Published:Updated:

ஒன் பை டூ

தேவநேயன், கண்ணதாசன்
பிரீமியம் ஸ்டோரி
தேவநேயன், கண்ணதாசன்

‘ஆசிரியர்களுக்கு உடல், மன ரீதியாக தொந்தரவு தரும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்!’ - எனும் அமைச்சர் அன்பில் மகேஸின் எச்சரிக்கை சரியானதா?

ஒன் பை டூ

‘ஆசிரியர்களுக்கு உடல், மன ரீதியாக தொந்தரவு தரும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்!’ - எனும் அமைச்சர் அன்பில் மகேஸின் எச்சரிக்கை சரியானதா?

Published:Updated:
தேவநேயன், கண்ணதாசன்
பிரீமியம் ஸ்டோரி
தேவநேயன், கண்ணதாசன்

தேவநேயன், குழந்தைகள்நலச் செயற்பாட்டாளர்

``உணர்ச்சிவசத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே நான் இதைப் பார்க்கிறேன். குழந்தைகள் குற்றவாளிகள் அல்லர். சமூகத்தில் நடக்கும் விஷயங்களிலிருந்து கற்றுக்கொண்டதைத்தான் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை நெறிப்படுத்துவதற்கான வேலைகளைத்தான் நாம் முன்னெடுக்க வேண்டுமே தவிர, இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது.

இளம் சிறார் நீதிச் சட்டம்தான் குழந்தைகள் நலனில் மிக முக்கியமான சட்டம். 18-வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை குற்றவாளிகளாக்கக் கூடாது என்று அந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. காரணம், குழந்தைகளைச் சிறு வயதிலேயே குற்றவாளிகளாக்கிவிட்டால், அந்த வடு அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

அதிலிருந்து அவர்கள் மீண்டுவருவது கடினம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், ‘தவறு செய்யும் குழந்தைகளுக்கு டி.சி கொடுப்போம், நன்னடத்தைச் சான்றிதழ்களில் அதைக் குறிப்பிடுவோம்’ என்று அமைச்சரே சட்டமன்றத்தில் சொல்வது, சட்டத்துக்கு முரணான ஒரு செயல்பாடு. இப்படி நிரந்தரமாக நீக்கப்படும் குழந்தைகள்தாம், குழந்தைத் தொழிலாளர்கள் ஆவார்கள். எதிர்காலத்தில் சட்டத்துக்கு முரணான செயல்களைச் செய்வார்கள். அதனால், அமைச்சர் உடனடியாக இந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.’’

ஒன் பை டூ
ஒன் பை டூ

வழக்கறிஞர் கண்ணதாசன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``வெறும் கல்வி மட்டுமே மாணவர்களுக்கு நல்ல வாழ்க்கையைத் தராது. ஒழுக்கமும், சமூகத்துக்குப் பயன்படக்கூடிய வழிமுறையும் அவர்களுக்குத் தேவை. எனவே அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். குழந்தைகள் உரிமை என்பது எல்லோராலும் மதிக்கக்கூடியதுதான். ஆனால், 16-18 வயதுடையவர்கள் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களைக் குழந்தைகளாகக் கருதக் கூடாது என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிர்பயா வழக்குக்குப் பிறகு உயர் நீதிமன்றத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. தவறு செய்பவர்களைக் குழந்தைகளாகவே பார்க்க வேண்டுமென்றால் சமுதாயத்தை யார் பார்ப்பது... பெரும்பான்மை மக்களின் மனதிலுள்ள விஷயங்களைத்தான் அமைச்சர் கருத்தாக வெளிப்படுத்தி யிருக்கிறார். எந்தப் பெற்றோரும் தங்களின் குழந்தைகள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை விரும்புவதில்லை. அமைச்சர் குறைவான எச்சரிக்கையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார். இதை விமர்சிக்கும், கல்வியாளர்கள், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்கள் இது போன்ற விஷயங்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்... மாணவர்கள் தவறு செய்யக் கூடாது என எச்சரிப்பதற்காகவே அமைச்சர் இப்படிச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் திருந்தி வரும்போது மன்னிக்கும் வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் உருவாக்கிக்கொள்ளலாம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism