Published:Updated:

தலைவன் உருவாகாமல் முதல்வன் உருவாவதில்லை!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

‘கட்சியின் தலைவரே ஆட்சியின் தலைவர்’ என்கிற மெனுவுக்கு மக்கள் பழகிவிட்டார்கள்.

தலைவன் உருவாகாமல் முதல்வன் உருவாவதில்லை!

‘கட்சியின் தலைவரே ஆட்சியின் தலைவர்’ என்கிற மெனுவுக்கு மக்கள் பழகிவிட்டார்கள்.

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி
1920நவம்பர் 30. அன்றைய சென்னை மாகா ணத்தின் முதல் பொதுத்தேர்தல் நடந்த நாள். ஆளுநரின் நிர்வாக சபையின் நிழலாக இருந்த சட்டமன்றம், சுயாட்சி சட்டமன்றமாக மாறிய பிறகு நடந்த அந்தத் தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தபோது அதன் தலைவராக இருந்தவர் தியாகராயர். அவரே பிரீமியராக (முதல்வர்) பதவியேற்பார் என அனைவரும் நினைத்தபோது திடீர் திருப்பம். ‘எனது கட்சி ஆட்சி அமைக்கும். ஆனால், பிரீமியராகப் பொறுப்பேற்க விரும்ப வில்லை’ என்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் தியாகராயர். சுப்பராயலு ரெட்டியார் பிரீமியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அவரே பிரீமியராகவும் ஆனார். நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து நூற்றாண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், தியாகராயரின் சித்தாந்தத்துக்கு தீபம் ஏற்றியிருக்கிறார் ரஜினி.

‘கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர்’ என்கிற ரஜினியின் திட்டம் உன்னதமானதுதான். ஆனால், இது தியாகராயர் காலமல்ல. ‘கட்சியின் தலைவரே ஆட்சியின் தலைவர்’ என்கிற மெனுவுக்கு மக்கள் பழகிவிட்டார்கள். ரஜினி அதை மாற்றி எழுத நினைக்கும்போது அது பகடி செய்யப்படுகிறது. ‘இங்கிலாந்து நாட்டில், கட்சித் தலைவராக இருப்பவர் ஆட்சித் தலைவராக இருக்க மாட்டார்’ என வெலிங்டனுக்கே பாடம் சொன்னார் தியாக ராயர். ஆனால், அவருக்குப் பிறகு தமிழகத்தில் எழுந்த அரசியல் களம் அதைச் சாத்தியமாக்க வில்லை. 45 ஆண்டுகள் தி.மு.க தலைவர், ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிகூட 90 வயதைத் தாண்டியும் ‘முதல்வர் வேட்பாளர்’ போட்டியிலிருந்து விலகவில்லை. அவர் உயிருடன் இருந்த வரை ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டான்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆவதற்கான தகுதியை இழந்த போதும் ஜெயலலிதாவால் முதல்வர் நாற்காலியை விட முடியவில்லை. `தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது தவறு’ என்று உச்ச நீதிமன்றம் ‘குட்டிய’ பிறகு வேறு வழியின்றி பன்னீர்செல்வத்துக்குப் பட்டாபி ஷேகம் செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போனபோதும் அதேதான் நடந்தது.

ரஜினி
ரஜினி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரான சசிகலா, முதல்வ ராகவும் ஆசைப்பட்டபோதுதான் பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம் தொடங்கியது. அடுத்து,

‘ஆட்சிக்கு எடப்பாடி... கட்சிக்கு சசிகலா’ என்ற கூவத்தூரில் எழுதிய அத்தியாயம் அழிந்தே போனது.

சசிகலா சிறைக்குப் போனதும் அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவியே ஒழிக்கப் பட்டது. பன்னீர்செல்வமும் பழனிசாமியும் கட்சியிலும் ஆட்சியிலும் பங்கு போட்டுக் கொண்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘கட்சியிலும் ஆட்சியிலும் ஒருவரே அதிகாரம் செலுத்த வேண்டும். இரட்டைத் தலைமை சரிப் பட்டுவராது’ என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் எம்.ஜி.ஆர். அண்ணா மறைவுக்குப் பிறகு நெடுஞ்செழியன் முதல்வர் ஆக ஆசைப்பட்டார். முடியவில்லை. கருணாநிதி முதல்வர் ஆனார். ‘தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன்’ என்றார் நெடுஞ்செழியன். இரட்டைத்தலைமை சரிப் படாது என்கிற வாதம் வலுத்தது. எம்.ஜி.ஆர் தலையிட்டார்.

“முதலமைச்சராக இருப்பவரே தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும் இருக்க வேண்டும். இரட்டைத்தலைமையால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சீர்குலைந்தது. அந்த நிலை தி.மு.க-வுக்கு வரக் கூடாது” என்றார். தி.மு.க-வில் அதுவரை இருந்த அவைத்தலைவர் பதவி தலைவர் பதவியாக மாற்றப்பட்டது. கருணாநிதி தலைவர் ஆனார். நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக மட்டும் தொடர்ந்தார்.

‘கே’ பிளான்
(காமராஜர் திட்டம்)

காமராஜர் முதலமைச்சராகவும் நேரு பிரதமராகவும் இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்னைகள். ‘மூத்த தலைவர்கள், ஆட்சிப் பணியிலிருந்து விலகி கட்சிப் பணிக்குத் திரும்ப வேண்டும்’ என்கிற ‘கே’ பிளானை (காமராஜர் திட்டம்) கொண்டுவந்த காமராஜர், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி, பக்தவத்சலத்துக்கு வழி விட்டார். காங்கிரஸை மீட்டுருவாக்கம் செய்ய நினைத்த திட்டமே காங்கிரஸைச் சரித்தது.

‘ஆட்சிக்கு ஒருவர், கட்சிக்கு ஒருவர்’ என்கிற ரஜினியின் சித்தாந்தம், தமிழக அரசியல் வரலாற்றுக் கணக்கீடுகளின் அடிப்படையில் அடிபட்டுப்போகிறது. அதை மறுபரிசீலனை செய்வதும் செய்யாததும் ரஜினியின் விருப்பம். அதேசமயம், இரட்டைத் தலைமை சித்தாந்தம் மட்டுமல்ல... தீர்க்கமாக முடிவு எடுக்காதது, களத்தில் இறங்கி வேலை பார்க்காதது, கட்சியின் கட்டமைப்பு மட்டுமன்றி கொள்கை, செயல் திட்டங்களையும்கூட தீர்மானிக்காதது என ரஜினியிடம் பலவீனங்கள் அதிகம்.

முதலில், ரஜினி தன்னை ஒரு தலைவனாகத் தகவமைத்துக்கொள்ளட்டும். தலைவன் உருவாகாமல் முதல்வன் உருவாவதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism