Published:Updated:

ஒன் பை டூ: பெட்ரோல், டீசல் விலை உயர்வு... காங்கிரஸ் கட்சிதான் காரணமா?

அஸ்வத்தாமன், கோபண்ணா
பிரீமியம் ஸ்டோரி
அஸ்வத்தாமன், கோபண்ணா

மோடி ஆட்சியில் இதுவரை 540 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன் பை டூ: பெட்ரோல், டீசல் விலை உயர்வு... காங்கிரஸ் கட்சிதான் காரணமா?

மோடி ஆட்சியில் இதுவரை 540 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Published:Updated:
அஸ்வத்தாமன், கோபண்ணா
பிரீமியம் ஸ்டோரி
அஸ்வத்தாமன், கோபண்ணா

“பத்து ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெய் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. அவற்றை மீட்கத் தொடர்ந்து செலவு செய்யவேண்டியுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு மக்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டியிருக்கும். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்” என்று சொல்லியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது சரியா?

அஸ்வத்தாமன், பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர்

``ஆமாம்... அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக காங்கிரஸ் கட்சிதான் விலை உயர்வுக்குக் காரணம். ‘எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகிக்கும் கடன் பத்திரம் என்பது எதிர்காலத்தில் சேர்க்கும் மிகப்பெரிய கடன்’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அப்போதே சொன்னார். அந்தக் கடனை நாங்கள் இப்போது அடைத்துவருகிறோம். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பணவீக்கம் 12 சதவிகிதம் வரை சென்றது. விலைவாசி விண்ணை முட்டியது... உதாரணத்துக்கு வாஜ்பாய் அரசாங்கம் முடியும்போது, சென்னையில் ஒரு தேநீரின் விலை இரண்டு ரூபாய். 2014-ல் காங்கிரஸ் ஆட்சி முடியும்போது அதே தேநீர் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து மக்களுக்குச் சகாயமான விலையில் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறோம். கொரோனா பேரிடர், உக்ரைன் - ரஷ்யா போர் என உலகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுவதால், விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியிருக்கிறது. இந்தச் சூழலிலும் மற்ற நாடுகளைவிட மக்களுக்குக் குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை வழங்கிவருகிறோம். நிதியமைச்சர் சொன்னது மிகவும் சரி!’’

அஸ்வத்தாமன்
அஸ்வத்தாமன்
கோபண்ணா
கோபண்ணா

கோபண்ணா, காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர்

``நிர்வாகம் செய்ய திராணி இல்லாதவர்கள்தான் காங்கிரஸைக் குறை கூறுகிறார்கள்... பா.ஜ.க ஆட்சி அமைத்து எட்டு ஆண்டுகளாக, தான் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டும் எடுத்துவருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோலுக்கான கலால் வரி கூடுதலாக லிட்டருக்கு 18.70 ரூபாயும், டீசலுக்கு 18.34 ரூபாயும் உயர்த்தியிருக்கிறார்கள். அதாவது, டீசலுக்கு 531 சதவிகிதமும், பெட்ரோலுக்கு 203 சதவிகிதமும் கலால் வரி உயர்ந்திருக்கிறது. மக்கள் மீள முடியாத துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 108 டாலராக இருந்தது. அப்போதுகூட மக்கள்மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக, காங்கிரஸ் அரசு 2013-14-ல் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 25 கோடி ரூபாய் மானியம் வழங்கியது. 2014-ம் ஆண்டில் சிலிண்டர் 410 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு ஆயிரம் ரூபாயை எட்டியிருக்கிறது. மோடி ஆட்சியில் இதுவரை 540 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் மறைக்கவே காங்கிரஸ் கட்சிமீது பழியைத் தூக்கிப்போடுகிறார்கள்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism