Published:Updated:

ஒன் பை டூ: “இலங்கையைப்போலத்தான் இந்தியாவின் நிலையும் உள்ளது” என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு?

கரு.நாகராஜன், பீட்டர் அல்போன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கரு.நாகராஜன், பீட்டர் அல்போன்ஸ்

“இலங்கையைப்போலத்தான் இந்தியாவின் நிலையும் உள்ளது” என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு?

ஒன் பை டூ: “இலங்கையைப்போலத்தான் இந்தியாவின் நிலையும் உள்ளது” என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு?

“இலங்கையைப்போலத்தான் இந்தியாவின் நிலையும் உள்ளது” என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு?

Published:Updated:
கரு.நாகராஜன், பீட்டர் அல்போன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கரு.நாகராஜன், பீட்டர் அல்போன்ஸ்

கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“முற்றிலும் தவறான கருத்து. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், ராகுல் காந்தி சொல்வதுபோல இந்தியாவுக்கு இலங்கையைவிட மோசமான நிலை ஏற்பட்டிருக்கும். இப்போது இந்தியாவின் பொருளாதாரம் மூன்று லட்சம் டிரில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளது. உலக அளவில் பொருளாதாரத்தில் நாம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம். சமீபத்திய அறிக்கையின்படி நமது நாடு 31.45 லட்சம் டன் உணவுப்பொருள் உற்பத்தி செய்திருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது. உணவுப்பொருள் தொடங்கி பல்வேறு பொருள்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணங்களை மக்களே புரிந்துகொண்டார்கள். சுகாதாரம், கல்வி தொடங்கி வீடு வரை காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத பல திட்டங்களை அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறோம். மக்கள் பா.ஜ.க ஆட்சிமீது முழு நம்பிக்கை வைத்திருக் கிறார்கள். அதனால்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கிறோம். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் ராகுல் இப்படியெல்லாம் பேசிவருகிறார்!”

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்
பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் மூத்த தலைவர்

“மிக மிகச் சரியானது. இலங்கை நாடாளு மன்றத்தில் பல ஆண்டுகளாக முறையான வாதங்கள் நடக்கவில்லை. சகல அதிகாரமும் தனியொரு மனிதரிடம் இருந்தது. நாடு முழுவதும் இன வெறியும் மத வெறியும் தூண்டிவிடப்பட்டன. மத குருமார்கள் ஆட்சி அதிகாரத்தின் நரம்புகளைக் கையில் வைத்திருந்தார்கள். அதேதான் இந்தியாவிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் பா.ஜ.க அரசு, கல்வியிலிருந்து ஏழைகளை விலக்கிவைப்பது, நிதி மற்றும் நிர்வாகத்திலிருந்து மாநிலங்களை விலக்கி வைப்பது, மத்திய அரசின் மூலதனத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுப்பது, ஏழைகளின் வங்கிச் சேமிப்புகளை குஜராத் முதலாளிகளுக்குத் திறந்துவிடுவது, இயற்கை வளங்களைப் கொள்ளையடிக்கப் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, இதையெல்லாம் மறைப்பதற்கு மத வேஷம் போடுவது போன்றவற்றை மட்டும்தான் இந்த எட்டு ஆண்டுகளில் செய்திருக்கிறார்கள். தற்போதைய, பொருளாதாரக் குறியீடுகள், வேலைவாய்ப்பு பற்றிய புள்ளிவிவரம், தொழில் உற்பத்தி என அனைத்துமே கடந்த 30 ஆண்டுகளைவிட மோசமாகியிருப்பதாக அரசின் புள்ளிவிவரங்களே கூறுகின்றன. இதைத்தான் எங்கள் தலைவர் எடுத்துக்கூறியுள்ளார்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism