)

“முற்றிலும் உண்மையான கருத்து. துரோகம் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே ஓ.பன்னீர்செல்வம்தான். ஆரம்பகாலத்தில் தன்னை வளர்த்துவிட்ட ஆண்டிபட்டி எம்.எல்.ஏ பெரியவீரனை அட்ரஸ் இல்லாமல் செய்தது துரோகம். அம்மா இறந்த பிறகு, முதல்வராக இருந்த காலம் வரை... அவரது மரணத்தில் சந்தேகப்படாமல் இருந்துவிட்டு, முதல்வர் பதவி போனதும், சாவில் மர்மம் இருப்பதாகச் சொன்னது, அம்மாவின் சாவையே கொச்சைப்படுத்திய துரோகம். எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், 11 எம்.எல்.ஏ-க்கள் எதிர்த்து வாக்களித்தது அம்மாவின் ஆட்சிக்குச் செய்த துரோகம். தனது மாவட்டக் கழகம் மூலமே, ‘சசிகலாவை எந்த நிபந்தனையுமின்றி கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும்’ என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றவைத்தது துரோகம். ‘தி.மு.க எதிரி’ என்ற எண்ணத்தில்தான் இந்தக் கட்சியே உருவானது. அந்த எண்ணத்துக்கு எதிராகச் செயல்படும் வகையில், சட்டமன்றத்தில் தி.மு.க-வுக்கு ஜால்ரா அடித்தது பெரிய துரோகம். ஸ்டாலினை நேரில் சந்தித்துவிட்டு, ‘முதல்வர் ஸ்டாலின் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகிறார்’ என்று பேசிய தன் மகன்மீது நடவடிக்கை எடுக்காதது துரோகம். கட்சியில் நிர்வாகிகளின், தொண்டர்களின் ஆதரவு இல்லாத நிலையில், யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் இயக்கத்தைச் சிதைக்க, இரட்டை இலையை முடக்க, நீதிமன்றங்களை நாடிக்கொண்டிருப்பது எல்லாவற்றையும்விட மிகப்பெரிய துரோகம்!”

ஒன் பை டூ: “துரோகத்தின் அடையாளம் ஓ.பி.எஸ்!” என்ற ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு?
ஒன் பை டூ: “துரோகத்தின் அடையாளம் ஓ.பி.எஸ்!” என்ற ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு?

கோவை செல்வராஜ், அ.தி.மு.க, செய்தித் தொடர்பாளர் (ஓ.பி.எஸ் ஆதரவாளர்)

“முற்றிலும் தவறான கருத்து. பெரியவீரனுக்கு சீட் வாங்கிக்கொடுத்து, ஜெயிக்கவைத்தது ஓ.பி.எஸ்-தான். அம்மாவின் சாவில் மர்மம் இருப்பதாகக் கருதிய தொண்டர்கள், பொதுமக்களின் எண்ணத்தை மட்டுமே பிரதிபலித்து தர்மயுத்தம் தொடங்கினாரே தவிர, பதவி பிடுங்கப்பட்டதால் அல்ல. 18 எம்.எல்.ஏ-க்கள் தினகரன் பக்கம் தாவியபோது, தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், அரசுக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்ததால்தான் நான்காண்டு ஆட்சியே நிலைபெற்றது. சசிகலாவுக்கு ஆதரவாக மாவட்டக் கழகம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கும், ஓ.பி.எஸ்-க்கும் எந்தத் தொடர்புமில்லை. 1972-க்கு முன்னர் எல்லோருமே தி.மு.க-வில்தான் இருந்தனர். அந்தச் சமயம் நடந்த நிகழ்வு குறித்து, அவரின் தந்தை பற்றி இயல்பாகத்தான் சட்டமன்றத்தில் பேசினாரே தவிர, ஒருபோதும் தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசியதில்லை. தலைமைச் செயலகத்தில் நடந்த ‘வளர்ச்சி மன்ற’க் கூட்டத்தில் பங்கேற்ற ரவீந்திரநாத்தை, ‘காபி சாப்பிட வாருங்கள்’ என்று முதல்வர் அழைத்ததால் மறுக்க முடியாமல் சென்றார். அப்போதும் மாவட்டப் பிரச்னைகள் குறித்த மனுவைக் கொடுத்தாரே தவிர, ஸ்டாலினைப் பாராட்டிப் பேசவில்லை. அண்ணன் ஓ.பி.எஸ்., தொண்டர்களின் ஒத்துழைப்போடு கட்சியைக் காப்பாற்றத்தான் நீதிமன்றம் சென்றிருக்கிறார். நிர்வாகிகளை வளைத்து, தற்போது கட்சியைவிட்டே ஓ.பி.எஸ்-ஸை வெளியேற்ற நினைக்கும் எடப்பாடியும், அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் நிர்வாகிகளும் செய்வதுதான் மிகப்பெரிய துரோகம்!”