Published:Updated:

ஒன் பை டூ: எனக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டி தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்! - உதயநிதி

கோவை சத்யன், ஐ.பி.செந்தில்குமார்
பிரீமியம் ஸ்டோரி
கோவை சத்யன், ஐ.பி.செந்தில்குமார்

உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு உடன்பிறப்பின் ஆவல். காரணம், கடந்த மூன்று தேர்தல்களில் அவர் ஆற்றிய பணி தி.மு.க வெற்றிக்குப் பெரும் பங்காற்றியது.

ஒன் பை டூ: எனக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டி தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்! - உதயநிதி

உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு உடன்பிறப்பின் ஆவல். காரணம், கடந்த மூன்று தேர்தல்களில் அவர் ஆற்றிய பணி தி.மு.க வெற்றிக்குப் பெரும் பங்காற்றியது.

Published:Updated:
கோவை சத்யன், ஐ.பி.செந்தில்குமார்
பிரீமியம் ஸ்டோரி
கோவை சத்யன், ஐ.பி.செந்தில்குமார்

கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

`` ‘அமைதிப்படை’ படத்தில் அரசியல்வாதி சத்யராஜ் வாழ்த்து கோஷம் எழுப்புகிறவர்களைப் பார்த்து, ``ஏன் சத்தம் போட்டுக்கிட்டே வர்றீங்க... கொஞ்சம் சும்மா இருங்க” என்று சொல்வார். எல்லோரும் அமைதியானதும், “ஏன் கத்துறதை நிறுத்திட்டீங்க... அட நான் அப்படித்தான் சொல்லுவேன்... நீங்கக் கத்தவேண்டியதுதானே...” என்பார். உதயநிதியின் அறிக்கை எனக்கு அந்தக் காட்சியைத்தான் நினைவூட்டுகிறது. தன் பட்டத்து இளவரசனை, மன்னர் ஆக்க வேண்டும் என்று முதல்வர் முடிவெடுத்துவிட்டார். அதனால்தான், ‘சட்டசபையில் தன்னைப் புகழ வேண்டாம்’ என்று சொன்ன முதல்வர், தன் மகனைப் புகழ்ந்து பேச வேண்டாம் என்று சொல்லவில்லை. மற்றவர்கள் துதிபாடுவதை அவரும் ரசித்தார். விரைவில் தமிழ்நாடு முதல்வர் வெளிநாடு பயணம் செல்வார், அப்போது ஆட்சி நிர்வாகம் உதயநிதி கையில் ஒப்படைக்கப்படும். “திறம்படச் செயல்படும் உதயநிதி, மகிழ்ச்சியில் மக்கள், வியப்பில் அதிகாரிகள்” என்ற செய்தி வரும். பிறகு முறைப்படி பட்டாபிஷேகம் நடக்கும். தி.மு.க-வில் மன்னர் ஆட்சியும், குறுநில மன்னர்கள் ஆட்சியும்தான் நடந்துகொண்டிருக்கிறது. அ.தி.மு.க அப்படியில்லை. அடிமட்டத் தொண்டனும் முதல்வர் ஆகலாம் என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை நிரூபித்த இயக்கம். ஒன்றியச் செயலாளரையும் நாடாளுமன்றம் அனுப்பும் இயக்கம்.’’

ஐ.பி.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு உடன்பிறப்பின் ஆவல். காரணம், கடந்த மூன்று தேர்தல்களில் அவர் ஆற்றிய பணி தி.மு.க வெற்றிக்குப் பெரும் பங்காற்றியது. ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும் அவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருப்பதாகத் தொகுதி மக்களே பாராட்டுகிறார்கள். இப்படி, கட்சிப் பொறுப்பையும், மக்கள் பிரதிநிதிக்கான கடமையையும் சிறப்பாகச் செய்யும் தலைமைப் பண்புமிக்க அவர் அமைச்ச ராவதை மக்களும் வரவேற்கவே செய்வார்கள். நான் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள், மக்கள் விருப்பத்தைத் தான் தீர்மானமாக நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பிவைத்தோம். அதற்கு, ``உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். தலைமைக்கு நெருக்கடி தர வேண்டாம்” என்ற உதயநிதியின் கருத்து உயர்ந்துவரும் அவரின் தலைமைப் பண்பையே வெளிப்படுத்துகிறது. அவரின் வேண்டுகோளை ஏற்று நாங்கள் தலைமையின் முடிவுக்காகப் பொறுமையுடன் காத்திருப்போம். மக்கள் எல்லோரும் தி.மு.க ஆட்சியையும், முதல்வரையும் மனதாரப் பாராட்டுகின்றனர். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், அ.தி.மு.க-வினர் தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் நிற்பதால், இவர்களின் விமர்சனங்கள் தி.மு.க-வை எந்த வகையிலும் பாதிக்காது.’’

ஒன் பை டூ: எனக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டி தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்! - உதயநிதி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism